''ராமன் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தான்"என்று கேட்டதற்காக இன்று கலைஞரின் தலையை கேட்கிறது பார்ப்பனக்கூட்டம்.அறிவு ஜீவிகள் என்று நியாய்மான விமர்சகர்களாக தங்களை காட்டிக் கொள்பவர்கள் கலைஞரையும் அத்வானியையும் ஒரே தட்டில் வைத்து அளவிடுவதன் மூலம்.தாங்கள் இணையும் பூணுல் புள்ளியை நினைத்து திருப்தி அடைகின்றனர்..இதோ தந்தை பெரியார் இராமாயணத்தை பற்றியும் ராமனைப் பற்றியும் கூறியதை கீழே தருகிறேன்.தந்தை பெரியார் பார்ப்பனர்களோடு இணைவதற்கு எந்த புள்ளியும் இருந்ததில்லை...அந்த புள்ளைகளை தேடி அவர் புத்தி அலைந்ததும் இல்லை,இன்று ஆர்,எஸ்.எஸ்.இந்து முன்னணி ,பிஜேபி, போன்ற பார்ப்பன கூட்டத்தையும் அறிவிஜீவி போர்வையில் அலையும் சில எழுத்தாளர்களையும் இணைக்கும் ஒரு முக்கிய புள்ளையாக மாறியிருப்பவர்ம் முண்டாசுக்கவி பாரதியார்...எல்லா இடத்திற்கும் பொறுந்தத்தக்கதாய் மாறூம் இந்து மனம் பாரதிக்கு உண்டு என்பதை நமது தோழர்கள் பலரும் நிரூபித்திருக்க இப்போது பெரியாரின் வார்த்தைகளை படியுங்கள்.....
தந்தை பெரியார்
இராமாயணத்தில் அவரவர் சாதிகளையும், பிரிவுகளையும் தானே நிலைநாட்டுகிறது?
• ஒரு இடத்தில் அனுமார் இராமன் காலில் விழுகிறான். இராமன் அனுமாரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். ‘நீயோ ஒரு பிராமணன். நான் க்ஷத்திரியன். என் காலில் வந்து விழலாமா? இந்தப் பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பேன்?” என்று கூறுகிறான்.
• இராமன் அயோத்தியில் இருந்து காட்டுக்குப் புறப் படும் சமயம், “என் பணத்தை யும், சொத்துக்களையும், என்னிடத்தில் இப்போது இருக்கும் மாடுகளையும் கொண்டு வாருங்கள். முழு வதையும் பிராமணருக்குக் கொடுத்து விடுகிறேன்!” என்பதாகச் சொல்லுகிறான்.
• சீதை, “என் நகைகள் முழுவதை யும் கொண்டு வாருங்கள். பிராமணனுக்குக் கொடுத்து விட்டுப் போனால் புண்ணியம்” என்பதாகச் சொல்கிறாள்.
• சூர்ப்பனகை, ‘என்னைத் திருமணம் செய்துகொள்’ என்று கேட்கும்போது, ‘நீ ஒரு சாதி, நான் ஒரு சாதி, எப்படித் திருமணம் செய்து கொள்வது?’ என்கிறான்.
• ஒரு இடத்தில் தாடகை மகனை இலட்சுமணன் கொன்றுவிட்டு, ‘இந்தப் பாவத்திற்கு என்ன செய்வேன்?’ என்று வருத்தப் பட்டுக் கொள்கிறான். அதற்கு இராமன், ‘சூத்திரனைத் தானே கொன்றாய், அதனால் பாவ மில்லை கவலையை விடு’ என்று கூறுகிறான்.
• சம்பூகன் ஒரு சூத்திரன். அவன் தவம் செய்ய உரிமையில்லை என்று கூறி அவனைக் கண்டங் கண்டமாக வெட்டி விடுகிறான். இப்படி எங்கு பார்த்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வருணாசிரம தர்மம் தாண்டவ மாடுகிறது. இப்படி இருக்கும் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்பதில் என்ன தப்பு?”
(பெரியார், ‘விடுதலை’ 13.9.56)
இராமனைக் கொளுத்தச் சொன்னேன் - சொல்கிறேன்!- தந்தை பெரியார்...
ஆத்திகப் பிரச்சாரமும், பக்திப் பிரச்சாரமும் செய்யும் பார்ப்பனத் தலைவர் திரு. இராஜாஜி அவர்கள் ‘இராமன் கடவுள்அல்லன், அவன் ஒரு வீரன்’ என்று ‘சக்ரவர்த்தித் திரு மகனார்’ என்ற தமது கட்டுரையில் தெளிவாக எழுதியிருக்கிறார்.சங்கராச்சாரியாரும், ‘இராமன் கடவுள் அல்லன், ஓர் ஆதர்சன புருசன். மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்தவன்’ என்று கூறி இருக் கிறார்.
காலஞ்சென்ற மறைமலைஅடிகள், டி.கே.சி., திரு.வி.க., வி.பி. சுப்பிரமணியப் பிள்ளை, பி. சிதம்பரம் பிள்ளை முதலிய புலவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ‘இராமன் கடவுள் அல்லன், இராமாயணம் கடவுள் கதை அல்ல’ என்று கூறி இருக்கிறார்கள்.வால்மீகியும் தமது இராமாயண இலக்கியத்தில், ‘இராமன் பெண்ணைக் கொன்றவன். பெண்ணை மான பங்கப்படுத்தியவன். மறைந்திருந்து எதிரிகளைக் கொன்றவன், துரோகக் காரியங் களுக்கு உடைந்தையாக இருந்தவன்’ என்றெல்லாம் கூறியிருக்கிறார். இவ்வளவு தானா?
காந்தியாரே, ‘நான் போற்றும் இராமன் இராமாயண இராமன் அல்ல என்றும், ‘காட்’ என்று சொல்லும் படியான உருவமற்ற, பெயர்ச்சொல் அல்லாத அதாவது, ஒரு வஸ்து அல்லாத சர்வசக்தியான இராமன் என்றும் கூறி இருக்கிறார்.ஆகவே, நானும் இராமாயணப் பாத்திரங்களில் ஒன்றான இராமாயண இராமனிடம் கடவுள் லட்சணப்படி ஏதாவது கடவுள் தன்மையோ, ஒழுக்கமோ, நாணயமோ, சாதாரண அறிவோ இருக்கின்றதா என்றும், இல்லா விட்டாலும் துரோகம், வஞ்சகம், பேடித்தனம், பேராசை, உள்ளன்று வைத்துப் புறம் ஒன்று பேசுதல் முதலிய கூடா ஒழுக்கக் குணங்கள் என்பவைகளாவது இல்லாமல் இருக்கிறதா என்றம் துருவித் துருவி பார்த்து, இல்லை என்ற முடிவுக்கே வந்திருக்கிறேன்.ஆகவே, அப்படிப்பட்ட ஒருவனை மக்கள் கடவுளாக, வழிகாட்டியாக, பிரார்த்தனை, பக்தி செலுத்தத் தக்க வனாகக் கருதக் கூடாது என்பதற் காகவே, “இராமாயண இராமனைக் கொளுத்துங்கள்” என்றேன்.
“இம்மாதிரிக் குணங்கள்” இல்லாத இராவணன் கொளுத்தப்பட்டான். ஆண்டுதோறும் கொளுத்தப்படு கிறான். இன்னும் ஆண்டுதோறும் மதுரை முதலிய இடங்களில் சமணர் கழுவிலேற்றப்பட்ட உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. மற்றும், தமிழ்நாட்டில் நூற்றுக் கணக்கான சைவக் கோயில்கள் உள்ள இடங்களில் ‘சூரசம்மார’ உற்சவங்கள் நடைபெறுகின்றன.இவை குறித்து அனேகருக்கு வெகுநாட்களாக மனவேதனை இருந்து வந்தும், அவற்றைச் சரியானபடி வெளியாக்கித் தடுக்க இதுவரை மக்களுக்கு வாய்ப்பில்லா மல் இருந்து வந்தது.
இன்றைய தினம் எனது சமுதாயத் தொண்டின் முதலானதும், முக்கிய மானதுமான சாதி ஒழிப்பை எடுத்துக் கொண்டால், இராமனின் முதல் செய்கையும், கடைசிச் செய்கையும் சாதியைக் காப்பாற்றப் பிறந்து, சாதியைக் காப்பாற்றிவிட்டுச் செத்ததேயாகும். நமது நாட்டில் சமுதாயச் சீர்திருத்த வேலையோ, பகுத்தறிவுப் பிரசாரவேலையோ எந்த ஒரு சிறிய அளவுக்கு நடக்க வேண்டுமானாலும், முதல் இலட்சிய சொல்லாக, சுலோகச் சொல்லாக, துவக்கக் குறியாக ‘இராமாயணம் - இராமன்’ அழித்து ஒழிக்கப்பட்டாக வேண்டும். இராமாயணப் பிரச்சாரம் ஒழுக்கக் கேட்டுப் பிரசாரம் ஆகும். எவ்வளவுதான் மத மவுடீகம் மக்களுக்கு இருந்தாலும், ஒரு மனிதன் தன்னைப் பெற்ற தாய், இரண்டணா ரேட்டுக்கு குச்சிக் காரியாக இருந்து தெருவில் போகிற சின்னப் பசங்களை எல்லாம் கையைப் பிடித்து இழுத்தால், மகன்காரனாகிய மனிதன், இழுக்கப்பட்ட பையனைப் பார்த்து, “ஏண்டா, எங்கம்மா இழுத்தால் திமிரிக்கிட்டு ஓடப் பார்க்கிறாய்?’ என்று பையனை அடித்தால் அவன் தாய்ப் பற்று, தாய் அன்பு, தாய் அபிமானம், தாய் பக்தி கொண்டவனாகிவிடுவானா?
உலகின் சாதாரண மக்களும் அந்த மகனைப் பற்றி என்ன கருது வார்கள் என்பதைச் சிறிது சிந்தித்துப் பார்த்தால், இராம பக்தர்களான தமிழர்களுக்கு நான் இராமனை எரிக்கும் தன்மையின் உண்மை விளங்காமல் போகாது. இம்மாதிரி ‘தியாகிகள்’ அதாவது, உயிருக்குத் துணிந்து உயிரினும் சிறந்ததான ‘மானத்’தைத் துறந்து (மற்றவற்றைத் துறந்தது என்பது மிக மிக அற்பமேயாகும்) மக்கள் பழியை எற்று, இக்காரியதைச் செய்யக் கூடியவர்கள் எளிதில் ஏற்பட மாட்டார்கள். ஏற்பட்டா லும் முன்வரமாட்டார்கள். முன் வந்தா லும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனுமதித்தால் மாற்றார் வாழவிட மாட்டார்கள். தமிழனுக்கு இன்று தன்மானம் தேவை. இது தாயினும் உயிரினும் சிறந்ததாகும். தாயை வெறுத்தாவது, உயிரைவிட்டாவது, மானத்தை - மனிதத் தன்மையை - ஒழுக்கத்தைக் காப்பாற்ற இராமனைக் கொளுத்தச் சொன்னேன், சொல் கிறேன்.
தம்பீ வா! நான் சீதையுடன் அனுபவித்ததைக் கேள்!
“அந்தரங்க மித்தரனான லட்சுமணன் சமீபத்திலிருந்தாலும் விரகதாபம் மேலிட்டு இந்திரிய சவாதீனமற்று பிரலாபித்தார்...” (பக்கம் 2)
காமம் வாட்டுகிறதே!
