Wednesday, October 10, 2007

குதிரை வண்டி, மாட்டு வண்டியில் போவார்களா இவர்கள்?

Sethu Project - A Strategic blunder ! என்ற தலைப்பில் கீழ்க்கண்ட சுட்டியில்கர்னல். அணில் அத்தாலே என்பவர் கட்டுரை எழுதியிருக்கிறார். (http://sify.com/news/fullstory.php?id=14533111&vsv=SHGTslot3)
சிஃபியிம் அவரை "As a military historian he specialises in insurgency and peace process."என்று அறிமுகப் படுத்துகிறது. சிஃபி.காமுக்கு வேறு நல்ல ஆள் கிடைக்க வில்லை போலும்.

நானும் ஏதோ இராணுவ வரலாறு பற்றிய ஒருவர் எழுதுகிறாரே என்று படிக்கப் போய் இதுவும் ஒரு வெற்றுச் செக்கு என்று உணர்ந்தேன்.
தலைப்பிலே "A Strategic blunder" என்று முழங்கிவிட்டு, கட்டுரைக்குள் Strategy பற்றிய சார்புத் தகவல் எதுவுமே இல்லாமல் கட்டுரை ஆக்கியிருக்கிறார்.

இவர் என்னவெல்லாம் சொல்கிறார்: (ஆங்கிலத்தில் அவரின் எழுத்து)

1) இந்தியா மட்டுமல்ல இசுலாமிய நாடான இந்தோனேசியாவையும் உள்ளிட்டதென்கிழக்காசியாவின் புராணச்சின்னம்.

(a cultural heritage for not just India but many South East Asian countries as well (it is also a
national epic of Muslim majority Indonesia)

இந்தியாவிலேயே கேட்பார் அற்று நீருக்குள் மூழ்கிக் கிடக்கும் ஆதம் மணல் திட்டுகளில் சிறிய அகழ்வு செய்வதற்கு இந்தியாவை மட்டுமல்ல தென்கிழக்காசியவையே இவர் ஏன் ஆதரவுக்கு இழுக்கிறார்?
இதன் சூழ்ச்சி என்ன?

விசயநகரப் பேரரசிற்கு முன் எந்த இந்தியப் பேரரசன் தென்கிழக்காசியா முழுமையும்சென்று அங்கெல்லாம் வைதீகத்தைப் பரப்பினான்?

எப்படி தமிழ்நாட்டு நெறிகளை வைதீகம் விழுங்கியதோ அப்படியே தமிழர்நெறிப் பட்டிருந்த தென்கிழக்காசியாவையும் வைதீகம் மெல்லக் கொன்றது என்பதுதான் வரலாறு.

2) சூழமைவு கெட்டுவிடும் என்று சூழியல் காரர்கள் சிலர் சொல்கிறார்கள்.
(Ecologists and environmentalists object saying it will destroy the fragile eco system in Palk Strait and Gulf of Mannar and rich marine life there)
ஆயிரக்கணக்கான சதுர கி.மீ பரப்பு கொண்ட கடலில், ஆயிரக்கணக்கானகப்பல்கள் பயணிக்கின்ற கடலில், பல நாடுகள் அணுச்சோதனையை செய்கின்றகடலில், துகளூண்டு 1000 அடி நீளத்தில் அங்கிருக்கும் மணற்திட்டுகளைஅகழ்ந்து பாதை ஏற்படுத்துவதனால் சூழமைவு போய்விடும் என்று பதறுபவர்களை என்ன சொல்வது?
ஊரெல்லாம் பெட்ரோல், டீசல் போன்றவைகளால் ஓடும் ஊர்திகள் சூழமைவுக்கு இழைக்கும் பதகத்தை விட கடலில் ஒரு சின்ன இடத்தில் அங்கு வாழும் நீர்வாழ்உயிரினங்களுக்கு ஒன்றும் பெரிதாக ஏற்பட்டு விடப் போவதில்லை. அவைஅங்கே ஏதோ தோண்டுகிறார்கள் என்றால் இடத்தை மாற்றிக் கொண்டு வேறு இடத்திற்குப் பரந்த மனதோடு போய்விடக்கூடிய உயிரினங்கள்.

பெட்ரோல், டீசலால் ஓடும் ஊர்திகளை வேண்டாம் என்று சொல்லிகுதிரை வண்டி, மாட்டு வண்டியில் போவார்களா இவர்கள்? தன்னலக் கோடரிகள் ஊருக்கு உபதேசம் பண்ணியே பிழைப்பு செய்பவர்கள்.

ஆதம் மணல் திட்டுகளை அகற்றுவது சூழமைவுக்குக் கேடாக அமையும்என்றால், அதனை இராமர்தான் கட்டினார் என்றால், அவர் கட்டும்போது சூழமைவுக்குப் பதகம் ஏற்பட்டிருக்காது என்று எப்படிச் சொல்லமுடியும்?

3) மலையாளக்கரையை, மேற்குக் கரையை, இந்தோனேசிய பூகம்பங்களால் சுனாமி தாக்கும் வாய்ப்பு வந்துவிடுமாம்.

(Many express fear that the breaching of Ram Sethu will subject the western coast to tsunami threat since Indonesia and sea around it are prone to earthquakes)

கேப்பையிலே நெய் ஒழுகுகிறது என்று சொல்லி கேட்பவர்களையும் மடையர்களாக ஆக்கும் சங்கதி இது. தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெரியேறும் என்பது போல் பேச மடையர்களால் மட்டுமேமுடியும்,
இதை ஆழ்ந்து கவனித்தால் இதன் அரசியல் புரியும். மீண்டும்தமிழகத்திற்குப் பதகம் செய்ய வைதீகத் தலைமையில் மலையாளமும், மராட்டியமும் இருப்பது புரியும்.

மலையாளம் ஏறத்தாழ தமிழர்களுக்குப் பகை நாடு போலவே ஆகிவிட்டது. மராட்டியருக்கு, மும்பையை விட வேறெந்த ஊரும் நிதியம் நிறைந்த ஊராகி விடக்கூடாது.

ஆகவே வேறு வழியில் முடியாதவர்கள் இராமரை இழுத்து வந்துதமிழர்களுக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை 6 அடிகள் உயர்த்தினால் அணை உடைந்து பல இலட்சம் மலையாளிகள் மாண்டு விடுவார்கள்என்று அச்சுதானந்தன் கட்டி விட்ட கதையை நினைவுக்குக் கொண்டுவந்தால், எப்படி இந்தோனேசியப் பூகம்பம் மேற்குக் கரையை பாதிக்கும் என்பது புரியும். ஆக, இது பச்சைக் கேரள பாணியிலான பொய்த் தண்டோரா.

கிழக்கில் இந்தோனேசியாவில் பூகம்பம் வந்து, அது கிழக்கே இலங்கையை ஒன்றும் செய்யாமல், இலங்கையின் மறைவில் இருக்கும் இராமேச்சுரத்தை ஒன்றும் செய்யாமல் அப்படியே வடக்கு நோக்கி போய்இலங்கையைச் சுற்றிக் கொண்டு பின்னர் அப்படியே தெற்கே திரும்பி, சேதுக்கால்வாயிற்குள் புகுந்து, பவ்வியமாகச் சென்று கன்னியா குமரியில்குமரி அன்னையை வணங்கி, அப்படியே திருவள்ளுவரையும்விவேகானந்தரையும் பார்த்து கண்ணடித்து விட்டு மீண்டும் திசை திரும்பிமேற்காகப் போய், அப்படியே மலையாளக் கரை, கோவா, மராட்டியக் கரைகளைஎல்லாம் பதம் பார்த்து கேரளக் கரையில் உள்ள கனிமங்களை எல்லாம்பாதித்து விடுமாம்.
(What that will do to the rich thorium, monazite, zircon and other mineral deposits on Kerala
beaches is a huge question mark.)

புளுகுணிகளின் கற்பனை வளத்தினைப் பாருங்கள்! இதுவே சதிகாரர்களின் எண்ணத்தைச் சொல்லப் போதுமானது.

4) தற்போது தலைமன்னாருக்கும் இராமேச்சுரத்திற்கும் இடையே ஏற்படுத்தப் படும்கோவண அளவு அகழ்வு, இலங்கை நாட்டின் எல்லைக்குட்பட்டது போலத் தெரிகிறதாம்.அதனால் கட்டி முடிந்த பின்னர் இலங்கை அதைச் சொந்தம் கொண்டாட வரக்கூடியவாய்ப்பு இருக்கிறதாம்.

(Since it appears to be clearly inside the Sri Lankan territorial waters, at some point, Sri Lanka
(with the help of an outside power, obviously) will not only claim control but also may decide to deny us the use of this channel.)

இந்திய இராணுவத்தில் கர்னல் என்ற பதவியில் இருந்த இராணுவக் காரர், தான்இரு இராணுவத்தான் என்று சொல்லிக் கொண்டு, வரையரையில்லாத, தெளிவில்லாத, பொத்தாம் பொதுவில் ஊகத்தின் பேரில் நமது நாட்டின் எல்லையை அயலான் எல்லை என்று கூறுகிறார்.
நாட்டைக் காட்டிக் கொடுக்கிறாரா அல்லது காக்கிறாரா?
கேரளாவைச் சேர்ந்த நாராயணன் இலங்கை தொடர்பான ஆலோசகராகவும்,கேரளாவைச் சேர்ந்த அந்தோனி இராணுவ அமைச்சராகவும் இருப்பது கவனிக்கத் தக்கது.

ஒரு இராணுவத்தாருக்கு தனது நாட்டின் எல்லை என்பதே தெரியாமல்ஒரு கட்டுரை வரைவது அவரின் நம்பகத் தன்மையைக் காட்டவில்லை.
அதையும் தொடர்ந்து சீனப்படை உள்ளே நுழைந்து விடுமாம். அமெரிக்கர்கள்என்ன செய்வார்கள் என்றே தெரியாதாம்.
இந்தியாவைச் சுற்றி பெரிய கடற்கரையை வைத்துக் கொண்டு, இந்த ஓட்டைக்குள் சீனாவும், அமெரிக்காவும் என்னென்னவோ செய்து விடுவார்களாம்.

எலியின் பொந்தில் வாழும் கோழைகளுக்கு இப்படித்தான் உளறத் தெரியும்என்று சொல்லி மேலும் அவர் சொல்லி இருக்கும் கருத்துகள் வைதீகர்களைப் போன்ற ஒரு மனநோயாளியின் கருத்துகளாகவே தெரிகின்றன என்பதோடு, சிஃபியில் வந்த கட்டுரைகளில் மட்டமான கட்டுரை இது என்றும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

No comments: