வடநாட்டு வைதீகச் சகுனிகளின் சதிச் செயல் திகைக்க வைக்கின்றது. இராமர் குறித்த கலைஞரின்பேச்சைக் குறை கூறுபவர்களும், குறை கூறாதவர்களும், அதற்கு முன்னர் ஒன்றை எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஏன் இந்தச் சகுனிகள் இவ்வளவு நாள் பொறுத்திருந்தார்கள் என்று.
இராமர் சர்ச்சை என்ன மத நம்பிக்கையில் கிளர்ந்த உணர்வா? கொந்தளிப்பா? - இல்லை. திட்டமிடப்பட்டச் சதியின் இறுதிக்காட்சிகள்.
மூன்று வருடங்களாக சேதுக்கால்வாய் முனையல் செயல்பட்டு வருகிறது, குறிப்பாக கடந்தஇரண்டு வருடங்கள் களப்பணிகள் நடந்து வருகின்றன. அப்பொழுதெல்லாம் என்னென்னவோவழக்குப் போட்டார்கள். உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது அவ்வழக்குகளை. இராமர் பெயர் சொல்லும் குரங்குப்படைகளும், அ.தி.மு.க போன்ற கரடிப் படைகளும் என்னென்னவோ காரணங்கள் சொல்லி தடை செய்யப் பார்த்தன.
ஆனால், தமிழர்களின் நலன்களுக்கு எதிராக மட்டுமே செயல்பட தமிழகத்தில்வாழும், குரங்குப் படைகளின் நேசக்குரங்கு ஒன்று தற்போதுவழக்குப் போட்டு சேதுக்கால்வாய்ப் பணிகளை நிறுத்தி விட்டது.
நண்பர்களே, எண்ணிப் பாருங்கள்!
1) ஏன் இவ்வளவு நாள்கள் கழித்து (இரண்டு முழு வருடங்கள் கழித்து) இந்த வழக்குதடையை ஏற்படுத்தியிருக்கிறது ?
2) ஏன் இதற்கு முன்னர் போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப் பட்டன?
இதை நன்கு சிந்தித்துப் பார்த்தால் இதன் சூழ்ச்சி புரியும்.
"சகுனிப்பட்டாளம் நன்கு காத்திருந்து, திட்டமிட்டு, பரிவாரங்கள், மடங்கள், நீதிமன்றங்கள், ஏன், பேராயக் கட்சிக்குள்ளும் ஆள் பிடித்து, மிகப் பக்குவமாகக் காய் நகர்த்தித் தடை வாங்கியிருக்கிறார்கள்."
"அப்பொழுதே இந்தத் தடையை ஏற்படுத்தி இருந்தால் நடுவண் அரசும் தி.மு.கவும்ஏதேனும் செய்து தடைகளை உடைத்திருக்க முடியும். ஆனால், நடுவண் அரசு மூனரை ஆண்டு ஆட்சி ஓடிய பின்னர், இவ்வாறு தடையை ஏற்படுத்தினால், தடை, வழக்கு, தடை என்று கொண்டு போனால், பேராயக் கட்சியின் ஆட்சியும் முடிந்து போகும் அல்லது அரசு கவிழ்ந்து போகும். அப்படி ஆகி விட்டால், அரசியல் அரங்கு மாறி விடும். தி.மு.கவின் வலுவும் மாறியிருக்கும். அந்தச் சூழலைப் பயன்படுத்தி சேதுக்கால்வாய் முனையலையே ஒட்டு மொத்தமாகத் தமிழகத்திற்கு வராமல் செய்து விடலாம்" என்பதே பா.ச.க, இரா.சு.ச, வி.இ.ப, ப.த, அ.தி.மு.க போன்ற சகுனிகளின் திட்டம்.
அந்தச் சதியை மிக அழகாகச் செய்திருக்கிறார்கள் இராமர் பெயரால் அரசியல்செய்யும் குரங்குப்படைகளும் கரடிப் படைகளும்.
சேதுக்கால்வாய் முனையல் துவங்கப் போவதாகச் சொன்ன உடனேயே, அதனை முதலில் எதிர்த்தவர் இந்திய வைதீகக் கரடிப் படையின்முன்னணிப் போராளியான செயலலிதா. அவரைத் தொடர்ந்து அல்லது அவரோடு, இராமர் பெயரால் அரசியல் செய்து வரும் அனைத்திந்திய குரங்குப் படைகளும் எதிர்த்தன. அதனைத் தொடர்ந்து பல மாய-அறிவாளிகள் எல்லாம் பல்வேறு காரணங்களைச் சொல்லிஎதிர்த்தனர். ஈராண்டுகளுக்கு முன்னால் இவர்கள் சொன்ன காரணங்கள்எல்லாம்,
1) கடலின் சூழமைவு கெட்டுப் போகும் ( கப்பல் கடலின் மற்ற பகுதிகளில் போனால் சூழமைவு கெடாது :) )
2) மீன்களெல்லாம் செத்துப் போகும் (மீன், நண்டு, ஆமை இதெற்கெல்லாம் கவலைப்பட்டதை எண்ணிய இவர்களைவள்ளலார் பெருமான் வாழ்த்துவாராக! )
3) சில அரிய வகை மீன்கள் அருகிப் போகும்
4) மீனவர்கள் பாதிக்கப் படுவார்கள் (நல்லவேளை நரிக்குறவர்கள் எல்லாம் பாதிக்கப் படுவார்கள் என்று சொல்லவில்லை;-) அது வரைக்கும் இந்த மூளைகளைப் பாராட்ட வேண்டும்)
5) அந்நிய நாட்டுப் படைகள் தொபுக்குடீ என்று வந்து குதித்து (நீந்தி?) விடுவார்கள்
6) இந்த வழியாக வரும் கப்பல்களுக்கெல்லாம் ஒன்னும் செலவு மிச்சம் ஆகாது; அல்லாமே நாசம் - பன்ற செலவெல்லாம் எள்ளு!
7) ஒரு படி மேலே போய், இந்த வழியில் கப்பல் வந்தால் தற்போதை விட அதிகம் செலவாகும்
8) இப்ப வெட்டுற கால்வாயில் மறுபடியும் மண் வந்து மூடிடும்
என்றெல்லாம் சொல்லி தமது பொறாமையை அள்ளிக் கொட்டினார்கள்.
இன்றைக்கு அடாட்டா கனிமத் தொழிற்சாலை வருவதற்கு அப்பகுதி
மக்களை எப்படித் தூண்டிவிட்டுத் தகராறு செய்கிறார்களோ அதேபோல
மீனவர்களைத் தூண்டுவது முதல்அத்தனை எதிர்ப்பையும் செய்து வந்தார்கள்.
டி.ஆர்.பாலுவின் திறமையாலும் உழைப்பாலும், ப.சிதம்பரத்தின் முழு ஆதரவாலும் மற்றும் சோனியா, மன்மோகன் மற்றும் கலைஞரின் முழு ஈடுபாட்டாலும்பல படிகளைக் கடந்து வந்த இந்த முனையலை இன்று நிறுத்தி விட்டார்கள் இந்தக்குள்ள நரிகள்.
நிறுத்தியதோடு இல்லாமல் அதனை இராமர் பெயருக்கு திசை திருப்பி விட்டிருக்கிறார்கள்.
இந்த நிலையைப் பாராட்டி, தமிழக நலன்கள் கெட்டுப் போவதில் இந்த வைதீகச் சண்டியர்களுக்கு இருக்கும் அக்கறையின் வெளிப்பாடுதான்
1) சுப்பிரமணியன் சாமியைப் பாராட்டி சங்கராச்சாரியார் அறிவித்த சிறப்பு பூசை
2) பா.ச.கவின் வேதாந்தி என்ற பட்டிப் பதகன், கலைஞரின் தலையை வெட்ட தீவிரவாதிகளை ஏவியதும்
தமிழ்நாட்டின் மேல் அக்கறை உள்ள நண்பர்களும் தமிழ் மக்களும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் துளியும் தொடர்பில்லாத
இந்து என்ற பெயரில் இயங்கும் வைதீகச் சழக்கர்களையும்
அவர்களின் சதிக் கூட்டையும் நன்குணரவேண்டும்.
(நான் தமிழ் வைணவர்களையோ, தமிழ்ச் சைவர்களையோ சொல்லவில்லை.)
அற்புதமான சைவ, வைணவ நெறிகள் இருக்க, நாய்களும் பேய்களும் குரங்குகளும்கரடிகளும் நிறைந்த வடநாட்டு வைதீகத்தினைக் களைந்து சிந்திக்க வேண்டும்.
அ) கேரளாவிடம் கடும் போராட்டம் நடத்தியே சேலம் கோட்டம் மீட்கப் பட்டது
ஆ) இன்னும் கேரள, கர்நாடக அரசுகளின் தண்ணீர்ச் சரவல் அப்படியே உள்ளது.
இ) இராமர் பாலம் இராமர் பாலம் என்று குரைத்துக் கொண்டிருக்கும்
பா.ச.க, அ.தி.மு.க மற்றும் பல கட்சியினர், அந்தப் பாலத்திற்கு அந்தக் கரையில் அவல நிலையில் சோறு தண்ணிக்கும் அல்லாடிக் கொண்டிருக்கும் நமது சொந்த இன மக்களுக்கு சோறு கூட கொடுக்க விடாமல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஈ) சேதுக்கால்வாய் முனையலுக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள்.
தமிழர்களுக்கும் வைதீகர்களுக்கும் ஆன இந்தப் போராட்டம் ஓயாதுஎன்றே தோன்றுகிறது. "நிதியம் சொரிந்த நீவி போல" என்று அகநானூறு சொல்லும். அது போலக் கிடந்த சங்கராச்சாரியாரால் இன்று எழுந்து சேதுக்கால்வாய் நிறுத்தியதனைக் கொண்டாட முடிகிறதென்றால் இவர்கள் தமிழர்களுக்குச் செய்யும் இடர்களுக்கு முடிவு என்ன?
சிங்களக் கைக்கூலிகளாகவும் வேறு சில நாடுகளின் கைக் கூலிகளாகவும் செயல்படும் கூட்டத்தைக் கண்டு கொள்ள இதை விடச் சிறந்த வாய்ப்பு இருக்க முடியாது.
இராமர் எந்தக் கல்லூரியில் படித்தார் என்று கேட்டால் "பட்டிப் பதகர்களே தலையை வெட்டி விடுவீர்களா? ".
தி.மு.கவும் அதன் கட்சித் தலைவரான கலைஞரும் மிகப் பெரிய கோழைகளாகவே தெரிகிறார்கள்.
வைதீகப் பேயாட்டம் போட்ட செயலலிதா கலைஞரை அடித்தபோதே உரோசம் வராத இவர்களுக்கு கருணாநிதியின் தலைக்கு விலை வைத்த போதுமட்டும் உரோசம் வந்து விடுமா என்ன?
...நாக.இளங்கோவன்
Friday, October 5, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment