Thursday, October 4, 2007

தமிழ்ச் சூத்திரருக்குப் பகலிலும் திறக்காத நீதிமன்றக் கதவ

தமிழ்ச் சூத்திரருக்குப் பகலிலும் திறக்காத நீதிமன்றக் கதவு, வைதீகப் பார்ப்பனருக்கு நடு இராத்திரியிலும், விடுமுறையிலும் திறந்து கொண்டபோது நம்மால் இந்தச் சூதை அவ்வளவு எளிதாக விட்டு விட
முடியவில்லை.


இந்திய உச்ச நீதிமன்றத்தின் சாதி, மத வெறிக்கு எடுத்துக் காட்டுதான்உச்சநீதிமன்றம் நள்ளிரவு நீதி மன்றமாக மாறியது. பணம், புகழ்,செல்வாக்கு என்ற இவற்றோடு சாதி இருந்தால், பேய், பிசாசுஆடும் நேரத்திலும் நீதிபதிகள் எழுந்து ஆடுவார்கள் என்பதற்கு எடுத்துக்
காட்டுதான் அகர்வால், நலேக்கர் என்ற இருவர் ஆடிய பேயாட்டம்.

தமிழ்நாட்டில் இப்பொழுது என்ன ஆயிற்று?

2 இலக்கம் அரசூழியர்களை வேலையை விட்டு அனுப்பி விட்டார்களா?பொய்வழக்கு போட்டு பலபேரை பழிவாங்கினார்களா?அரசு நிலங்களை வாங்கி அரசையும் மக்களையும் ஏமாற்றினார்களா? நீதிமன்றத்தில் பொய் சொன்னார்களா?

இல்லை நாட்டிலே ஆட்சி என்ற பெயரில் தலைவர்களையும்மக்களையும் அடித்து உதைத்து பேயாட்டம் போடுகிறார்களா?

இல்லை, கங்கு கரையில்லா கட்டடம் கட்டி விட்டு அதை இடித்துவிடுவார்களோ என்று அங்கு போய் பிடாரி போல் உட்கார்ந்து கொண்டு காவல் காக்கிறார்களா? இல்லையே!

சேதுக்கால்வாய் திட்டத்தின் குறுக்கே இராம மந்திகள் ஆட்டம் போட்டுதமிழ்நாட்டின் நற்பலன் ஒன்றை நாசமாக்கிவிட்டன.

பிள்ளையைச் சுமப்பவளுக்குத்தான் அதன் வலி தெரியும் என்பது போலதிட்டம் ஏறத்தாழ கைவிட்டுப் போன நிலையில் முட்டாள்களின்செயலுக்குக் கொந்தளித்துக் கண்டனம் விடுகிறார் கலைஞர்.

உடனே பா.ச.கவின் நரபலி அணி கலைஞரின் தலையைவெட்டு, நாக்கை அறு என்று சொல்கிறது.

ஏறத்தாழ செத்த பாம்பாய் கிடந்த சங்கராச்சாரி, மெல்ல நெளிந்து சேது
முனையலை நிறுத்திய சுப்பிரமணியன் சாமி என்ற வஞ்சகரைப் பாராட்டிச்சிறப்பு பூசை செய்யப் போகிறேன் என்று கூறுகிறார்.

முரளிமனோகர் சோசி என்ற நரபலிக் கட்சிக்காரர் "வரும்படி போய் விடும் என்ற கவலையில் கருணாநிதி பேசுகிறார்" என்று தரம் தாழ்ந்துபேசுகிறார்.

அதையும், அதனுடன் சிலவற்றை சேர்த்தும் தமிழ்நாட்டின் தலைமைஅவலட்சணமான நரகலும் கூறுகிறது.

பல பயன்களை தமிழகத்துக்கும், தென்னகத்துக்கும், இந்தியாவிற்கும் அள்ளித்தரக்கூடிய சேது முனையல் "குரங்குகள் கையில்
அகப்பட்ட பூமாலை" போல சீரழிகிறது.

நாடு முழுதும் சாதி வெறியும் மத வெறியும் தூண்டப்படுகிறது.குள்ளநரி போன்ற வஞ்சகம் கொண்ட சோ தொடங்கி ஒவ்வொரு நரபலிக்
கூட்டணியும் "மற்ற மதத்தினரை இப்படிக் கருணாநிதி சொல்வாரா" என்று மதச்சண்டையை தூண்டி விடுகிறார்கள்.

சேது முனையலின் தேவையையும், தமிழகத்துக்கு இராமரின் மந்திகளால்இழைக்கப்பட்டிருக்கும் துரோகத்தை எடுத்துரைக்கவும், நடுவணரசிற்கும்இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேமாநிலந் தழுவிய கடையடைப்புக்கு மக்களாட்சி முறைப்படிஅறிவிப்பு கொடுத்து, அதுவும் சனி, ஞாயிறு, செவ்வாய் விடுமுறைக்கு உட்பட்ட திங்களன்று செய்ய முனைந்தார் கலைஞர்.

உடனே உயர்நீதிமன்றம் சென்றார்கள். அவர்கள் தடை சொல்லவில்லை.

உச்சநீதி மன்றத்திற்கு நடு இராத்திரியில் போர்வையைப் போட்டுப்போய் நீதிபதிகளோடும் போர்த்திக் கொண்டு வழக்கு தொடுத்துஇராவோடு இராவாக என்பார்களே அப்படி இருட்டு அரசியல்ஒன்றைச் செய்திருக்கிறார்கள் சழக்கர்கள்.

நீதிபதிகள் பொங்கி எழுகிறார்கள்... ஆக்ரோசமாக அறிக்கை விடுகிறார்கள்.
சரி கடையடைப்பு செய்யவில்லை - உண்ணா விரதம் இருக்கப் போகிறோம் என்று தமிழர்கள் சொன்னால், அதையும் நீதிமன்றத்தைமீறிய செயல் என்று சிம்ம கர்ச்சனை ஒன்றை எழுப்பி ஆட்சியைக் களை என்று நடுவணரசிற்கு நெருக்கினைக் கொடுக்கிறார்கள்.

நடந்த ஒவ்வொன்றையும் மநுதர்மத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால்அப்படியே இந்த ஊளையர்களின் செயலோடு ஒத்துப் போகிறது.

அ) மநுதர்மப் படி "நீதிபதியானவன் தனக்குட்பட்ட கிராமாதிபதி,முதலானவர்களை, தானாகவே அந்தந்த இடத்திற்குச் சென்றும்,வேவுக்காரர்களின் மூலம் விசாரித்தும் எதனையும் முடிவு செய்யவேண்டியது".

- மநுதர்மம்-7 ஆம் அத்தியாயம், 122 ஆவது சுலோகம்.

இதைக் கண்ணுறும்போது, மக்களாட்சி அடிப்படையே இங்கு இல்லை.அதனால்தான் உச்சநீதி மன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக கடையடைப்பு,உண்ணாநோன்பு போராட்டங்களுக்குத் தடை போடுகிறார்கள்.
மக்களாட்சியின் தத்துவங்களுக்கு எதிராக, மக்களால் ஏற்படுத்தப்பட்டசட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களுக்கு தடைபோடஇவர்கள் யார்?

பாதிக்கப்பட்டவன் வைதீகத்தில் வளர்ந்த ஊழல் வியாதியோடுப்போராடிச் சாவானா? இவர்கள் மட்டும் வாழ்வார்களா?

மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, வயிறு புடைக்கத்தின்று வாழும் இவர்கள் மக்களாட்சிக்கு எதிராக சட்டம் போடுவார்களாம்அதைப் பார்த்து பல நாய்களும் பல்லிளிக்குமாம்!

மக்களின் அடிப்படை உரிமையைப் பறிக்க இவர்கள் யார்?

நீதிபதிகளுக்கு ஏன் ஆவேசம் வரவேண்டும்?

ஆ) மநுதர்மப் படி "நீதிபதியானவன் வழக்காளியின் குரல், வதனம், கீழ்ப்பார்வை, வியர்வை, மயிர்க்கூச்சு, கைதட்டல், கண்ணோட்டம்" போன்ற இவற்றால் அவன் உள்ளப்பாங்கை உணர்ந்து தீர்ப்பளிக்க வேண்டும்."

- மநுதர்மம்-8 ஆம் அத்தியாயம், 25 ஆவது சுலோகம்.

தீர விசாரிக்க எல்லாம் வேண்டாம். தமக்கு வேண்டிய ஆள் என்றால் அவசர அவசரமாக கோழி கூப்பிடும் முன்னரேதீர்ப்பெழுதி விடலாம். விசாரிச்சா நேரம் ஆகிடுமே!!

நாலேக்கரும், அகர்வாலும் இந்த அடிப்படையில்தான் தி.மு.க
கூட்டணியினரின் கடையடைப்பை எதிர்த்த வழக்கை
அணுகியிருக்கிறார்கள்.

இல்லாவிடில், இவ்வளவு அவசரமாக இந்த வழக்கை விசாரிப்பார்களா?
அந்த இராத்திரியின் சில மணி நேரங்களில் இவர்கள் சரியாகமக்களாட்சி அடைப்படைகளையும் உரிமைகளையும் ஆய்ந்திருப்பார்களா?

வந்திருக்கும் வழக்காளி யார்? ஓ...வைதீக, அதுவும் பார்ப்பனவழக்காளியா? பதறாதே, யாரை எதிர்த்து வழக்குப் போடுகிறாய்?

நாலாம் வருணத்து கருணாநிதியை எதிர்த்தா? - அப்ப சரியாத்தான்இருக்கும்... "கடையடைப்புக்கு தடை விதிக்கிறேன்"என்ற அளவிலேயே விசாரனை போர்வைக்குள் முடிந்து பொதுமன்றத்தில்அறிவிக்கப் பட்டிருக்கிறது.

வாதாட்டம் உண்டா?

கடையடைப்பு நடத்திய பின்னர், உண்மையில் அது சட்டத்திற்குப் புறம்பானது என்றால், ஆட்சியைக் கலைக்க உத்தரவிடலாமே - ஏன் செய்யவில்லை?

அவ்வாளவு அவசரத்திற்கு,
இது என்ன சேதுக்கால்வாயை எதிர்த்துசிங்களவன் போருக்கு வந்துவிட்டானா?

சீனாக்காரன் சீறி வருகிறானா?

பாக்கித்தானில் இருந்து பல்லாயிரம் குண்டுகள் பாய்ந்துவருகின்றனவா?

ஏன் நீதிபதிகள் அவசரப்படவேண்டும்?

மீண்டும் மேலே மநுநீதியைப் படித்துப் பாருங்கள்.
விளக்கம் புரியும். யார்வந்திருக்கிறார்கள், எந்த நேரத்தில்
வந்திருக்கிறார்கள், எந்த நோக்கத்திற்காக வந்திருக்கிறார்கள், என்றறிந்து
ஆங்கே அணுகப்பட்டிருக்கிறது.

சட்டம் நூல் அறிவு ஞாயம் என்பதெல்லாம் கிடையாது.

இ) மநுதர்மப்படி, "சான்றுகள் முரண்பட்டால், அதிகம் எதுவலியுறுத்தப் படுகிறதோ அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.சமனளவில் இருந்தால் பார்ப்பனர் கூற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்".

- மநுதர்மம்-8 ஆம் அத்தியாயம், 25 ஆவது சுலோகம்.

இந்தக் கடையடைப்பைப் பலத்தைக் கொண்டு தடுக்காவிட்டால், சேதுக்கால்வாய் என்ற ஒன்றிற்கு ஆதரவுக் குரல் அதிகரித்துவிடும்என்பதனை வலியுறுத்திய வைதீகப் பார்ப்பனீயர்களின் பேச்சைஅப்படியே நீதிமன்றம் கேட்டிருக்கிறது. தடை வாங்கியவர் யார் யார்?

சுப்பிரமணியன் சாமியும் செயலலிதாவும் தானே? அவர்களுக்கு ஏதுவாகஇருந்தது யார்? வைதீக நரபலிக் கட்சிதானே?

இல்லாவிடில் நீதிமன்றம் நள்ளிரவில் திறக்க வேண்டிய அவசியம் என்ன?
இதேபோலத்தான் கருணாநிதியை நள்ளிரவில் நீதிபதியை எழுப்பி கைது
செய்தார்கள் ? மறந்தா போய் விடுவோம்!!

ஈ) மநுதர்மப் படி, "ஒருவன் பார்ப்பனரைக் காக்கும் பொருட்டுபொய்ச்சத்தியம் பண்ணினாலும் பிழையில்லை".
- மநுதர்மம்-8 ஆம் அத்தியாயம், 112 ஆவது சுலோகம்.

இப்பப் புரியுதே நமக்கு, ஏன், செயலலிதா "நான் போட்ட கையெழுத்துஇல்லை" என்று உச்ச நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லியும்நீதிமன்றம் அவரை கண்டு கொள்ளவில்லை என்று!

உ) மநுதர்மப் படி, "பார்ப்பனரைத் தவிர்த்த ஏனையோரை ஒறுக்கத்தக்கவிடம் பத்து என்றும், பார்ப்பனரைக் காயப்படுத்தாமல் துரத்தி விடவேண்டும் என்றும் மநு கூறியுள்ளார்".

- மநுதர்மம்-8 ஆம் அத்தியாயம், 124 ஆவது சுலோகம்.

என்ன, டான்சி நில ஊழல் வழக்கும், அதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்நினைவுக்கு வருகிறதா? வரும்!

"அம்மா நீங்க ஊழல் செஞ்சிருக்கீங்க; பரவாயில்லை, அந்தநிலத்தை திருப்பிக் கொடுத்து விட்டு, கண்டுக்காமல் ஓடிடுங்க"என்று நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சொன்னதை நாம் மறந்து விட்டோமா?

ஊ) மநுதர்மப் படி, "ஒரு நாடு அல்லது கிராமம் இவற்றின் வியாபாரி
மற்றும் பார்ப்பனர், ஒரு தேவாலயம் பற்றி செய்து கொண்டிருக்கிறஏற்பாட்டை ஒருவன் மீறினால், அவனை அவ்விடத்தில் இருந்துவெளியேற்ற வேண்டியது"

- மநுதர்மம்-8 ஆம் அத்தியாயம், 219 ஆவது சுலோகம்.

உச்ச நீதிமன்றம் இன்று தமிழக அரசைக் கலைக்க வேண்டும்,என்று எந்த குடியாட்சித் தன்மையும் இல்லாமல், வைதீக மந்தங்களின்பேச்சைக் கேட்டு தீர்ப்பு கூறினதே அது எதன் அடிப்படையிலாம்?

நாட்டில் தீங்கு நடக்கிறது என்றா? நல்லது நடக்கக் கூடாது என்று!!

இராமர் கட்டிய பாலம் 17 இலட்சம் ஆண்டு ஆயிற்று என்றும்,அதில் கப்பல் நுழைய வழி தர மாட்டேன் என்றும் அடம் பிடிக்கும்இவர்களையும், நாட்டுக்கு நலன் அளிக்கும், தமிழர்களுக்கு நலன் அளிக்கும் என்றும் முயலும் கலைஞரின் அரசை கலைக்க வேனண்டும்என்று சொல்லும் இவர்களையும், இந்த மநுநீதியையும் எண்ணிப் பார்க்க நமக்கு சிந்தை குறைவா என்ன?

"டிசுமிசு, டிசுமிசு" என்று குரைப்பெல்லாம்இந்த மநுதர்மப்படிதான்.

எ) இதெற்கெல்லாம் உச்சமாக, மநுதர்மப் படி, "நாலாம் வருணத்தவன்துவிசர்களை வைதால், தாழ்விடமான காலில் தோன்றிய அவனுடைய நாக்கினை அறுக்க!"..

- மநுதர்மம்-8 ஆம் அத்தியாயம், 270 ஆவது சுலோகம்.

நம்மூர் கட்சிகளில் எல்லாம் மகளிர் அணி, இலக்கிய அணி,இளைஞர் அணி, விவசாயிகள் அணி என்றுதான் இருக்கின்றன.ஆனால் பா.ச.க, இரா.சு.ச, வி.இ.ப இவர்களிடம் "நரபலி அணி" என்று ஒன்று இருப்பதையும், அவை கழுத்தறுப்புக் கட்சிகள் என்றும்இப்பொழுதுதானே கண்டோம் அரசியலில்?

நாம் இப்போதுதான் உணர்கிறோம் - ஆனால் நமது முன்னோர்கள் கால
காலமாக கண்டு வந்ததெல்லாம் இந்த மநுவின் நீதிகளைத்தான்.

ஏ) கண்ணுக்கு கண், உயிருக்கு உயிர் என்ற கோட்பாட்டை முழுமையாகக்
கொண்டதுதான் வைதீக மதம். என்ன நம்பமாட்டேன்கிறீர்களா? இல்லை இல்லை வைதீகம் அன்பைப்பொழியும் மதம் என்று சொல்கிறீர்களா? இதோ படியுங்கள் மநுதர்மத்தின் எட்டாம் அத்தியாயத்தின் 125 ஆவது சுலோகம்.

"குறி, வயிறு, நா, கை, கால், கண், மூக்கு, காது, உடல், பொருள் போன்ற எந்த உறுப்பால் குற்றம் இழைக்கப் படுகிறதோஅந்த உறுப்பை ஒறுப்பதோ, அடிப்பதோதான் தக்க தண்டனைஆகும்"

இந்த மநுதர்மத்தின் எங்காவது இராமன் வந்தானா? இல்லை.வேறு ஏதாவது கடவுள் வந்ததா? இல்லை.

இருப்பது முழுதும் வேத அடிப்படையில் வந்த வேதாந்திகளின்சுவடுகள்.
சேது முனையல் பற்றி கலைஞர் சொன்னதற்காக வருத்தப்படஇராமரை

உண்மையில் கும்பிடுபவர்களுக்கு எதுவும் இல்லை.
சோ இராமசாமியும், அவரின் தொங்கட்டான்களும், இன்ன பிறரும் பகவத்கீதையில் இப்படி எல்லாம் சொல்லப் படவில்லை என்றுசொல்வது திசை திருப்புவதற்காக. எங்கே இருந்து இப்படிஇந்தக் குரல் ஒலித்தது என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.அதைச் சொல்லாமல் பகவத் கீதையில் இப்படி இல்லை என்று அவர்கள் சொல்லி விட்டு நடிக்கிறார்கள்.

அதைக்கண்டுஏமாறாதீர்கள்.

உண்மை இதுதான். வைதீகத்தின் கொலைவெறி நெறிகள் போதிப்பவைவஞ்சம், சூழ்ச்சி, கொலை என்பவைதான்.

மேலும் ஒன்றைச் சொல்கிறேன். அரிச்சந்திரா திரைப்படம் பார்த்தீர்களா?அதில் அரிச்சந்திர அரசனிடம் ஒரு வேடன் வழக்கு கொண்டு வருகிறான்.யார் மேல் என்றால் ஒரு முனிவர் மேல். அதுவும் விசுவாமித்திர முனியின் அன்புக்குரியவர் மேல்.

அரிச்சந்திரன் விசுவாமித்திரனின் சீடன். அப்படியிருந்தும் அவன்சொல்கிறான் "இரிசியான தங்களை விசாரிப்பதற்காக நான்மிகவும் வேதனையடைகிறேன். என்னை மன்னிக்க வேண்டும்.ஆயினும் எனது கடமை நான் செய்கிறேன்"

என்று சொல்லி வழக்கைத்தொடர்ந்து விசாரிக்கிறான்.

ஆனால், இங்கே இந்திய உச்ச நீதி மன்றத்தில் என்ன நடந்தது?

சங்கராச்சாரியார் தன் மேல் சாட்டப்பட கொலை வழக்கில்உச்ச நீதிமன்றத்தில் நிற்கிறா. நீதிபதி எழுகிறார்.
"நான் சங்கராச்சாரியாரின் பக்தன். என்னால் அவரை விசாரிக்க முடியாது"என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விடுகிறார் நீதிமன்றத்தை விட்டு,

"பந்த்" தேவையா என்று வலைப்பதிவுகளில் கதை கதையாக எழுதும் மாலன் போன்ற எழுத்தர்கள்(?), தினமலர் மற்றும் தினமலரை விட கீழாகப்
போய்க்கொண்டிருக்கும் தினமணி போன்ற மிடையக்காரர்கள்
சோ இராமசாமி போன்ற தீவிர வாதிகள் எல்லாம்"உச்ச நீதி மன்றத்தின் சங்கராச்சாரியார் பற்றிய செய்கைக்கு"என்ன சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டின் வளர்ச்சியின்மேல் அன்பும் ஆசையும் கொண்டோர்
இதனை ஓர்ந்து பார்க்க வேண்டும். நமக்கு எந்த சாதியையும்தாழ்வு படுத்த வேண்டும் என்பதில்லை. ஆனால், வைதீகச் சழக்கின்ஆழத்தைக் காண்பிக்கவும், அதனால் தமிழ்நாட்டிற்கும் தமிழர்க்கும்ஏற்படும் அல்லல்களை எடுத்துக் காண்பிக்கவும், நரபலி வரைசென்று விட்ட, அதுவும் பிடித்தாலும் பிடிக்கா விட்டாலும்தமிழகத்தின் செல்லப் பிள்ளைகளில் ஒருவரான கலைஞர் கருணாநிதியைநரபலியாக பா.ச.கவும் அது பின்பற்றும் வைதீகமும் கேட்கிறதென்றால்அதன் ஆணவத்தை நாம் எதிர்த்து வைதீகத்தை விட்டொழிக்க வேண்டும்.

தூய தமிழ் நெறிகளான சைவத்தையும், வைணவத்தையும்தேவாரம், திருவாசகம், திருமந்திரம், நாலாயிரப்பனுவல், திருக்குறள்ஆகியவற்றைக்

கற்று சமய நெறி பேணுவோம்.

வைதீகத்தை தொலைத்துக் கட்டுவோம்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

4 comments:

Anonymous said...

Mr. Elangovan, Really u made very worthful points...i would like to appreciate you..

keep write.

Anonymous said...

நண்பருக்கு..

சரியான நேரத்தில் சரியான மேற்கோள்களை பிரசுரித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

nayanan said...

அன்புடையீர்,

எனது கட்டுரையை இங்கு எடுத்து வெளியிட்டமைக்கு மிக்க நன்றி.

அன்புடன்
நாக.இளங்கோவன்
http://nayanam.blogspot.com

ttpian said...

what to do,we are in tamilnadu;we prefer to be a slave to centre(Delhi)despite the fact,we are not given any importance:to cast the votes,every one need tamil community!
But,post election,elected party will take tamil community for a ride-this is what we have been seeing,since 1950's