Monday, October 8, 2007

ஞானி கலைஞரை கிண்டல் செய்கிறார்!

விருப்பப்படி இருக்க விடுங்கள்!

‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்’ என்பான் பாரதி. இந்த ‘ஓ பக்க’க் கட்டுரையும் அப்படித்-தான்... பாரதி வழியில் பேசாப் பொரு-ளைப் பேசத் துணியும் ஒரு முயற்சி!

‘எந்த ஒரு சமூகம் தன் குழந்தை-களையும் முதியவர்களையும் பிச்சை எடுக்கவிட்டிருக்கிறதோ, அந்தச் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக்கொண்டு இருக்கிற சமூகம்!’ என்பது அறிஞன் வாக்கு.



இதைச் சற்றே மாற்றியமைத்துச் சொல்வ-தானால், எந்தச் சமூகம் தன் குழந்தைகளையும் முதியவர்களையும் வேலை வாங்கிக்கொண்டு இருக்கிறதோ, அந்தச் சமூகம் ஒரு சுரண்டல் சமூகம்!’ என்பேன் நான்.

குழந்தைகள் செய்ய வேண்டியது எல்லாம், படிப்பதும் விளையாடுவதும் தான். முதியவர்கள்..? இந்தச் சமூகத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் அவர்கள் போதுமான அளவு வேலை செய்து முடித்தாயிற்று. இனி உடலையும் உள்ளத்தையும் வருத்திக்-கொள்ளாமல் ஓய்வெடுப்-பதும்,


மனதுக்குப் பிடித்தமானவற்றை மட்டும் செய்துகொண்டு எஞ்சிய காலத்தை இனிமையான-தாகக் கழிப்பதும்தான் முதியவர்களின் நிஜமான தேவை. அதற்கான சூழலை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது-தான் குடும்பத்தின், சமூகத்தின் கடமை.

அப்படியானால், 84 வயது முதியவர் ஒருவரை அவர் குடும்பமும் நம் சமூகமும் கொடுமைப்படுத்திக்கொண்டு இருப்ப-தைப் பார்த்து, நாம் ஏன் வாய் மூடிச் சகித்துக்கொண்டு இருக்கிறோம்?

கலைஞர் கருணாநிதிதான் அந்த முதியவர்!

அவருடைய சில கருத்துக்களுடனும், அரசியலுடனும், நிர்வாக வழி முறைகளுடனும் எனக்குக் கடுமையான கருத்து வேறுபாடுகள் உண்டுதான். ஆனால், ஒரு மனிதராக அவர் வதைக்கப்படுவதை, வதைபடு-வதைப் பார்த்துக்-கொண்டு இருக்கப் பொறுக்கவில்லை. பொது வாழ்க்கை-யில் பல துறைகளில் மிகுந்த புத்திக்-கூர்மையுடன் செயல்படுவதைத் தன் முத்திரை யாக நிலை நிறுத்திவைத்தி-ருக்கும் அவர் ஏன் ஓய்வுபெற்று, தான் விரும்பியபடி பொழுதைக் கழிக்க முடியாமல், சூழ்நிலையின் கைதியாக இருக்க வேண்டும்?

மிக அண்மையில் ஒரு வீடியோ காட்சியில் பதிவாகியிருக்கும் உரை-யாடல் இது... சுற்றுப்பயணம் சென்ற இடத்தில், தங்கியிருந்த விடுதியின் அறையில் இருந்து வெளியே வரும்-போது, அருகில் தனக்குப் பாதுகாப்-பாக நடந்துவரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார்: Ôபாத்ரூம்ல கால் இடறி-டுச்சு. வேட்டி ஈரமாயிடுச்சு. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டா-யிடுச்சு!Õ

84 வயது முதியவர் ஒருவர் நம் வீட்டில் இருந்தால், அவர் இந்த நிலையிலும் வேலைக்குச் செல்வதை நாம் விரும்புவோமா? அனுமதிப்-போமா?

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவுபடுத்தக் கோரி நடந்த உண்ணா-விரதப் பந்தலில், உட்கார்ந்த நிலையி-லேயே தன்னை மீறிய களைப்பில் அவர் தலை துவள்கிறது. உதட்டோரம் வடியும் எச்சிலை கைக்குட்டை எடுத்துத் துடைத்துக்கொள்ளவும் முடியாத அயர்ச்சியில் அவர் இருக்-கிறார். அவரால் நடக்க முடியவில்லை. சிறுசிறு அடிகளாக எடுத்துவைக்கும்-போது, இரு பக்கமும் பிடித்துக்-கொள்ள ஆட்கள் தேவைப்படு-கிறார்கள். உட்கார்ந்தால் எழுந்திருக்கவோ, நின்றிருந்தால் வாகாக உட்காரவோ, குழந்தையைப் போல அவருக்குப் பிடிமானம் தேவைப்படுகிறது.

என் அப்பா இந்த நிலையில் அலுவலக வேலைக்குப் போய்க்-கொண்டு இருந்தாரானால், நிச்சயம் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் மகனாகவே நான் இருப்பேன்.




மேடைப் பேச்சுக்களில் ஒரு விஷயத்திலிருந்து இடையில் இன்னொன்றுக்குத் தாவிப்போய் விரிவாகப் பேசினாலும், மீண்டும் விட்ட இடத்துக்கே கச்சிதமாக வந்து அர்த்தத்துடன் கோத்துக்-கொள்ளும் பேச்சாற்றல் உடையவர் கருணாநிதி. இப்-போது பல வாக்கியங்களைப் பாதியில் விட்டுவிட்டு வேறொன்-றுக்குப் போய்-விடுகிறார். சட்டைப்பையில் வைத்த காகிதத்தை மறந்து-போய் வேறெங்கோ தேடிய-தையும், ஒரு காலில் கட் ஷ¨ கழன்றுபோனது-கூடத் தெரியாமலே தொடர்ந்து நடந்த-தையும் பத்திரிகைச் செய்தி தெரி-விக்கிறது.

இவை எதுவும் அவருடைய குறைகள் அல்ல; முதுமையில் எவருக்கும் இயல்பானவை. உடல் பலவீனமும், செயல் பலவீனமும் எல்லா மனிதர்-களும் முதுமையில் சந்தித்தே தீர வேண்டியவை. ஆனால், அப்போதும் கடும் உழைப்புக்கு அவர்களை உட்படுத்துவதை ஒரு குடும்பமும் சமூகமும் தொடர்ந்து செய்யுமானால், அது மனித விரோதச் செயல் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கருணாநிதி சராசரியாக இன்று ஒரு நாளைக்கு 18 மணி நேரமாவது விழித்திருக்கிறார். விழித்திருக்கும் நேரம் முழுவதும் அரசியல் உள்ளிட்ட பணிகள் அவரை ஆக்கிரமிக்கின்றன.

அரசாங்கக் கோப்புகளைப் படித்து உத்தரவுகளைப் பிறப்பிப்பது, அரசியல் எதிரிகளுக்குப் பதில் அறிக்கைகளைக் காரசாரமாக உடனுக்குடன் வெளி யிடுவது, எதிரிகளிடமிருந்து மட்டு-மல்ல... கூட்டணி நண்பர்களிடமிருந்தும் தன் ஆட்சியைக் காப்பாற்ற தொடர் வியூகங்கள் வகுப்பது, முன்னாள் உடன்பிறப்புக்களும் இந்நாள் எதிரி-களுமான மாறன் சகோதரர்களை எதிர்காலத்தில் தன் வாரிசுகளுக்கு அச்சுறுத்தலாக வளரவிடாமல் பல வீனப்-படுத்தும் நடவடிக்கைகளைத் திட்டமிடுவது... இதெல்லாம் போக, எஞ்சிய நேரத்தில் தன் மனதுக்கு விருப்பமான இலக்கிய & சினிமா & விளை-யாட்டு ரசனைகளில் திளைப்-பது என்று, தான் விழித்-திருக்கும் 18 மணி நேரத்தில் 36 மணி நேரத்துக்-கான உழைப்பை அவர் கொடுத்தாக வேண்டியிருக்-கிறது.

இதில் பாதியைக்கூட, அவர் வயதில் பாதியளவே இருக்கும் ஒருவரால் செய்ய முடி-யாது. இதைப் பார்த்து பிரமிக்கி-றார்கள். Ôதலைவர் மாதிரி வருமா!Õ என்கிறார்கள். உண்மையில், இது பிரமிப்புக்கான விஷயம்தானா?

கலைஞர் கருணாநிதிக்கு இனிமேல் வாழ்க்கையில் அடைய வேண்டிய புதிய புகழும் எதுவும் இல்லை; புதிய அவதூறுகளும் இல்லை; சந்திப்பதற்-கான புதிய விமர்சனங்களும் இல்லை. அவருக்-குச் சூட்டப்படும் புகழுரை-களும், அவர் மீது வைக்கப்படும் விமர்சனங்களும் இனி புதிதாக மாறுவதற்கும் வழியும் இல்லை.

யார் நிமித்தம் அவர் இந்த முட்கிரீடத்தைத் தரித்திருக்க வேண்டும்? இதையெல்லாம் ‘விட்டு விடுதலையாகி, சிட்டுக் குருவியைப் போலேÕ சுதந்திரமாகச் சிறகடிக்க வேண்டியவர் அவர். தன்னை உண்மையான பகுத்தறிவாளராக உரத்துச் சொல்வதற்குத் தடையாக இருக்கும் முதலமைச்சர் பதவி என்ற துண்டை உதறிவிட்டு, எழுத்தாளர் & இலக்கியவாதி & சமூகச் சிந்தனையாளராக சுதந்திரமாகச் செயல்பட, இந்த வயதில்கூட முடியாதென்றால் எப்படி?

அவருடைய ரத்த வாரிசுகளும் அரசியல் வாரிசுகளுமான மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், கனிமொழி மூவருக்கும் ஒரு கேள்வி: ‘ஒரு தலைவராக அவரைப் பார்க்காமல், ஒரு தந்தையாக அவரைப் பாருங்கள். தினம் இப்படி உடல் உபாதைகளுடன் அவர் பொது வேலைகளைச் சுமந்துகொண்டு அலைக்கழிக்கப்படுவது உங்களுக்குச் சம்மதம்தானா? ஏன் அவருக்கு ஓய்வு தர மறுக்கிறீர்கள்?’

தி.மு.க&வினருக்கு ஒரு கேள்வி: ‘கட்சிக்குள் ஸ்டாலின்தான் அடுத்த முதலமைச்சர் என்பதை எழுதாத விதி-யாக ஏற்றுக்கொண்டுவிட்ட பிறகு, இப்போதே ஸ்டாலினை முதல்வராக்கு-வதில் உங்களுக்கு என்ன தயக்கம்? மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கிவிட்டு, சோனியா கட்சித் தலைவராக இருந்து காங்கிரஸை வழிநடத்துவது போல, கட்சித் தலைவராக மட்டும் இருந்து-கொண்டு கலைஞர் உங்களை வழிநடத்-தினால், உங்களால் அரசியல் எதிரிகளைச் சமாளிக்க முடியாமல் போய்விடும் என்று அச்சப்படுகிறீர்களா? உங்கள் அச்சத்தி-னால், ஒரு முதியவரை இப்படிக் கொடுமைப்படுத்த வேண்டுமா?’

கலைஞர் கருணாநிதிக்கு ஒரு கேள்வி: ‘உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல்’ வேண்டுமென்று கேட்ட பாரதிக்கு அது 39 வயது வரைகூட வாய்க்கவில்லை. உங்களுக்கு அது 80 வயது தாண்டும் வரை வாய்த்தது. இன்னும் 20 ஆண்டுகள் உங்கள் விருப்பம் போல் ஓய்வெடுக்கவும், உங்கள் விருப்பம் போல் கருத்து தெரிவிக்கவும், உங்கள் விருப்பம் போல் கலை இலக்கியப் படைப்புகளில் ஈடுபடவும் தடையாக இருக்கும் பதவி யைத் தூக்கி எறியக்கூட வேண்டாம்; கை மாற்றிவிட்டுப் போவதற்கு ஏன் தயங்கு-கிறீர்கள்? இந்தத் தங்கக் கூண்டிலிருந்து உங்களை நீங்களேதானே விடுவித்துக்-கொள்ள வேண்டும்?

பொதுமக்களுக்கு ஒரு கேள்வி: ‘முதியவர்--களைத் தங்களோடு வைத்துக்-கொள்ள விரும்-பாமல் முதியோர் இல்லத்-துக்கு அனுப்பு-வது தவறுதான்; அதேசமயம், தங்கள் சுயநலத்துக்-காக, தங்களுட-னேயே வைத்துக்கொண்டு ஓய்வே தராமல் அவர்-களைக் கடுமையாக வேலை வாங்குவதும் தவறா, இல்லையா?
நன்றி:விகடன்

இதில் ஞானி கலைஞரை கிண்டல் செய்கிறாரா இல்லை நிஜமான அக்கறையில் எழுதுகிறாரா???

கிண்டலாக இருந்தால் - முதலமைச்சர் என்ற் மரியாதை இல்லாவிட்டாலும், வயதில் பெரியவரை கிண்டல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

3 comments:

Anonymous said...

இளமையான ஞாநி அவர்களுக்கு..

வணக்கம்.

பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு மடல் எழுத நினைத்ததுண்டு, ஆனால்.. அப்போதெல்லாம் எழுத முடியாமலேயே போய் விட்டது. அந்த சமயங்களை நினைத்துப்பார்த்தால்.. பல பாராட்டுக்களும், சில சண்டைகளுக்குமான சமயமாக நினைவு வருகிறது. பரவாயில்லை. இப்போதாவது எழுதி விடுவது என்ற எண்ணத்துடனே அமர்ந்திருக்கிறேன். அனேகமாக வழமை போல இதையும் பாதியில் விட்டு விட மாட்டேன் என்றே நினைக்கிறேன்.

அக்டோபர் 10,2007 தேதி ஆனந்த விகடன் இதழில் பக்கம் 148-ல் தங்களின் தொடர் பத்தியான “ஓ…பக்கங்கள்” படித்ததும் இம்மடல் எழுதுகிறேன்.

தமிழக முதல்வர் மு.கருணாநிதி மீது தாங்களுக்கு இருக்கும் கருணை(!) பொங்கும் அன்பைக்கண்டு அளவிட முடியாத மகிழ்ச்சி அடைந்தேன் என்றால் அது மிகையல்ல. 84 வயதில் தமிழகத்தில் தொடர்ந்து 18 மணி நேரம் உழைக்கக்கூடிய ஒரு கிழவன் மீது தாங்கள் காட்டக்கூடிய அன்பை எத்தனை வார்த்தைகள் எழுதி பாராட்டினாலும் தகும்.

பெற்ற பிள்ளைகளை விட, தன் தலைவனுக்காக தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி தொண்டனை விட, இந்த தலைவனுக்காக தன்னூயிர் நீத்த விசுவாசிகளை விட உங்கள் லாவகமான எழுத்து மூலம்.. மு.கருணாநிதி என்ற மனிதருக்கு வயதாகி விட்டது என்பது தங்களுக்கு மட்டுமேனும் தெரிந்திருப்பது மகிழ்ச்சியானது.

வயதாகிப்போன ஒருவர் ஓய்வு தான் எடுக்க வேண்டும்.. உழைக்கக்கூடாது. அப்படி அவர் உழைத்தால்.. பிள்ளைகள் கல் நெஞ்சக்காரர்கள், தொண்டர்கள் இதயமில்லாதவர்கள், விசுவாசிகள் போலியானவர்கள்.. என்று உங்களின் லாவகமான எழுத்து மூலம் தமிழக மக்களின் மனதில் விதைக்கிறீர்கள். நல்ல காரியம் செய்தீர்கள். பாவம் அந்த கிழவன்.. ஓய்வு எடுக்கட்டும். நீங்கள் அடிமனதில் விரும்பும் அந்த கிழவனின் ஓய்வு எத்தகையது என்பதை நான் சொல்லி அறிய வேண்டியதில்லை.

தொன்னுற்று நான்கு வயதில் நடக்கக்கூட முடியாமல், அப்படியே தூக்கி வந்து வைத்துவிட்டுப்போவார்களாம்.. ஈரோட்டு ராமசாமியை. மூத்திரப்பையை தூக்கியபடி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் போய் வந்திருக்கிறார் அந்த கிழவர். வயது ஏற்றத்தின் காரணமாக அவரின் கை விரல்கள் கூட மடிந்து நீட்ட முடியாத போதும்.. அவரே எழுதி இருக்கிறார்.. பல கட்டுரைகளை. அந்த கிழவனோடு.. இவரை ஒப்பிட முடியாதெனினும்.. வயோதிகம் பாராமல் உழைக்கத் தயாராக இருக்க துணிந்தவர்கள் இருவரும். வயோதிகத்தை காரணம் காட்டி இவரை ஒதுங்கிக்கொள்ளச்சொல்லும் நீங்கள்.. முன்னெப்போதாவது இப்படி எழுதியதுண்டா என்று என்னையே கேட்டுப்பார்க்கிறேன்.

அது சரி ஞாநி.., உங்களின் சமீபத்திய எழுத்துக்கள் எல்லா வற்றிலுமே.. இந்த முதியவரை குறிவைத்தே எழுதப்படுகிறதே ஏன்? நீங்கள் அறிவிக்கப்படாத பொருப்பாளராக இருக்கும் இதே விகடன் குழமத்தின் ஜூ.வி இதழிலும்(மட்டும்) இதே செய்தி.. மு.கருணாநிதிக்கு வயதாகி விட்டது என்ற செய்தி தொடர்ச்சியாக வெளிவருவது ஏன்? என்ன எதிர் பார்க்குறீர்கள் நீங்கள்?

இங்கே இந்த பெரியவரின் வயோதிகத்தை மட்டும் குறை சொல்லி, ஓய்வு எடுக்கச்சொல்லும் உங்களின் நுண்ணிய அரசியலை அறிந்து கொள்ள முடியாதவர்களாக தி.மு.கழகத்தினர் இருப்பது வருத்தமளிக்கும் செய்தி என்றாலும்.. நீங்கள் இது போன்று வயோதிகத்தை முன்னிருத்தி, ஓய்வு எடுக்கச்சொல்லி எவரையாவது, எப்போதாவது எழுதி இருக்கிறீர்களா? இல்லையெனில் மு.க-வின் மீது மட்டும் அந்த கருணை பொங்க என்ன காரணம்?

கால் முட்டு எழும்பு தேய்ந்து போய்.. அரசாங்க செலவிலேயே மருத்துவம் பார்த்து, படுக்கையில் ஓய்வெடுத்து.. அதன் பின்னும் இன்ஞ்..இன்ஞ்-ஆக நடந்து பாரதம் சுற்றிய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய்க்கு விலகிக்கொள்ளுங்கள் என்பது போன்ற ஒரு கடிதம் தாங்கள் எழுதியதாக நினைவு எனக்கு இல்லை. உங்களுக்கு?

தமிழக அரசியலில் எனக்குத் தெரிந்து பொது மேடையில்.. பெரியார் ஈ.வே.ரா தன் கடைசி காலங்களில் அமர்ந்து பேசும் வழக்கத்தை கொண்டிருந்தார். அதன் பின் அவரின் வயது எட்டாத.. டாக்டர்.ராமதாஸ் அந்த வழக்கத்தை கொண்டு வந்தார். அதற்காக.. அவரை அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளுங்கள் என்று, நீங்கள் எங்கும் சொன்னதாக நினவு இல்லை எனக்கு. உங்களுக்கு?

இந்திய ஜனாதிபதிகளிலேயே மிகவும் சிரமப்பட்டு நடந்தவர் சங்கர் தயால் சர்மா. எனக்குத்தெரிந்து அவரையும் நீங்கள் ஓய்வு பெறச்சொல்லி எங்கும் அறிக்கை விடவில்லை என்றே நினைக்கிறேன். நினைவிருக்கிறதா உங்களுக்கு?

அதே சமயம்.. அதே ஆனந்த விகடன் இதழில் 92ம் பக்கம் வந்திருந்த செய்திக்கட்டுரையையும் தாங்கள் பார்த்திருக்கக்கூடும். ஆதரவற்ற சீராளன் என்ற 80 வயது கிழவன் இன்னும் வண்டி இழுத்து தன்வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் அவல வாழ்க்கை பற்றிய செய்திக்கட்டுரையைத் தான் சொல்லுகிறேன். சீராளன் போன்ற எண்ணற்ற கிழவர்களையும், கிழவிகளையும் என்னை விட அதிகம் ஊர் சுற்றிய நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.. அப்போதெல்லாம் அவர்களின் நிலைகண்டு.. 39 வயதில் செத்துப்போன பாரதியை துணைக்கிழுத்து நீங்கள் கட்டுரைகள் எழுதியதாக எனக்கு நினைவு இல்லை. உங்களுக்கு?

தொடர்ந்து ஒரே முகமுடியை பயன்படுத்த முடியாது. நைந்து போய் அது கிழிந்து.. கோர முகம் வெளிப்பட்டே தீரும்.

தொடர்ந்து எதிர்ப்புக் குரல்கள் வந்தால்.. மு.கருணாநிதியை தந்தையாக நினைத்தேன். தாத்தாவாக நினைத்தேன் என்று நீங்கள் பல்டி அடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும்..காலம் பதில் சொல்லும்.

Anonymous said...

magamedhavi gnani. vayathu manathai poruthathe ozhiya udalai vaithu oruvarin aatrali edai poduvathu ungal madamaiyai kattugirathu.Parpana vathiyargal katturaiyil arivumathiyidam seeruppadi vangiyum innamum ungalliku arivu vravillaiye.

Anonymous said...

Ada Lusu payalugala. If Gnani is pointing MK. His arguments are correct? He never said that he is supporting other persons who are over 80 and still working. It seems your article is an half baked one.