“சீதையை விட்டுப் பிரிந்து தவிக்கும் என்னைப் பலவித பட்க்ஷிகளும் மிருகங்களும் சப்திக்கும் வசந்த காலம் அதிகமாக வாட்டுகிறது.” (பக்கம் 4)
இங்கேதான் இன்பம் அனுபவித்தோம்!
“முன்னொரு சமயத்தில் சீதை ஆசிரமத்தில் இருக்கும் பொழுது இந்த பட்க்ஷியின் சப்தத்தைக் கேட்டு ஆசைமிகுந்த என்னை அழைத்துப் பலவிதமான இன்பங்களை அனுபவித்தாள், ஆகையால் அவளை விட்டுப் பிரிந்த பிறகே இது இவ்வளவு துக்கத்தைத் தருகிறது.” (பக்கம் 5)
தகுந்த நேரத்தில் கவர்ந்து சென்றானே!
“நாம் நகரத்திலிருக்கும் பொழுது இராவணன் சீதையை எடுத்துப் போகாமல், ஏகாந்ததத்தில் பரம சுகங்களை அனுபவிக்கத் தகுந்த இந்தக் காட்டில் வந்திருக்கும் பொழுது எடுத்துப் போனானே.” (பக்கம் 6)
அவளுடன் சுகிப்பவனே பாக்கியசாலி!
“இப்படிப்பட்ட அழகிய தேசங்களிலும் காலங்களிலும் பிரிய நாயகியுடன் இஷ்டபோகங்களை அனுபவிப்பவர்களே பாக்கியசாலிகள்.” (மேற்படி பக்கம்)
என்னைப் பார்த்தாலே சேர்ந்து சுகம் கொடுப்பாள்!
“என்னைப் பார்த்தால் உண்டாகும் ஆனந்தத்தால் மலர்ந்த கண்களுடன் சீதையும் இப்படியே என்னைச் சேர்ந்து சுகத்தைக் கொடுப்பாள் அல்லவா?” (பக்கம் 7)
பட்க்ஷிகளைப் பார் என் காமத்தை வளர்க்கிறது!
“பட்க்ஷிகள் சந்தோஷமேலிட்டு விளையாடுவதற்கு ஒன்றை ஒன்று கூப்பிடுவதைப் பார்த்தால் எனக்கு ஆசையை வளர்ப்பதற்கே இப்படிச் செய்கின்றன என்று எண்ணுகிறேன்.” (மேற்படி பக்கம்)
வசந்த ருதுவில் யாரிடமும் வசப்பட்டுவிடுவாளோ!
“ஜானகி இருக்குமிடத்தில் வசந்தகாலம் உண்டானால் அவளும் பிறர்க்கு வசப்பட்டு என்னைப்போல துக்கப்படுவாளல்லவா? அவளைக் கொண்டுபோய் வைத்திருக்குமிடத்தில் ஒரு வேளை வசந்த ருது உண்டாகாது. அவளிருக்குமிடத்தில் வசந்த ருது உண்டென்றே ஒன்புக்கொண்டாலும் பிறரால் பயமுறுத்தப்பட்டு துன்பப்படுகையில் அவள் என்ன சுகத்தை அனுபவிப்பாள்?” (மேற்படிபக்கம்)
சீதையிடம் சுகம் கண்டாலொழிய உயிர்வாழேன் சீதையிடம்!
“அழகுள்ள ஜானகியை அடிக்கடி ஞாபகம் செய்து எனக்கு அவளிடத்தில் உள்ள ஆசையை வளர்க்கின்றன. இந்த பம்பை நதியில் அடிக்கும் சகமான காற்றை சீதையும் என்னிடத்திலிருந்து அனுபவித்தால் ஒழிய நான் பிழைக்கமாட்டேன்.”
குறிப்பு: இவ்விதம் இராமன் சீதையின் மீது காமம் கொண்டு கதறுகிறான். அதுவும் யாரிடம்? தன்னுடைய தம்பி லட்சுமணனிடம் கூறுகிறான். இவன் எப்படியெப்படி, எங்கெங்கே சீதையுடன் சேர்ந்து படுத்திருந்தானோ அதைத் தன் தம்பியிடம் கூறுகிறான். மனிதப் பிறவியில்கூட யாராவது இப்படிக் கூற கேட்டிருக்கிறோமா? அதிலும் தன்னுடைய தம்பியிடமே இந்த விஷயங்களைக் கூறுகிறவன் கடவுளின் அவதாரம் என்பதாகக் காணமுடியவில்லை. இதனால், பார்ப்பனர்கள் கடவுளர்களின் யோக்கியதை, அவதாரங்களின் அநாகரிகம், பார்ப்பனப் பழக்க வழக்கங்கள் முதலியன விளங்குகின்றன.
இராமன் ஒரு இடத்தில் “நான் அயோத்தியில் இருக்கும் போது இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றிருந்தால் அக்கறை இல்லை. நானும் சும்மா இருந்திருப்பேன். ஆனால் இங்கு அனுபவிக்கத் தகுந்த யாரும் இல்லாத இந்த இடத்தில், நான் சீதையுடன் எப்பொழுதும் சுகம் அனுபவிக்க ஆசை கொண்டிருந்த சமயம் பார்த்துக் கவர்ந்து கொண்டு போய்விட்டானே” என்ற கருத்தில் துக்கப்படுகிறான்.
ஆகவே, இராவணன் சீதையை அயோத்தியிலேயே தூக்கி சென்றிருந்தால் இராமன் சும்மா இருந்திருப்பான் என்றும் தெரிகிறது. பாலம் அமைத்து மீட்டிருக்க மாட்டான் என்பதும் தெரியவருகிறது. மேலும் இராமன் காட்டுக்கு வந்தது; சீதையுடன் சதாகாலமும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக வந்திருப்பான் என்றும் தெரிகிறது.
இப்படிக் கடவுள் அவதாரத்தைப் பார்ப்பனர்கள் கொஞ்சமும் அறிவில்லாத முறையில் சித்தரித்து எழுதுவதால், கடவுளுக்கும், கடவுள் அவதாரம் என்பதற்கும் எந்த அளவில் பெருமையைக் கொடுப்பதாக இருக்கிறது என்பதைச் சிந்தியுங்கள்.
ஆரியர்கள் பொய் சொல்வதில் மிகத் துணிவுள்ளவர்கள் எப்படியெனில்:
அவர்கள் குறிப்பிடும் காலக் கணக்கெல்லாம் யுகம், சதுர்யுகம். லட்சம் சதுர்யுகம், கேரி சதுர்யுகம் என்றுதான் குறிப்பிடுவார்கள்.
அவர்களது ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள் என்பவர்கள் எல்லாம் கடவுள்களுக்கே சாபம் கொடுக்கக் கூடியவர்களாகவே இருப்பார்கள்.
தாசிகள்கூட பெரிய தவ சிரேஷ்டர்களுக்குச் சாபம் கொடுப்பார்கள்.
ஆண்களைப் பலாத்காரம் செய்த விபசாரிகளையும் பதிவிரதை லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார்கள்.
மூன்று அடி உயரமுள்ள குரங்கு, 1000 அடி உயரம் தன்னை உயர்த்திக் காட்டும்.
10 அல்லது 150 பவுண்டு எடையுள்ள குரங்குகள் லட்சம், பத்து லட்சம், கோடி, நூறுகோடி பவுண்டு எடையுள்ள மலைகளைத் தூக்கி வீசி எறிந்ததாகவும் அதனால் பல லட்சம் பேர்கள் செத்ததாகவும் எழுதுவார்கள்.
இப்படியாக, இவை போன்ற ஏராளமான பொய்கள், புனைச் சுருட்டுகளை இராமாயணத்தில் ஏராளமாகக் காணலாம்.
(மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் சி.ஆர்.சீனிவாசய்யங்கார் மொழிபெயர்த்த வால்மீகி இராமாயணத்தில் உள்ளது)
Thursday, October 4, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment