Friday, October 12, 2007

வந்தேறிய வரலாற்றை மணல் திட்டில் மறைக்கப் பார்க்கும் பார்பன சூழ்ச்சி !!

பார்பனர்கள் இந்தியாவிற்குள் கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறிய ஆரியர்கள் என்பது வரலாற்று உண்மையாக ஆகிவிட்ட நிலையில், தாம் வந்தேறிகள் என்பதை மறைப்பது எப்படி என்பதில் உடனடி உபாயம் கிடைக்காததால் பலவித அர்சனைகளை ஆங்கிலேயே மெக்கல்லனுக்கு செய்துவந்தார்கள். வெள்ளையனை பார்பனர்கள் வெறுத்து விடுதலை போராட்டத்திற்கு குதித்தற்கும் வெள்ளையர்கள் இவர்களை வந்தேறிகள் என்று அறிவித்ததாலேயே தான். அதற்கு முன்பு வெள்ளையர்களுக்கு அடிவருடியவர்களில் பெரும்பாண்மையினர் பார்பனர்களே. வெள்ளையர்கள் பார்பனர்களை வந்தேறியவர்கள் என்று பகிரங்கப்படுத்திய பின், நூற்றாண்டுகாலம் குடுமியை அவிழ்த்தும் முடிந்தும் யோசித்ததில் வந்தேறிகள் என்ற வரலாற்றை மறைக்க வழியே தெரியவில்லை.

நிலமை இப்படி சென்று கொண்டிந்த போது கடந்த ஐந்தாண்டுக்கு முன் நாசா செயற்கைகோள் வழியாக எடுத்த இலங்கை - இந்திய கடல்பகுதியில் ஆதாம் பாலம் எனப்படும் மண்ல்திட்டின் புகைப்படம் வெளியானது. அதற்கு முன்பு அப்படி ஒன்று இருப்பதோ, அது இராமர் பாலம் என்று சொல்லப்பட்டு வந்தது இல்லை. அந்த புகைப்படத்தை வைத்து நாசாவில் வேலை பார்க்கும் சர்வசேத பார்புகள் அது இராமர் பாலம் என்று கதை கட்டினால் பார்பனர்களும் பார்பன இலக்கியமான இராமாயணமும் இந்தியாவில் 15,000,00 (பதினைந்து லட்சமாம்) ஆண்டுகளாக இருப்பவை என்று கதை கட்ட முடியும் என்று திட்டுமிட்டு, மணல் திட்டை இராமரின் கயிற்றுப் பாலமாக திரித்து சொல்கின்றன, இராமயண கதைப்படி குரங்குகள் அமைத்த பாலம் மிதந்ததாம்.

இந்து உணர்வை தூண்டிவிட்டால் அரசாங்கத்தின் சேது சமுத்திர திட்டத்தை நிறுத்திவிடலாம் என்பதோ, அந்த பாலத்தை உடையாமல் தடுத்துவிடலாம் என்பதோ தற்போதைய உண்மையான நோக்கம் அல்ல. பார்பனர்கள் இந்தியாவை சேர்ந்த முன்னாள் குடிமக்கள் என்று காட்டுவதற்காக செய்யப்படும் மலிவு அரசியல் இது. இவர்கள் என்னதான் இதை தடுத்து நிறுத்தினாலும் இவர்கள் வந்தேறிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டதை இனி மாற்ற முடியாது. ஆனால் பாஜாகவுக்கு இந்து ஓட்டுகள் விழும் என்ற மற்றொரு எதிர்பார்ப்பை வேண்டுமானால் இந்த மலிவான மணல் திட்டு அரசியலால் உணர்ச்சி வசப்பட்டு ஏமாந்த இந்துக்களால் கிடைக்கலாம்.

தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

தந்தை பெரியார், பார்ப்பனர்களை, வைதீகப் பார்ப்பனர் என்றும், லௌகீகப் பார்ப்பனர் என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பார். ஞாநி ஒரு லௌகீகப் பார்ப்பனர். அவர் அரசியலை அலசுவார், சமூகநீதி பேசுவார், அறிந்தும் அறியாமலும் இருக்கும் பாலியல் உணர்வுகளைப் பாடமாய் நடத்துவார், எங்கு சென்றாலும், தன் முற்போக்கு முகத்தை மறக்காமல் எடுத்துச் செல்வார்.

ஆனால், அவருக்குள் புதைந்து கிடந்த திராவிட இயக்க எதிர்ப்பு, கலைஞர் எதிர்ப்பு போன்றவை பூனைக்குட்டி வெளியே வருவது போல் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.

முரசொலி மாறனுக்கு அஞ்சல்தலை வெளியிட்டது பற்றி எழுதுகையில், தேசிய விலங்குகளுக்கு எல்லாம் கூட அஞ்சல்தலை வெளியிடப்படும்போது மாறனுக்கும் வெளியிட்டால் என்ன என்பது போல் குறிப்பிட்டிருந்தார். நெஞ்சு நிறைய அப்பிக்கிடக்கும் பகையும், வன்மமும் அந்த வரிகளில் அப்படியே வெளிப்பட்டன.

கண்ணகி சிலையைக் கரடி பொம்மையோடு ஒப்பிட்டுத் தன் மேதாவித் தனத்தை ஒருமுறை வெளிப்படுத்தினார். இப்போது ஆனந்த விகடனில், ஸ்டாலினுக்கு இருக்கும் எல்லாத் திறமையும் பரிதி இளம்வழுதிக்கும் உண்டுதானே என்று எழுதி, தி.மு.க.விற்குள் சிண்டுமுடியும் சின்னத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

என் குடும்பத்தில் தலித் மருமகள் இருக்கிறார் என்பது போன்ற வெற்று அறிக்கைகள் விடுவதைக் கைவிட்டுவிட்டு, எங்கள் கட்சியின் சார்பில் ஒரு தலித் முதலமைச்சராக்கப்படுகிறார் என்று கலைஞர் அறிக்கைவிட வேண்டுமாம், ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஞாநி கனவு காண்கிறாராம். அடடா, தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

அண்மையில் அவருக்கு ஆனந்தவிகடனில் ஒரு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம், யாராவது ஒரு தலித் நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று அவர் சொன்னதாகத் தெரியவில்லை. கனவெல்லாம், கலைஞரைப் பற்றி மட்டும்தான் போலும். குறைந்த பட்சம் ஜெயலலிதாவிடம் இருந்தும் அப்படி ஓர் அறிக்கை வர வேண்டுமென்று அவர் கனவு கண்டிருக்கலாம்.

தங்கள் நெஞ்சில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் முரடர்கள்தான் நாமெல்லாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பக்குவமெல்லாம் நம்மில் பலருக்கு இன்னும் கைவரவில்லை. பாருங்கள். அது ஞாநிக்கு எவ்வளவு அழகாய்க் கைவருகிறது என்று!

தி.மு.க. விற்குள் உட்கட்சி சண்டையும், குழப்பமும் வரவேண்டும் என்னும் தன் ஆசையை நேரடியாகச் சொல்லும் முரட்டுத்தனம் அவரிடம் இல்லை. பரிதி முதலமைச்சராக வரவேண்டும் என்று கனவு காண்பதாகச் சொல்லிவிட்டால், பிறகு அதை எதிர்ப்பது கடினம். எதிர்ப்பவர்களைத் தலித் விரோதி என்று சொல்லிவிடலாம், ஞாநியின் கனவு பலிக்கும் வரையில், தி.மு.க.விற்கும் தலித் விரோதக் கட்சி என்று முத்திரை குத்திவிடலாம்.

இப்படிப் பல்வேறு சித்து விளையாட்டுகளை ஞாநி அந்தக் கட்டுரையில் செய்து பார்த்திருக்கிறார்.

ஆனாலும், வரலாறு நமக்கு ஓர் உண்மையைச் சொல்கிறது. திராவிட இயக்கத்தில் தலித் தோழர்களுக்கு எப்போதும் இடம் இருந்திருக்கிறது என்பதே அந்த உண்மை. மீனாம்பாள், சிவராஜ், தொண்டு வீராசாமி, சத்தியவாணி முத்து தொடங்கி இன்று வரை அதன் தொடர்ச்சியை நம்மால் காணமுடியும். அண்மையில் கூட தன் பேரனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்த ஆ.இராசாவைத்தான் அமைச்சராக ஆக்கியுள்ளார் கலைஞர். தமிழக அரசிலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமின்றி, பால்வளத்துறைக்கும் ஒரு தலித் நண்பரே அமைச்சராக உள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு, தலித் மக்களின் முன்னேற்றத்தில் தி.மு.க. அக்கறை காட்ட வேண்டும் என்பது போல் அறிவுரை சொல்வதும், கனவு காண்பதாய்க் கதைவிடுவதும், கிழிந்துதொங்கும் அவரது முற்போக்கு முகமூடியையே நமக்கு அடையாளம் காட்டுகிறது.

பரிதிஇளம்வழுதியின் மீது நமக்கெல்லாம் இல்லாத பாசம், திடீரென்று அவருக்கு எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது? இதுவரை பரிதியின் திறமையைப் பாராட்டி அவர் எத்தனை இடங்களில் எழுதியும் பேசியுமிருக்கிறார்? எந்தெந்த வகைகளில் ஸ்டாலின் மற்றும் பரிதியின் திறமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்? பொத்தாம் பொதுவில். போகிற போக்கில், ஒரு குற்றச்சாட்டை வீசிவிட்டுப் போவதென்பது, எவ்வளவு உள்நோக்கமுடையது என்பதை நாம் உணரவேண்டும்.

தந்தை பெரியார் ஓர் இடத்தில் சொல்லுவார், வைதீகப் பார்ப்பனர்களைவிட லௌகீகப் பார்ப்பனர்களே ஆபத்தானவர்கள் என்று!

-சுபவீ -

இந்துத்துவ வியாதிகளே-அழிவை சந்திக்கப் போவது நீங்களே !!

சேதுசமுத்திர திட்டம் எனப்படும் 150 ஆண்டுகால கனவு திட்டம் செயல்வடிவத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, நாசாவின் புகைப்படைத்தை இராமர் பாலம் என்று சொல்லி கதை கட்டி பார்பனிய பாசிச வாதிகளான இந்துத்துவ வாதிகள், அதனை எப்படியும் தடுக்க முயன்று முடியாமல் போகவே கலைஞரின் பேச்சை தொடர்ந்து கொலை மிரட்டல் விடும் அளவிக்கு சென்று இருக்கின்றன. இந்தியாவின் புதிய பார்பனிய பின்லேடன் இராம் விலாஸ் வேதவாந்தி, இந்து இளைஞர் அமைப்பை தூண்டுவிட்டு 'பகவத் கீதை' என்னும் புனித(?) நூலில் சொல்லப்பட்டுள்ள தண்டனையை, ஷங்கரின் அன்னியன் ஸ்டைலில் நிறைவேற்றச் சொல்லி இருப்பதாக தகவல் வருகிறது. கலைஞரின் ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்பது வேறு விசயம்.

இந்த திட்டம் நிறைவேறினால் திட்டமிட்டபடி தமிழகம் பயன் பெறும். தூத்துக்குடி தொழில் வளர்ச்சி பெருகும். பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இன்னும் பல நன்மைகள் கிடைக்கும். நிறைவேறாமல் போனால்,

தமிழகம் மட்டுமே பெரியார் வழியில் பார்பன விஷப்பற்களை பிடுங்கி எறிந்து அரவங்களின் ஆரவார சீற்றத்தை அடக்கியிருக்கிறது. இந்த திட்டம் நிறைவேறாமல் போனால் பார்பனிய பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளை இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களும், பழங்குடியினரும் உணர்ந்து கொள்வார்கள். முன்பு தமிழகத்தில் நடந்தது போலவே இந்திய அளவில் பூனூல் அறுப்பு போராட்டங்கள் நடந்து பார்பனர்கள் செல்வாக்கு இழக்கும் நிலைக்கு ஆளாவார்கள். பார்பனியத்தின் பழமைவாதத்தை உலகமே கண்டு வியப்படைந்து கைகொட்டி சிரிக்கும். பார்பனியம் அழியப்போகும் பொன்னாள் எது என்றால் அது சேதுசமத்திர திட்டத்தை முடக்கிப் போடும் நாள்தான்.

சேது கால்வாய் திட்டம் கிடைத்தால் நமக்கு நன்மை. இல்லையென்றால் பார்பனியம் தம் தலையில் தானே மண்வாரிப் போட்டுக் கொண்டு கொட்டம் அடக்கப்பட்டுவிடும்.

இந்துத்துவ வியாதிகளே, பார்பனிய ஆதரவாளர்களே செயல்படுங்கள், நீங்கள் எப்படி செயல்பட்டாலும் முடிவில் அழிவை சந்திக்கப் போவது நீங்களே.

ராவணன் கருணாநிதி

ராமன்..... இந்திய அரசியலின் ஓட்டு வங்கியாக பார"தீய" சனதா கட்சியால் கண்டுபிடிக்கப் பட்ட வாக்கு எந்திரம். மக்களை பிரித்து அதில் மதத் துவேசம் வளர்த்து குடுமிகளை குண்டுபோட வைக்கும் கொடூர முகத்துக்கு சொந்தக்கார கட்சிகளின் அனாமதேய அரசியல் தலைவன்.

விஎச்பி எனப்படும் வெகுஜன விரோத கட்சியின் முன்னாள் எம்பி ஒன்று கருணாநிதியின் தலைக்கு எடைக்கு எடை தங்கம் தரத் தயாராக இருக்கிறதாக அறிவித்துள்ளது. ஜந்துக்கள் காலம் கூட மலையேறிவிட வேண்டும்.

முதலில் கலைஞரின் தலைக்கு விலைவைக்கும் மடையர்களுக்கு ஒரு கேள்வி அது கலைஞருக்கு மட்டும் சொந்தமானதில்லை மூடர்களே. தமிழ் பேசும் எல்லா மக்களுக்கும் சொந்தமானது, அப்படி இருக்க கலைஞரின் தலைக்கு எந்த முகாந்திரத்தில் விலை வைத்தீர்கள். கதாசிரியர், அரசியல் தலைவர், ஆளுங்கட்சி தலைவர், சினிமா பாடல் ஆசிரியர், இலக்கியவாதி என பல தலைகளுக்கு சொந்தக் காரர்தான் கலைஞர். அவரின் மொழிகேட்டு வளர்ந்த கோடிக் கணக்கான உலகத் தமிழர்களுக்கும் ஒரு விலை வைக்கவேண்டும் அதுதான் கருணாநிதியின் உண்மையான விலையாக இருக்க முடியும் அதை விடுத்து வெறும் கருணாநிதியின் தலையை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்.

நீங்களே சொல்வது போல பத்து தலை கொண்ட ராவணன் கருணாநிதி என்றால் கூட அதன் ஒற்றைத் தலைகூட அவருக்கு சொந்தமில்லை..மக்களுக்காய், தமிழுக்காய், தமிழனுக்காய் அயராது உழைக்கும் அந்த தலை தமிழினத்தின் தலையாய சொத்து. அதை விடுக்க கலைஞருக்கே உரிமை இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா மூடர்களே?

ராமன் இல்லை என்பது இந்துக்கள் மனசை புண்படுத்துவதாக இருப்பின் எந்த பொதுஜன இந்துவும் "உங்கள் ராமனை அடிவருடும் கட்சி தலைவர்களை தவிர" வெளியில் வந்து போராட வில்லையே ஏன்? உண்மை சுடும் என்பது உங்களுக்கு ஏன் இன்னும் தெரியாமல் இருக்கிறது?. தமிழனுக்கு ஒரு விலைவைத்தால் அதுதான் கருணாநிதியின் விலை என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத மூடர்களே மக்களுக்கான போராட்டமாக எதையாவது என்றைக்கு செய்து தொலைக்கப் போகிறீர்கள்? ராமன் இல்லாத அரசியல் பூச்சாண்டிகள் என்றைக்கு உங்கள் கூட்டத்தில் உண்டாகும்?. அனுசக்தி ஒப்பந்த விசயத்தில் கூட உங்கள் எதிர்ப்பு இல்லையே இந்த அளவுக்கு. உங்களுக்கு ராமன் மேல் ஏன் இத்தனை பற்று?.

தமிழகத்தில் எந்த காலமும் உங்களால் காலடி வைக்க முடியாது என உண்மை தெரிந்து போனதால் இந்த கோபமா? ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் திராவிடம் இல்லாத அரசியலை தமிழகத்தில் விதைக்க முடியாது என்பதால்தானே மடையர்களே இன்றைக்கு வந்த விசயகாந்து கூட திராவிடத்தை சேர்த்தார் பெயரில் மட்டுமாவது?.

தனது மதசார்பின்மை முகத்தை காவிக் கோவனம் மறைக்க "திருவள்ளுவர் எந்த கல்லூரியில் படித்தார் என்ற கேள்வியை கேட்டு நானும் இந்துதான் பிஜேபியோடு கூட்டு வைக்க எந்த தடையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லும் விசயகாந்துக்கு ஒரு கேள்வி. நீ தமிழனா? எந்த காலேஜில் தமிழ் படித்தாய். மொழி சார்ந்த விசயங்களையும் நம்பிக்கை சார்ந்த விசயங்களையும் எந்த வித்யாசமும் இல்லாமல் கேள்வி கேட்கும் விசயகாந்துக்கு ஆட்சியை அள்ளிக் கொடுத்தால் அடக் கண்றாவியே.... என்றல்லவா இருக்கும்?. இதில் வளர்கிறாரம். கட்சிக்கு என்ன காம்ப்ளான் சப்ளையா செய்கிறார்?

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்க்கோர் குணமுண்டு என்பதை வாளெடுத்துதான் மெய்ப்பிக்க வேண்டும் என்றால் நாங்கள் அதற்கும் தயார்தான் வரிசையாக வாருங்கள் முண்டங்களே.... உங்களின் ராமக் குறிகள் எங்கள் குறிகளாய் இருக்கும்.

ராமன் இருந்ததை வரலாற்று ரீதியாக தொல்லியல் ரீதியாக விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாத கோழைகள் நீங்கள் என்பது உலகத்தமிழனுக்கு தெரியும் என்பதாலேயே அவரின் சொற்கள் உங்கள் மனசை காயப் படுத்திவிட்டதாக "பத்துவா" தருகிறீர்கள் உங்களுக்கு மனசு எங்கேயடா இருக்கிறது? பாதிரியார் ஸ்டெய்ன்ஸ் கொலைசெய்யப் பட்டபோது எங்கே போனது உங்கள் மனசு? குஜராத்தில் கிழிக்கப் பட்ட முஸ்லிம்களின் குடல் தொங்கியபோது எங்கே போனது உங்கள் மனசு?, பாபர் மசூதி இடிக்கப் பட்ட போது எங்கே போனது உங்கள் மனசு? ராமனின் பேரையும் சீதையின் பேரையும் சொல்லி கொலைகள் செய்யும் உங்களுக்கு மனசு இருக்கிரதா என்றே எங்களுக்கு சந்தேகம் இருக்கிறதே?

முதலில் உங்களுக்கு மனசு இருக்கிறதா இல்லையா என்று ஒரு மருத்துவ சான்றிதழ் கொண்டு வாருங்கள் பிறகு பார்க்கலாம் ராமன் இருந்தானா இல்லையா என்று. ஃபத்வா யாருக்கு வழங்கப் பட வேண்டும் என்று..

கங்கைமேல் கட்டப்பட்ட பாலங்களை இடிப்போம்!!

திடீர்னு நம்ம யாகூ குரூப்புக்கு ஒரு இமெயில். ராமன் கட்டின பாலத்துக்கு ஆபத்து காப்பாத்த குரல் கொடுங்கன்னு. அடப்பாவிங்களா இப்ப எல்லாம் பாலத்துக்கு நேரமே சரி இல்லையோன்னு அந்த தளத்துக்கு போனேன். http://ramsethu.org/

ராமன் என்னைக்கு செங்கல் சுமந்து சூத்திர வேலை எல்லாம் செஞ்சாருனு யோசிச்சிகிட்டே அந்த சைட்ட போய் பார்த்தேனுங்க. சைட்ட உருவாக்கினவா யாருனு பார்த்தா, நம்ம என். ஆர். ஐ பசங்க. அவங்க எல்லாம் மெத்த படிச்ச பசங்க.. என்னோட அறியாமய கண்டு பாவப்பட்டு என் 'டவுட்'ஐ கிளியர் பண்ணுவாங்கனு நினைக்கிறேன்.

ராமன் கட்டின பாலத்த சேதப்படுத்த கூடாதுன்னு சொல்லுறது சரிதானுங்க. அதே மாதிரி கங்கை ஆத்துல இருக்குற அம்புட்டு பாலத்தையும் இடிக்க சொல்லணுமுங்க. கங்கை சிவபெருமானோட தலைல இருந்து வந்தது இல்லையாங்க? அத எப்படி அணை கட்டி தடுக்கலாமுங்க ?

நீங்க அதுக்கு ஒரு வெப்சைட் போடணுமுங்க. அட்லீஸ்ட் அந்த புண்ணிய ஆத்துல பொணத்த போடக்கூடாதுனாவது நீங்க சொல்லணுமுங்க.

"remains of an ancient bridge built by Lord Rama, as described in the holy epic, Ramayana."

எங்க அனுமாரு பசங்களை ஏவிவிட்டு ராமரு கட்டினதா தான் கேள்விப்பட்டிருக்கேனுங்க. இப்ப தான் தெரியுது ஏன் இந்த பாலம் முங்கி போச்சுனு. என்ன கேவலமான 'கன்ஸ்ட்ரக்சனுங்க' இது. கடவுள் ராமனாலயே ஒரு பாலத்த உருப்படியா - காலாகாலத்துக்கு யூஸ் பண்ற மாதிரி - முங்காமா இருக்குறமாதிரி கட்ட முடியல! ஒரு பாலத்தக் கூட ஒழுங்கா கட்ட முடியாதாவரெல்லாம் ஒரு கடவுளானு ISIட்ட காசு வாங்குன பசங்க கேக்கமாட்டானுங்க?

பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்க தெரியல, தம்பிய சமாதானபடுத்த முடியல, ஒரு குரங்கு கூட்ட தலைவன நேர்மையா எதிர்க்க முடியல, இப்ப ஒரு பாலத்த உருப்படியா கட்டமுடியலைன்ற கெட்ட பேரு வேற....

"environmental impact" சரிதானுங்க. இதனால கொஞ்ச பாறை, மீன், பவளம் எல்லம் அழியப்போகுதுங்க. ஆனா பாருங்க, நர்மதைல அணை கட்டுற ப்ராஜெக்ட்ல எல்லாம் லெட்சம் பேரு ஊரை விட்டு கிளப்பணும், ஆயிரக்கணக்கான மரத்தை வெட்டணும்... இன்னும் எம்புட்டோ பெரிய பிரச்சினை எல்லாம் அதுல இருக்குங்க. அதுக்கு எல்லாம் ஏனுங்க நீங்க அடக்கி வாசிக்கிறீங்க?

"Ram Sethu is as holy to Hindus as the Western Wall is to the Jews, the Vatican to Catholics, Bodh Gaya to the Buddhists and Mecca to Muslims,"

இதுவரை நீங்க சீரியசா சைட் போட்டிருக்கீங்கனு நெனச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டேனுன்க. உலகத்துல ரெம்ப ரெம்ப பழமையான மதத்துக்கு இப்பதான் அதோட புண்ணியதலமே தெரியுதாங்க?

சரி நம்ம எதாவது செய்யலாம்னு 'கான்ட்ரிப்யூட்'னு கிளிக் பண்ணினா, தட்சணை தான் கேக்குறாங்க. அதுவும் மெயில்ல அனுப்பலாமாம், போன்ல அனுப்பலாமாம், ஆன்லைன்ல அனுப்பலாமாம்.... காசக் குடுக்காம 'கான்ட்ரிப்யூட்' பண்ண முடியாதாங்க?

- பிரகாஷ் (jaya.v.prakash@gmail.com)

பொய் விஞ்ஞானிகளும் சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்

சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS க்கு 2 வருடங்களாக உதவிய வின்னியல் விஞ்ஞானி இன்று பொய்யர் என அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு நலம் பெறும் இத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS ன் பித்தலாட்டமான விவாதத்தை போன்றே மேற்படி விஞ்ஞானியின் செயலும் ஒத்திருக்கிறது.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலிருத்துக் காட்டியபின் சங்பரிவார RSS தனது அமைப்பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜா வை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர் சங்பரிவார RSS ன் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர் தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையுடன் வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டை இதோ

VHP தலைவர் அசோக் சிங்கால் அறிமுகப்படுது்திய விஞ்ஞானியின் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை

இப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் ISRO வில் பணியாற்றுவதாகவும் 2 வருட பணிவிடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார RSS ல் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற ஆவனங்களோடு பல நபர்களை RSS தன்னோடு இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜா வின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பியிருக்கிறது. இவர் RSS இயக்கத்திற்கும் UPA அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர்.
கடந்;த 2005 ம் ஆண்டு RSS வெறி இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் நொய்டா நகர் RSS ல் பணியாற்றியவர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) மேலாளர் திரு S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதலுக்கு பேட்டி அளிக்கையில் 'ISRO க்கும் மேற்படி நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவரைப்பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. வின்வெளி ஆய்வுத்துறையின் துணைச் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு I.A.Sஅதிகாரியாவார். திரு S.V ராகநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களுரில் உள்ளார். மேலும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பிற்கும்; (ISRO) எந்தத் தொடர்பும் இல்லை". எனக் கருத்துத் தெரிவித்ததார்.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் தனேஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீங்கள் பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள்? என வினவுகையில் அதை மறுத்த தனேஜா தான் அவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் மேலும் தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள் என்று கூறிய தனேஜா சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அசோக் சிங்காலுடன் தான் அளித்த நிருபர்கள் பேட்டியின் போதுதான் மக்கள் மன்றத்திற்கு தான் முதல்முதலாக வந்ததாகவும், தலைவர் ராம் மாதவனிடம் பாதுகாப்பு கோரியதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விஞ்ஞானி அல்ல, பூமிக்கடியில் சுரங்க வழிப்பாதையைப் பற்றிய ஆய்வு செய்பவன் என்று கூறிய அவரிடம், அவரின் கல்வித்தகுதியைப் பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தனேஜா VHP தலைவர் அசோக் சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் ஏதும் இல்லை என்று அரசு அளித்த அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் VHP யும் RSS ம் அரசை வற்புறுத்துவதாகவும் பேட்டியளித்தார்.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் RSS செய்தித்தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு தெனேஜா பற்றி கேட்டதற்கு அவர் ஒரு RSS பிரச்சாரகர் என்றார். தெனேஜா செய்த ஏமாற்று வேலை பற்றி கேட்டதற்கு RSS இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அத்தகைய புகார்கள் அவரை RSS இயக்கத்தின் பிரச்சாரகர் பதிவியிலிருந்து நீக்கத் தகுந்தவைகள் என RSS தலைவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

திட்டப் பணி

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சேது சமுத்திரத்தில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் அளவிற்கு ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் இல்லாமல் போய்விடும். மேலும் 30 மணி அளவிற்கு பயணம் நேரம் குறையும்.

பொய் விஞ்ஞானிகள்

இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று RSS ம் VHP யும்; கோருகிறது. மேலும் இதை உலக கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.

அறிவியல் உண்மை

பூலோக ஆய்வின்படி சேது சமுத்திரத்தின் உள்ளே இருப்பது யாரும் உண்டாக்கிய (ராமர் பாலம்) அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே உள்ளது. இப்படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான பாலப் படிவுகள் எனப்படும்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

தீவிரவாதிகளும் சேது சமுத்திர திட்டமும்

தமிழர்களின் சேது சமுத்திர திட்டமும் கிழிந்து போன சங்பரிவாரத்தின் ராமர் பால போலி முகமூடிகளும்


சமீப காலமாக ஆர்;எஸ்.எஸ், சங்பாரிவார் மற்றும் அவர்களின் பார்ப்பன கைக்கூலிகளான சங்கராச்சாரியார்களின் திருட்டுக் கும்பல்களும் தமிழகத்தையும் எங்கள் மாவட்டமான முகவை மாவட்டத்தையும் செழிப்பூட்டும் வகையிலான தமிழர்களின் கணவுத்திட்டமான சேதுசமுத்திரத் திட்டத்தை முடக்க வேண்டும் என்று இல்லாத ராமர் பாலத்தை இருப்பதாக கதை ஜோடித்து அதற்கு பல விஞ்ஞான சாட்சிகள், கூட்டிக்கொடுக்கும் பாப்பான்கள் கூட்டமாக வேலை செய்யும் நாசா போட்டோ என்று கூறி மக்களை முட்டாளாக்கி தமிழகத்தையும் வரட்சி பூமியான எங்கள் முகவை மாவட்டத்தையும் சொர்க்க பூமியாக்கி தமிழ் திராவிட மக்களுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்க வரும் சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க பல வழிகளிலும் முயன்று வருகின்றார்கள்.

சமீப காலமாக தமிழ்நாட்டின் தரித்திரம் பாப்பான பன்னாடை காஞ்சி சங்கராச்சாரி என்ற அயோக்கியன் சங்கரமடத்துக்கு வந்த பல மாமிகளை மடக்கி மசாலா பட ரேஞ்சுக்கு விளையாடியதால் மானம் போய் கிடப்பதால் அவனை வைத்து கேம் விளையாட முடியாத தாய் மண்ணிற்கு துரோகம் செய்யும் சங்பரிவார கும்பல்கள் பூரியிலிருந்தும் மற்ற வட மாநிலங்களில் இருந்தும் சங்கராச்சாரிய கும்பல்களை கூட்டம் கூட்டமாக கூட்டி வந்து ஏதேதோ போராட்டங்கள், சாபங்கள் எல்லாம் கொடுத்து பார்த்தார்கள் அரசு மசிவதாக தெறியவில்லை இன்னும் தங்கள் வாதத்திற்கு வலுச்சேர்த்து இல்லாததை இருப்பதாக காட்டுவதற்காக இந்த தேச விரோத சங்பரிவார கும்பல் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்யும் விஞ்ஞானி என்று கூறி ஒரு பாப்பானை வைத்து இராமர் பாலம் இருப்பதாகவும் அது உண்மை என்றும் அதை இந்திய வின்வெளி கூட்டமைப்பு(ISRO) கண்டுபிடித்திருப்பதாகவும் VHP தலைவர் அசோக் சிங்கால் மற்றும் பல RSS சங்பரிவார தலைவர்கள் அறிவித்தனர் அதற்கு சாட்சியாக இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) பணியாற்றும் விஞ்ஞானி என்று கூறி ஒருவனை பத்திரிகையாளர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தி அவனை பேசவெல்லாம் வைத்தனர். அதனை தினமலர் போன்ற பாப்பன பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் வெளியிட்டன.

அப்போது வலைப்பதிவுகளில் அண்ணன் விடாது கருப்பு போன்ற திராவிடத்தோழர்களும் பல திராவிட பத்திரிகைகளும் சேது சமுத்திர திட்டத்தை முடக்குவதற்காக திட்டம் வகுத்து "இராமர் பாலம்" "இராமர் பாலம்" என்று இல்லாத ஒன்றிற்காக வெறிக்கூச்சலிடும் சங்பரிவார பார்ப்பன கும்பல்கிளன் முகமூடிகளை கிழிக்கும் வகையில் பல கட்டுரைகளை வெளியிட்டு நாறடித்தார்கள். அப்போதும் கூட திருந்தவில்லை இந்த கேடுகெட்ட ஜென்மங்கள். தற்போது VHP தலைவர் அசோக் சிங்கால் போன்றவர்களால் இந்திய வின்வெளி கூட்டமைப்பில்(ISRO) வுலை செய்யும் விஞ்ஞானி என்று அறிமுகப்படுத்தப்பட்டவன் ஒரு போலி என்று இன்று பத்திரிகைகள் தோலுரித்து காட்டியுள்ளன.

இது ஒரு உதாரனம்தான் இதுபோல்தான் பாபரி மஸ்ஜித் பிரச்சினையில் இருந்து முகலாயர் வரலாறு உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த இந்திய சரித்திரங்களை புரட்டி தங்களுக்கு சாதகமாக செய்திகள் வரவேண்டும் என்பதற்காக பல சங்பரிவாரத்தை சேர்ந்தவர்களை இந்தியாவின் உயர் ஆராய்ச்சி கூடங்களிலும் பிரதமர் அலுவலகங்களிலும் வேலைசெய்யும் விஞ்ஞானிகள், சரித்திர ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறி பத்திரிகையாளர்களிடம் அறிமுகப்படுத்தி ஊடகங்களிலும் செய்திகள் வெளியிட்டு தங்களுக்கு சாதகமாகவும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் வரலாற்று திரிபையும் பொய்யான சாட்சிகளையும் ஏற்படுத்தும் வேலைகளில் RSS, BJP, VHP போன்ற ஹிந்து இயக்கங்களின் தலைவர்களான அசோக்சிங்கல், அத்வானி, வாஜ்பாய் போன்றவர்கள் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பதற்கான முக்கிய சான்றுதான் இந்த போலி விஞ்ஞானி பிடிபட்ட கதை.

இனியாவது இந்திய ஊடகங்கள் இதுபோன்ற ஹிந்து அமைப்புக்களின் தலைவர்கள் விஞ்ஞானிகளின் அறிக்கை, சரித்திர சான்று, அகழ்வாராய்ச்சி அறிக்கை, என்ற பெயரில் வெளியிடும் செய்திகளை கண்மூடித்தனமாக ஏற்று பிரசுரிக்காமல் அவர்களால் அளிகக்ப்படும் தகவர்களும் அறிமுகப்படுத்தப்படும் நபர்களும் உண்மையானவையா என்று ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுமாறு கேட:டுக் கொள்கின்றோம்.

கடந்த ஜீன் 17ம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளேட்டில் வந்த இந்த செய்தியை அனைத்து தரப்பு தமிழ் மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழர்களின் நலனுக்கு எதிராக செயல்படும் சங்பரிவார கும்பலின் பொய் முகத்தையும் தமிழ் மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவும் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்து தருகின்றேன்.

நன்றி
முகவைத்தமிழன்

ராமர் அண்ட் கோ

சேது சமுத்திரத் திட்டம் 150 ஆண்டுகால கனவு. தமிழன் விழித்துக் கொண்டிருந்தாலே திட்டங்களை நிறைவேற்றப்படாத பாடு பட வேண்டும். கனவு கண்டு கொண்டிருந்தால் நிறைவேறுமா? அதுவும் 150 ஆண்டு கால கனவு. (சேது சமுத்திர திட்டம் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அது தொடர்பான விளக்கங்களையும் பிரிதொரு சந்தர்ப்பத்தில் காண்போம்.)

சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கிற நிலையில், ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என வானர சேனைகளாக மாறியிருக்கிறார்கள் இந்துத்துவா அமைப்பினர். அந்த மணல் திட்டுகள் சாதாரணமானவையல்லவாம். ராமரால் பாதுகாக்க முடியாமல் போன சீதையை இலங்கைக்கு ராவணன் தூக்கிக் கொண்டு போனபோது, அவளை மீட்க வழி தெரியாமல் தவித்த ராமனுக்கு இன்ஜினியர் அனுமாரும் அவரது இனத்தைச் சேர்ந்த வானர சேனைகளும், அணில்குஞ்சும் சேர்ந்து கட்டிக் கொடுத்த பாலம் தான் அந்த மணல் திட்டுகளாம். அதனால், சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றக் கூடாது என்பது தான் இந்துத்துவா அமைப்பினரின் வாதம்.

வடக்கிலேயே மார்க்கெட் போய்விட்ட ராமர் லேபிளை தெற்கில் வந்து வியாபாரம் செய்யலாம் என இந்துத்துவா அமைப்பினரும் அவர்களது அரசியல் கட்சியான பா.ஜ.கவும், சாதுக்கள் என்ற பெயர்கொண்ட ஆன்மீக அடவாடி (ஆ)சாமிகளும் கௌபீனத்தை (அட கோவணம் தாங்க) வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறார்கள். இந்த ராமர் மார்க் இந்துத்துவாவிற்கு அமெரிக்காவின் நாசா அமைப்பிடமிருந்து ‘ஐஏஎஸ்ஓ 9001’ சான்றிதழ் வாங்கப் பார்த்தார்கள். நாசா எடுத்த செயற்கைக் கோள் படத்திலேயே அது பல லட்சம் வருடங்களுக்கு முன்பு ராமர் கட்டிய பாலம் தான் என்பது உறுதியாகிவிட்டது என இணையதளத்தில் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டார்கள்.

நாசமாய்ப் போக... நாசா அப்படியா சொல்லியிருக்கிறது? என அதன் அறிக்கைகளை கடலுக்கடியில் தொடர்ச்சியான மணல் திட்டு இருக்கிறது என்று தான் சொல்லியிருந்தது. இந்துத்துவாவின் இணையதள விற்பன்னர்கள் தான் அதற்கு ராமர் லேபிளை ஒட்டி விற்பனைக்கு விட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. கடைசியில் நாசாவே ஒரு விளக்கமான அறிக்கையும் கொடுத்து விட்டது. அந்த மணல் திட்டு என்பது மனித முயற்சியில் உருவானதில்லை. (அதாவது நாசா விஞ்ஞானிகளுக்கும் ராமர் அவதாரம் என்றோ, லட்சுமணன் அவரது தம்பி என்றோ, அனுமான் அவர்களது பக்தர் என்றோ தெரியாது. எல்லோருமே அவர்களுக்கு மனிதர்கள் தான். அந்த மனிதர்களால் உருவாகவில்லை) இயற்கையாக உருவான மணல் திட்டுகள் என அறிவித்து விட்டனர்.

நாசாவின் ஐ.எஸ்.ஓ சான்றிதழை வைத்து ராமர் மார்க் இந்துத்துவாவை வியாபாரம் செய்து விடலாம் என எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். அதன் பிறகு தான், ராமர் பாலத்தை மீட்போம் என மகாயாகம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என கோவணத்தை வரிந்து கட்டத் தொடங்கிவிட்டனர். ராமர் பாலத்தைக் காப்பதற்காக பல 100 பேர் உயிர்த்தியாகம் செய்ய முன் வந்திருக்கிறார்கள் என்றார் இந்து முன்னணி ராம கோபாலன். பா.ஜ.கவிலிருந்து பிரிந்து சென்ற உமாபாரதியோ திடுமென தமிழகத்திற்கு வந்து, ‘பாலத்தைக் காப்பாற்றியே தீருவேன். முடிந்தால் கைது செய்து பார் என்றார்.

விஸ்வ இந்து பரிஷத்தின் தொகாகடியா, பாலத்தை காக்கச் சொல்லி ஒரு கோடி பேர் கடிதம் எழுதுவோம். நாடு முழுவதும் சாலை மறியல் செய்வோம் என ஆவேசத்தைக் கிளப்பினார். 1 கோடி 3 கோடி 100 கோடி என அவர்கள் பேசினார்களே தவிர, அதனைத் தமிழகத்தில் தெருக் கோடிகளில் நின்று உலக அரசியலை அலசுபவர்கள் கூட கண்டுகொள்ளவில்லை. இதனால் ராமர் பாணியிலேயே விதவிதமான பானங்கள் ஏவத் தொடங்கி விட்டார்கள். ராமர் பாலம் அமைந்துள்ள மணல் திட்டுகளில் உலகிலேயே எங்கேயும் கிடைக்காத தோரியம் கனிமம் இருக்கிறது. ஒரு கிலோ ஒரு கோடி ரூபாய் வரை விலை போகிறது. 25 கிலோ மணல் எடுத்தால் ஒரு கிலோ தோரியம் கிடைக்கும் என்று சொல்லியிருக்கிறார் ராமர் சேது பாலம் பாதுகாப்பு குழுவின் தலைவர் டாக்டர் கல்யாணராமன்.

ரொம்ப நல்லதாகப் போய் விட்டது. சேதுக் கால்வாயைத் தோண்டும் கருவிகளைக் கொண்டு அந்த மணலை எடுத்து, கரைக்கு கொண்டு வந்து தோரியத்தைப் பிரித்தெடுக்கத் தொடங்கினால், கடலும், ஆழமாகும், தோரியமும் கிடைக்கும். அரசுக்கு வருமானமும் பெருகும். சேதுக் கால்வாய்த் திட்டச் செலவுகளைத் தோரியத்தால் ஈடு கட்டிவிடலாம். எனவே, சீதையை மீட்கப் போன ராமர், அந்த மணல் திட்டுகளில் தோரியத்தைப் புதைத்து விட்டுப் போயிருந்தால் அது நாட்டுக்கு இலாபம் தான்.

இந்துத்வா அமைப்பினரின் அடுத்த பானம், ராமர் பாலத்தை இடித்தால் ராமேஸ்வரத்தை சுனாமி தாக்கும் என்பது தான். விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் என துணை பானங்களையும் ஏவுகிறார்கள். 2004ல் தமிழகக் கடற்கரையை சுனாமி தாக்கிய போது ராமேஸ்வரம், திருச்செந்தூர் கடற்கரைகள் தப்பின. அதற்குக் காரணம், அவற்றிற்கு முன்உள்ள இலங்கைக் தீவு சுனாமியின் கோரத் தாக்குதலை எதிர் கொள்ள நேர்ந்ததால் ராமேஸ்வரம் தப்பியது. சேதுக் கால்வாய் பணிகள் நடைபெற்றாலும் இலங்கையை யாரும் எதுவும் செய்யப் போவதில்லை. அது அப்படியே தான் இருக்கும் என்பதால் ராமேஸ்வரத்திற்கு பெரிய ஆபத்து எதுவுமில்லை. ராமேஸ்வரம் அருகேயுள்ள மணல் திட்டுகள் கடலுக்குள் புதைந்திருக்கின்றன. இலங்கை என்கிற பெரிதான மணல் திட்டு, கடலுக்கு மேலே தீவாகக் காட்சியளிக்கின்றது. இது இயற்கையான அமைப்பேயன்றி பாலம், பைபாஸ் என்று எதுவும் கிடையாது.

இல்லாத பாலத்தைக் காப்பதற்காகத்தான் யாகம், ஆர்ப்பாட்டம் என வெற்று பானங்களை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் ராமர் மார்க் இந்துத்துவா அமைப்பினர். ஆகஸ்ட் 26ம் தேதி ராமேஸ்வரத்தில் நடந்த மகாயாகம், மகாநாடு இவற்றிற்காக பல மாநிலங்களிலிருந்தும் ராமர் பக்தர்களைக் கொண்டு வந்து குவித்தன இந்த அமைப்புகள் ஆந்திராவிலிருந்து வந்த இந்துத்துவா அமைப்பினர், டிக்கெட்டே வாங்காமல் வைகை எக்ஸ்பிரஸிலும், குருவாயூர் எக்ஸ்பிரஸிலும் உள்ள ரிசர்வ் பெட்டிகளில் ஏறி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர். முறையாக முன் பதிவு செய்திருந்த பணிகளுக்கு இடமில்லை. இது குறித்து ரயில்வே போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட, அவர்கள் வந்து விசாரித்திருக்கிறார்கள். மறுத்திருக்கிறார்கள் அந்த ‘வித்அவுட்’ ராமர்கள். அப்புறம் போலீஸ் ‘கவனிக்க’த் தொடங்க ராமர் பாலத்தை அப்புறம் காப்போம். இப்போது நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம் என ஓடியிருக்கிறார்கள் இந்த ‘வித்அவுட்’ பேர்வழிகள்.

பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த பாபர் மசூதியை இடித்தவர்கள் தான், எந்த நூற்றாண்டிலும் கட்டப்படாத ராமர் பாலத்தை இடிக்க விடமாட்டோம் என்று குரல் கொடுக்கிற அதிசயக் காட்சியை காண முடிகிறது. ராமர், அணிலுடன் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் பாலம் கட்டிய ராமர், மண்டபத்திற்கும் ராமேஸ்வரத்திற்கும் ஒரு நல்ல பாலத்தைக் கட்டியிருக்கலாமே? வெள்ளைக் காரன் வந்து தானே இரண்டு ஊர்களுக்கும் நடுவே தண்டவாளத்தையும், திறந்து மூடும் வசதியுள்ள பாம்பன் பாலத்தையும் போட்டுவிட்டுப் போனான். ராமர் பாலம் கட்டாமல் விட்டதால், தான் பாம்பன் பஸ் பாலம் கட்டப்பட்டது.

தனுஷ் கோடியிலிருந்து தலைமன்னாருக்கு பாலம் போட்ட ராமர் அண்ட் கோ, மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு பாலம் போடாமல் எப்படிக் கடலை கடந்து சென்றது? அடுத்த மாநாட்டில் இந்துத்துவா அமைப்பினர் விளக்கட்டும். அதற்கு முன் மாநாட்டிற்கு வருபவர்கள் முறைப்படி ரயில்களில் டிக்கெட் வாங்கி வரட்டும்.

கோ.வி. லெனின்

இது அநியாயம், அராஜகம் என்று பூனூல் கும்பல

இராமர் பாலத்தைக் காப்பாற்று என கூக்குரல்கள் எழுப்புகிறவர்கள். யாரென்று பார்த்தால் இந்து என்று சொல்லி உழைக்கும் மக்களை ஏமாற்றி வரும் இந்து மதவெறி கூட்டம். இவர்கள் என்ன கூறுகிறார்கள், இந்துக்களின் வரலாற்று நாயகன் இராமன் கட்டிய பாலத்தை உடைக்கலாமா? இது அநியாயம், அராஜகம் என்று பூனூல் கும்பல், இந்து என்று கூறி நம் தோள் மேல் ஏறி நின்று கூப்பாடு போடுகின்றது.

சரி வரலாற்றுக்கு ஆதாரமாய் (?) விளங்கும் கண்ணுக்குத் தெரியாத இராமன் பாலத்தை உடைப்பதை எதிர்க்கும் இவர்கள் நம் கண்முன் பாபர் மசூதியை உடைத்தவர்கள் தானே. இயற்கையாய் உருவான மணல் திட்டு, இராமன்பாலம் அது எங்கள் நம்பிக்கை, எனவே அதை உடைக்க கூடாது என்றால் மனிதர்களால் கட்டப்பட்ட பாபர் மசூதி கூடத்தான் இந்த நாட்டின் குடிமக்களில் பலரது நம்பிக்கை. ஏன் உடைத்தீர்கள்? என்று கேள்விகள் எழுப்புவோமானால் எங்கள் நம்பிக்கைக்கு எதிராய் எவர் வரினும் அவர் காந்தியே, ஆனாலும் வாழவிட மாட்டோம் என்று கொக்கரிகிறார்கள். இவர்களின் இராமனும், அவன் பாலமும் கற்பனையே என தொல்லியல் ஆய்வுத்துறை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூற கொதித்தெழுந்த கூட்டம், அதிகாரிகளைப் பணி நீக்கம் செய், பிரதமரும், சோனியாவும் மன்னிப்பு கேட்க வேண்டுமென கூறிகிறார்கள். தமிழர்களின் நியாயமான கோரிக்கை இந்த இந்து மதவெறி கூத்தில் மறைக்கப்படும் கொடுமையைக் கண்டு நெஞ்சம் கொதிக்குது. சரி இவர்கள் கூறும் இராமனையும், இராமன் பாலத்தையும் பற்றி உண்மையைப் பற்றி கொஞ்சம் பார்போம்.

இராமாயணம் நடந்த கதையல்ல!

இராமாயணம் நடந்த கதை அல்ல என்பது தெளிவு. அதற்குச் வரலாறு இல்லை; உள்ள கதை அறிவுக்குப் பொருத்தமானதாகவோ ஆராய்ச்சிக்குப் பொருத்தமானதாகவோ இல்லை. தேவர், அசுரர் என்கின்ற பிரிவும், பிறப்பும் இருக்க முடியாது இந்தப் பிரிவுக்கு எந்த மாதிரியான உருவ, அங்க, மச்ச அடையாளமும் கிடையாது. இவர்களது இருப்பிடத்திற்கும் எந்தவிதமான விளக்கமும் கிடையாது. பூலோகம் என்றும், மேல்லோகம் என்றம் குறிப்பிட்டிருப்பதற்குப் பூகோள சாஸ்திரங்களில் இடம் இல்லை. பூலோகத்திற்கும், மேல் லோகத்திற்கும் விளக்கம் இல்லை. போக்குவரத்துக்கு வழியும் இல்லை.

இராமாயணம் நடந்தது பூலோகத்தில் என்றால், தேவர்கள், ரிஷிகள் பூலோகத்தில் எங்கு இருந்தார்கள்?

தேவலோகத்தில் என்றால், அங்கிருந்து பூலோகத்திற்கு எப்படி வந்தார்கள்? ஏன் வந்தார்கள்?

இப்போது பூதேவர் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனர்கள்தான் அக்காலத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என்கிற பெயர்களை வைத்திருந்தனர். நம் திராவிட மக்களைத்தான் ராட்சதர்கள், அரக்கர்கள் என்று பெயரிட்டு அழைத்திருக்கின்றனர்.

ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் நடந்த போரை இதன்படி சித்திரிப்பதே இராமாயணம்.

இராமாயணம் எந்த ஒரு சரித்திர சம்பந்தாமனதோ, நடந்த நடப்புகளைக் கொண்டதோ ஆன கதையல்ல என்பதோடு பெரும்கற்பனைச் சித்திரமும் அல்ல.

அதுவும் காட்டுமிராண்டிக் காலத்திய உணாச்சியையும், அக்கால ஆரியப் பண்பாடு பழக்க, வழக்கம் முதலிய அவர்களது அன்றைய காலாச்சாரத்தையும் அடிப்படையாகக் கொண்ட கற்பனை இலக்கியமாகும்.

இராமாயணக் காலம் பொய்!

இராமாயணம் நடந்த காலம் இராமாயணப்படி திரேதாயுகம், துவாபரயுகம் இவ்விரண்டிற்கும் முறையே 12,96,000; 8,64,000 ஆண்டுகள். மொத்தம் 21,60,000 ஆண்டுகள். ஆகவே, இப்போது நடக்கும் கலியுகத்தை நீக்கி இராமாயணம் நடந்து 21,60,000 ஆண்டுகள் ஆகின்றன என்று கொள்ளலாம். புத்தர் பிறந்து இன்றைக்கு 2550 ஆண்டுகள் தான் ஆகின்றன. இவ்விதம் 2500 ஆண்டுக்குள் இருந்த புத்தரைப்பற்றி திரேதாயுகத்தில் (21,00,00 ஆண்டுகளுக்கு முன்) நடந்த இராமாயணத்தில் காணப்படுவன பற்றி ஆதாரங்களுடன் கீழே தரப்படுகின்றன:

(வால்மீகி இராமாயணம் - சி.ஆர்.சீனிவாசய்ங்கார் மொழிபெயர்ப்பு)

இராமனைப் பார்க்க வந்த பரதனிடம் இராமன் கேட்கும்பொழுது, பவுத்தன் சார்வாகன் முதலிய நாஸ்திக பிராமணர்களுடன் பழகாமலிருக்கிறாயா? புராணங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாயப் பரம்பரைப்படி அர்த்தம் செய்யாமல் கேவலம் தர்க்கத்தைப் பிரயோகித்து அவை இகத்திலும், பரத்திலும் பயனற்றவை என்று வாதிப்பவர்கள் அவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(அயோதித்தி காண்டம் 100 ஆவது சர்க்கம் 374 ஆவது பக்கம்)

இராமன் ஜாபாலி என்ற புரோகித ரிஷியிடம் கூறும்பொழுது, திருடனும் பவுத்தனும் ஒன்றே; பவுத்தனுக்கும், நாஸ்திகனுக்கம் பேதமில்லை என்று சொன்னதாகக் குறிப்பிடபட்டுள்ளது.

(மேற்படி காண்டம் 106 ஆவது சர்ககம்; 412 ஆவது பக்கம்)

சீதையைத் தேடிச் சென்ற அனுமான் இலங்கையில் சீதை இருந்த வனத்திற்குச் சற்று தூரத்திற்கப்பால் புத்தர் ஆலயம்போல் கட்டப்பட்ட ஓர் உப்பரிகையைக் கண்டார்.

(சுந்தர காண்டம் 15 ஆவது சர்ககம் 69 ஆவது பக்கம்)

வாலியிடம் இராமன் கூறும்பொழுது பூர்வத்தில் ஒரு பவுத்தசன்யாசி உன்னைப்போல் கொடிய பாவத்தைச் செய்து அதற்காக மாந்தாதா சக்ரவர்த்தியால் கடின தண்டனை விதிக்கப்பட்டான் என்று சொன்னதாகக் குறிக்கப்பட்டுள்ளது.

(கிஷ்கிந்தா காண்டம் 18 ஆவது சர்க்கம்; 69 பக்கம்)

இராமனுக்கு தசரதன் பட்டாபிஷேகம் செய்ய நகரை அலங்கரிக்கும்பொழுது, வெளுத்த மேகம் போன்ற தேவாலயங்கள், நாற்சந்தி மண்டபங்கள், வீதிகள், புத்தரின் ஆலயங்கள், மதிற்சுவரின்மேல் கட்டப்பட்டிருக்கும் நாற்கால் மண்டபங்கள்...முதலிய இடங்களில் கொடித் துணியுள்ள துவஜங்களும் கொடித் துணியில்லாத துவஜங்களும் எடுத்துக் காட்டப்பட்டன எனக் குறிக்கப்பட்டுள்ளது.

(அயோத்தி காண்டம் 6 ஆவது சர்க்கம்; 23,24, ஆவது பக்கம்)

21 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாகச் சொல்லப்படும் இராமாயணக் கதையில் 2500 ஆண்டுக்குள் இருந்து வந்த புத்தரைப் பற்றி கூறுகிற செய்தியைக் கொண்டு ஆராய்ந்தால் இராமாயணக் கதை 2500 ஆண்டுகளுக்குள்ளாகவே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதனால் இராமாயணக் காலம் (திரேதா யுகம்) என்பது பொய்யேயாகும்.

கடற்பெரு வெள்ளங்களால் தென்னாட்டில் இருந்து இலங்கை பிரிந்து 5,000 ஆண்டுகளே ஆகின்றன!


இதுவரை இவ்வுலகத்தில் ஏற்பட்ட கடற்பெரு வெள்ளங்களின் (சுனாமி) காலங்கள் காட் எலியட் என்பவர் குறித்துள்ளபடி பார்க்கையில் பதினாயிரம் நூற்றாண்டுகளுக்கு (10,00,000 ஆண்டுகளுக்கு) முன்னர் நேர்ந்துள்ள கடற்பெரு வெள்ளமே முதன்மையானதென்றும், இரண்டாவது வெள்ளம் எண்ணூறாயிரம் (8,00,000) ஆண்டுகளுக்கு முன் நேர்ந்திருக்கக்கூடும் என்றும், மூன்றாவது வெள்ளம் இருநூற்றாயிரம் (2,00,000) ஆண்டுகளுக்கு முன்னரும்; நான்காவது வெள்ளம் எண்பதினாயிரம் (80,000) ஆண்டுகளுக்கு முன்னரும், அய்தாவது வெள்ளம் ஒன்பதினாயிரத்து அய்நூறு (9,500) ஆண்டுகளுக்குச் சிறிது முன்னும் பின்னுமிருக்கலாமென்றும் அறியக் கிடக்கின்றன.

இப்பெருவெள்ளங்களின் காரணமாகப் பல நிலப்பரப்புகள் நீர்பரப்பாயும், நீர்ப் பரப்புகள் நிலப்பரப்பாயும் மாறினவென்பதற்குப் போதிய ஆதாரங்கள் உண்டு. குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த பல நாடுகள் நீரினுள் மறைந்தனவென்றும் அறியக் கிடக்கின்றன.

இவை எக்கேல், அக்கிசிலி, டோயினார்டு, பேர்கசன், சுவான்சு முதலியோர் தென்னாட்டின் தொன்மையைப் பற்றிக் கூறும் கருத்துகளாலும், நில நூல், தொல்லுயிர் நூல் முதலியவற்றின் சான்றுகளாலும், தென்னாட்டிற்கும், மேலை ஆசியாவிற்கும் கப்பல் வாணிபம் மிகப் பழைய காலத்தே நடந்ததாகத் தெரிய வருவதாலும், தமிழரின் ஒரு பகுதியாரே தென்னாட்டிலிருந்து அக்கோடியா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும் கொள்ளுதலே பொருத்தமுடைத்து. ஆரியர் வடமேற்கு வழியாக இந்தியாவிற்குள் புகுங்காலத்து பெலூசிஸ்தான் முதலிய இடங்களிலும், வடமேற்கு இந்தியாவிலும் தமிழ் சார்பான மொழிகள் வழங்கின என்பது அறிஞர் இராப்பன் என்பவர் கருத்தும் ஆகும்.

சுமார் கி.மு.மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு பெரு வெள்ளத்தின் பின்னேயே இலங்கையானது தமிழ் நாட்டினின்றும் பிரிவுபட்டதென்பர்.

காலஞ்சென்ற ஆசிரியர் கார்த்திகேய முதலியார், குமரியாற்றுக்கும், பஃறுளியாற்றுக்கும் இடையிலுள்ள பெருவள நாடே பழந்தமிழ்நாடாகும். இது பெரியதொரு ஆற்றிடைக் குறையாதலின், இதற்கு அலங்கமென்றும் பெயராம், அலங்கம் லங்கையாயிற்று. அலங்கமெனினும் ஆற்றிடைக் குறையெனினும் ஒக்கும். இலத்தீன் மொழியில் இலங்கைக்கு டாப்ரோபேன் என்று பெயர். டாப்ரோபேன் என்பது தாமிரபரணி என்பதன் சிதைவு. கடல் கோளுக்குட்படாமுன் இலங்கைக்கு இப்பொழுது தென்பாண்டி நாட்டில் ஓடும் தாமிரபரணியின் பாய்ச்சலிருந்தமையால் அப்பெயர் வந்தது. என்று அவர் இயற்றிய அரியமொழி நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆராய்ச்சியாளருக்கும், தமிழ் நாட்டவருக்கும் பெருமையைக் கொடுப்பதொன்றாகும். காட்எலியட் என்பவர் கூறிய அய்ந்தாவது கடல் வெள்ளம் ஏறக்குறைய 9,500 ஆண்டுகளுக்கு முன்னேயே நிகழந்ததாகும். அங்ஙனமாயின் யாவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட முச்சங்கங்ளின் முதற்சங்கம் இக்கடல் வெள்ளத்துக்குமுன் குமரிமுனைக்குத் தெற்கிலிருந்த நாட்டில் நிறுவப்பட்டதாகும். இச் சங்கத்தை நிறுவிய மன்னர் காய்ச்சினவழுதி முதல் கடுங்கோன் மன்னர் வரை எண்பத்தொன்பது மன்னர் ஆவர்.

ஆராய்ச்சி உண்மை இவ்வாறு இருக்கையில், 21 லட்சம் (21,00,000) ஆண்டுகளுக்கு முன் இலங்கைத் தீவும், அயோத்தி நாடும் இருந்ததாகக் கூறும் இராமாயணக் கதை எவ்வளவு பெரிய பொய்க் கதையாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

தமிழ்நாட்டுக்கும் இராமருக்கும் பூணூல் பாலம்..

தினமணி நாளிதழ் தன் நடுநிலையை இழந்து ஒரு சார்பாக போய்விட்டது என்று என் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். எனக்கும் சமீபகாலமாய் அந்தக் கருத்து உருவாகி இருந்தது.

பத்திரிகை உலகின் தன்னிகரற்ற மனிதராக விளங்கிய அய்யா திரு.இராம.திரு.சம்பந்தம் அவர்களுக்குப் பிறகு தினமணி தன் நடுநிலையை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருகிறது என்பது தினமணி வாசகர்களில் பெரும்பான்மையினர் கருத்தாக உள்ளது.

கிராமப்புறங்களில் "ரெக்கார்டு டான்ஸ்" என்கிற பெயரில் நடன நிகழ்ச்சி நடைபெறுவதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அதில் பாடல்கள் இசைக்கப்படும், மேடையின் மீது ஒன்று அல்லது இரண்டு பெண்கள் நடனமாடுவார்கள். இசையின் வேகத்திற்கு ஏற்ப தான் அணிந்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி எரிவார்கள். ஒருகட்டத்தில் கழற்றி எரிய ஆடை இல்லாமல் அம்மணமாய் நிற்கும் போது. வேறு வழியின்றி விளக்குகள் அணைக்கப்படும். நிகழச்சி முடிவடையும். பார்த்துவிட்டு வந்த நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். அப்போது சட்டென எனக்கு நினைவுக்கு வந்தது தினமணி நாளிதழ்தான்.

மொழியுணர்வுத் தீப்பந்தமாய் இருந்த நம் அய்யா சம்பந்தம் அவர்கள் தினமணிக்கு - ஆடைபூட்டி அழகு பார்த்தார். இப்போது கடைசியாய் கட்டுரைகள், தலையங்கங்கள், கருத்துபடங்கள் என எழுதி வேறு வழியின்றி விளக்குகளை அணைத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டுக்குள் பத்திரிகை விற்று அந்த பணத்தில் வாழும் இவர்கள் தமிழ் நாட்டின் 100 ஆண்டுகால கனவுத் திட்டத்தை எதிர்க்க வடநாட்டு கும்பலோடு கைகோர்த்து, இராமர் பாலம் வழியாக ராமராஜ்ஜியம் அமைக்க புதியதாக கிளம்பி உள்ளார்கள்.

தினந்தோறும் பரப்பும் பொய்யுரைகளுக்கு பதிலளித்தால் நாம் வேறு வேலை பார்க்க முடியாது (அவர்களுக்கு இதுவே வேலை). நாம் பார்க்கும் வேலையின் நடுவே இளைப்பாறுதல் தான் இது போன்ற பதிவுகள். "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது" என்று கூறுவார்களே, அது தற்போது நடந்துள்ளது. தினமணியே உங்களின் நிலையைத் தெளிவாக அறிவித்தற்கு மிக்க நன்றி.

மக்கள் மத்தியில் உள்ள மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள் முதலில் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஏற்க செய்ய வேண்டும். உங்கள் கருத்துக்கு நன்றி. தந்தை பெரியாரோ, பேரறிஞர் அண்ணாவோ, தமிழக முதல்வர் கலைஞரோ "கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி" என்று கூறுவது தன் வீட்டில் உள்ளவர்களை விலக்கி அல்ல, அவர்களையும் உள்டக்கித்தான். " வீட்டை திருத்தி விட்டு நாட்டுக்கு வா" என்கிறீர்கள். மகிழ்ச்சி, எங்கள் வீடும் நாட்டுக்குள் தான் இருக்கிறது. பிரச்சாரம், அறிவுரை எல்லாம் எங்கள் வீட்டில் உள்ளவர்க்கும் சேர்த்துதான்.

"இதிகாசம், புராணம், சரித்திரம் ஆகியவை சமுதாயத்தின் அருமை பெருமைக்கு ஆதாரமாக உள்ளது" தினமணியின் கண்டுபிடிப்பு. இராமாயணத்தை எடுத்துக் கொள்வோம். சூத்திரன் சம்பூகன் தவம் செய்வதைக் கண்ட பார்ப்பனர்கள், மனுதர்மப்படி சூத்திரனுக்கு அந்த தகுதி கிடையாது என்று இராமனிடம் முறையிட இராமனோ சம்பூகன் தலையை கொய்து விடுகிறான். இது தான் இராமனின் பண்பாடு. சூத்திரன் படித்தால் நாக்கை அறு, படிப்பதை கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று எனக்கூறுவது மனுதர்ம பண்பாடு. மனுமர்மத்தை உயர்த்தி பிடிக்கும் இராமனை, அத்வானியும் இல.கணேசனும் வைத்திய நாதன்களும், துக்ளக் சோ-க்களும் தூக்கி தலையில் வைத்துக் கொண்டாடலாம், அவர் வழி நடக்கலாம். சூத்திர கலைஞருக்கும் மற்றவர்களுக்கும் அவசியமில்லை.

இறை மறுப்பு இயக்கம் இந்தியாவிலும் மட்டுமல்லாது உலக நிலையிலும் தோல்வியைக் கண்டுள்ளது என்று " தினமணி" கூறுவது தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறது. மனிதனின் பரணாம வளர்ச்சியை கூறும் டார்வின் தத்துவத்தை கத்தோலிக்க மதகுரு போப் ஜான்பால் (கடந்த முறை பதவி வகித்தவர்) கருத்தியல் ரீதியாக ஏற்றுக்கொன்டார் என்பது உலகம் அறிந்த உண்மை. தமிழகத்தில் பெரியாருக்கு பிறகு பக்தி அதிகமாகி விட்டதாக கூறுகின்றீர்கள், சரி ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம். இராமரையும் அவரது பாலத்தையும் பாதுகாக்க, குரல் கொடுக்க, வடநாட்டு அத்வானியும், சோ, இல.கணேசன், இராமகோபாலன், வைத்தியநாத அய்யர்களை தவிர வேறு யாரும் வந்ததாக தெரியவில்லை. காரணம் பெரியாரின் பகுத்தறிவு வெளிச்சம்.

இந்தியாவின் உயர்ந்த பீடமாக கருதப்பட்ட "லோக குரு" காஞ்சி - சங்கராச்சாரியாரை கைது செய்தபோது சங்கரமடத்தின் பக்கத்து தேநீர் கடை கூட மூடப்படவில்லை. இதுதான் உங்கள் நிலை தமிழகத்தில்.


எந்தவொரு பகுத்தறிவாளனும் கோயிலுக்குள் சென்று கொலை செய்தது கிடையாது. அடுத்த மதத்துக்காரனை உயிரோடு எரித்தது கிடையாது. அவனது வழிபாட்டுத்தளத்தை இடித்தது கிடையாது. "கடவுள் இல்லை" என்று கூறும் ஒருவரால், ஒரு கோயிலுக்கோ, ஒரு மசூதிக்கோ, ஒரு தேவாலயத்துக்கோ பாதிப்பு ஏற்பட்டிடருக்கமா? அன்பை போதித்த 8000 சமணர்களை கழுவேற்றி கொன்ற பெருமையுடையதுதான் உங்கள் இறை நம்பிக்கை.

சேது சமுத்திர திட்டம் என்பது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் ஓர் அற்புதமான திட்டம். சுமார் பத்துக்கும் மேற்பட்ட துறைமுகங்கள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டு, வேலைவாய்ப்பை பெருக்கி தென்னகத்தை முன்னேற்றும் என்பது மறுக்க இயலா உண்மை.

சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றபட வேண்டுமா? அல்லது இந்துமத உணர்வுகளை தூண்டி விட்டு தமிழகத்தின் வளம் கொழிக்கும் திட்டத்தை கெடுக்க வேண்டுமா? என்பதை மக்கள் மன்றத்திடம் விடுவோம். அவர்கள் முடிவு செய்யட்டும். அதுவரை இராம பக்தர்கள் பஜனை செய்யுங்கள், இராமராவது தமிழ்நாட்டு மக்கள் மனதில் புகுந்து மாற்றம் செய்வாரா? பார்ப்போம். கடவுள் இருந்தால் தனது பாலத்தைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் உங்களுக்கு ஏன் கவலை?

புரிந்தவனுக்கு இருமுறை சொல்லவேண்டிய அவசியமில்லை

என் கட்டுரையில் எழுதுவதற்காக மேற்கோள்களுக்காக இணையத்தில் தேடியபொழுது இனிமேல் புதிதாக நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்னும் அளவிற்கு சிலர் நன்றாகவே எழுதியிருக்கிறார்கள். அவற்றைப் படித்த பின்னரும் ஒரு சிலர் தேர்ந்தெடுத்து மட்டுமே புரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு எத்தனை கட்டுரைகள் எழுதினாலும் விழலுக்கு இரைத்த நீரேயாகுமன்றி பயனொன்றும் தாராது. நான் எப்பொழுதும் பொன்மொழியாக கீழுள்ள மொழியைச் சொல்லுவேன்,

புரிந்தவனுக்கு இருமுறை சொல்லவேண்டிய அவசியமில்லை; புரியாதவனுக்கு இருமுறை சொல்லியும் பிரயோஜனமில்லை.

எனக்கு இந்த மொழி முதன்முதலில் எங்கு கிடைத்ததோ தெரியாது. என்னிடம் நன்றாகவே தங்கிவிட்டது.

ராமர் இல்லை என்றுதான் நான் சொல்லப் போகிறேன் என்று முன்முடிவு செய்துகொண்டு இக்கட்டுரையைத் தொடர இருப்பவர்களுக்கு, ஒரேயொரு வாக்கியம்: உங்களுக்கென்றே ஒரு ஆச்சரியத் தகவல் இக்கட்டுரையின் முடிவில் வைத்திருக்கிறேன்.

செயற்கைக்கோள் படம்

செயற்கைகோள் படங்களை இயற்கை வளங்கள் சம்பந்தமான ஆராய்ச்சிகள் மற்றும் மேலாண்மை முடிவெடுத்தல் போன்றவற்றிற்கு பயன்படுத்த ஆரம்பித்து (1972) சில காலம் ஆகிறது. இன்று நாஸாவைவிட இந்தியாவிடம்தான் நுட்பத்தால் உயர்வான செயற்கைக்கோள்கள் இருக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது.

செயற்கைக்கோள்கள் இருவகைப் படும். பூமியைச் சுற்றிவருபவை, பூமிக்குமேல் எப்பொழுதும் ஓரிடத்தில் இருப்பவை. முதல் வகையைத், துருவம் சுற்றும் (polar orbitting) செயற்கைக்கோள்கள் அல்லது சூரியனைச் சார்ந்த (Sun synchronous) செயற்கைக்கோள்கள் என்று சொல்லுவர். இவற்றின் சுற்றும் முறை சூரியனின் இருக்குமிடத்தை (position) வைத்து கணிக்கப் படுவதாலும், பூமியைச் சுற்றுவதற்காக இவை துருவங்கள் வழியாக சென்றுவருவதாலும் இவ்வாறு பெயர் பெற்றன. ஐ.ஆர்.எஸ் வரிசை (IRS series) இவ்வைகையைச் சார்ந்தவை. இவையே தொலை உணர்வு படங்களைத் (remote sensing images) தருபவை. இரண்டாம் வகையை, புவிநிலை (Geo stationary) செயற்கைக் கோள் அல்லது புவி சார்ந்த (Geosynchronous) செயற்கைக்கோள் என்று சொல்லுவர். இவற்றின் சுற்றும் முறை புவியின் இருக்கும் இடைத்தை வைத்துக் கணிக்கப் படுவதாலும், எப்பொழுதுமே பூமிக்கு மேல் ஓரிடத்தை மட்டுமே பார்க்கும் படியாக சுற்றுவதாலும் இவற்றிற்கு இந்தப் பெயர். இவ்வகையே வான்நிலை ஆராய்ச்சி (weather prediction) மற்றும் தொலை (telecommunication) சம்பந்தமான உபயோகங்களுக்குப் பயன்படுகிறது. இவை தொலைத்தொடர்பு உணர்வு படங்கள் தராது. இன்ஸாட் (INSAT) செயற்கைக்கோள் போன்றவை இவ்வகையே.

செயற்கைக்கோள் படங்களை ராணுவத்தாரன்றி பொது மக்கள் பயனுக்கு முதன்முதலில் உபயோகப் படுத்த ஆரம்பித்தபோது, அதிக வரவேற்பைப் பெறவில்லை. காரணம் என்னவென்றால், செயற்கைக் கோள் படத்தில் ஒரு புள்ளி (pixel) என்பது பூமியில், தரையில், 80மீ x 80மீ பரப்பளவைக் குறித்தது. இதை spatial resolution என்று சொல்லுவர், அல்லது சுருக்கமாக 80மீ resolution என்று சொல்லுவர். ஆனாலும் geology போன்ற பரந்த நிலத்தை ஆராயவேண்டிய படிப்புகளுக்கும், இதுவரை யாரும் போகாத, போகமுடியாத இடங்களின் படங்களும் ஆர்வத்தை வளர்க்க, செயற்கைக்கோள் படங்கள் வரவேற்கப்பட ஆரம்பித்தன. 80மீ resolutionலிருந்து 30மீ resolutionக்கு நாஸா முன்னேறியது மிகப் பெரிய முன்னேற்றமாகும். அதன்பின், பிரெஞ்சு செயற்கைக் கோள் 20மீ resolutionஇல் வண்ணப் படமும், 10மீ resolutionல் கறுப்பு வெள்ளைப் படமும் எடுக்கும்படியாக நுட்பம் வளர்ந்ததோடு, படம் எடுக்கும் முறையிலும் பிரெஞ்சு செயற்கைக்கோளில் இருந்த உணர்வுகருவி (sensor)யின் நுட்பம் வளர்ந்தது. (செயற்கைக்கோள் இந்த உணர்வு கருவியை வைத்திருக்கும் ஒரு வீடு அல்லது ஒரு தளம்தானே ஒழிய, படங்கள் எடுப்பது/தருவது இந்த உணர்வுக் கருவிகள்தாம்).

இந்தியா இத்துறையில் நுழைந்தபோதே, இந்தப் புதுமுறையில் படம் எடுக்கும் படி தன் உணர்வுக் கருவிகளைத் தயாரித்ததோடு, பிரெஞ்சு நாட்டின் தொலைஉணர்வுப் படங்களுக்கு ஓரளவு இணையாக spatial resolution இருக்கும் படியாகவும் தன் உணர்வுக் கருவிகளைத் தயாரித்து வான்வெளியில் விட்டது. அப்பொழுது இந்தியாவிற்கு மிக முக்கிய வெற்றி தன் தேவைகளுக்கு அதிக விலைகொடுத்து இப்படங்களை மற்றவரிடம் வாங்காமல், நம்மிடமே குறைந்தவிலையில் நம் ஆராய்ச்சி மற்றும் பிற உபயோகங்களுக்கு இப்படங்கள் கிடைத்தன.

ஆனாலும் சில துறைகளுக்கு இந்த spatial resolution போதுமானதாக் இருக்கவில்லை. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டிற்கு, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக பரந்து விரிந்து கொண்டிருக்கும் நகரங்கள் சம்பந்தப் பட்ட ஆராய்ச்சிகள் மற்றும் மேலாண்மை முடிவுகளுக்கு இப்படங்கள் போதுமானதாக இல்லை.

படங்களை ஆராயும் முறையிலும், கணினி ஆராய்ச்சிகளிலும், ரேடார் போன்ற உணர்வுக் கருவிகள் கொண்டுமாக பல்வேறு திசைகளில் நுட்பம் வளர்ந்தது. சில விசயங்களுக்கு readymade products தேவைப்பட்டது. இல்லையேல், ஒவ்வொருமுறையும், செயற்கைக்கோள் படங்களை raw dataவாக வாங்கி, அதை தன் கணினியில் தேவையான productஆக மற்றும் மறுபடி மறுபடி ஒரேமாதிரியான processing செய்து சில products செய்வதை விட தனியாரிடமிருந்து கிடைத்தால் வாங்கிக் கொள்ள அலுவலங்கள் தயாராயின. ஒவ்வொறு நிறுவனமும் மிகவும் skilled professionalஐ வேலைக்கு வைத்துக் கொள்ள வேண்டிய தேவையையும், special software மற்றும் computer systems வைத்துக் கொள்ள வேண்டிய தேவையையும் இது குறைத்தது. தனியார் நிறுவனங்கள் அதிகமாயின.

செயற்கைக் கோள் படங்களின் உபயோகமும் அதன் popularityயும் அதிகரிக்கவே, என்ன படங்கள் யாரிடம் வாங்கலாம், என்ன விலை என்பவை சுலபமாக browse செய்து பார்த்து தெரிந்து கொண்டு வாங்கிக் கொள்ளும்படி வாடிக்கையாளர்களுக்கு வசதியாக தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் தங்களிடம் உள்ள செயற்கைக் கோள் படங்களைப் பொதுப் பார்வையில் சுலபமாகக் கிடைக்கும்படி செய்தன.

அமெரிக்காவில் தனியார் துறைகள் செயற்கைக் கோள் விட ஆரம்பித்து, அவற்றின் spatial resolutionஉம் 1மீக்கும் குறைவாக வர, இந்திய ராணுவம் பதறியது வேறுகதை. அதனால் இந்திய செயற்கைக்கோள் உணர்வு கருவிகள் நல்ல spatial resolutionஇல் படங்களை வெளிவரவிடாமல் இந்திய ராணுவம் தடுத்தது மற்றொரு கதை. இன்று ISRO என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய இங்கு மற்றும் இங்கு செல்லவும்.

பொதுமக்களோ, ஆராய்ச்சியாளர்களோ, யாராயிருந்தாலும் எல்லோரும் வாடிக்கையாளர்களே. வாடிக்கையாளர் வசதிக்காக browse products என்று சில குறுக்கப்பட்ட படங்களை தங்கள் இணைய தளங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைத்ததினால் தான் ராமர் பாலம் போன்ற இடங்களின் செயற்கைக்கோள் படங்கள் எல்லோருக்கும் கிடைக்கும்படி ஆனது. நாஸா போன்ற நிறுவனங்களும் தங்களிடம் உள்ள படங்களை தன் வாடிக்கையாளர்கள் சுலபமாக browse செய்து தனக்குத் தேவையான படத்தை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொள்ளுவதற்குத்தான் image gallery என்ற இணையப் பக்கத்தை வைத்திருக்கிறது. இந்த இணணயப் பக்கத்தில் ஒரு குறிப்பிட்ட வகைப் படங்கள் மட்டுமே உள்ளன. இதேபோல் இன்னும் பல இணைய பக்கங்கள் நாஸாவிற்கே உள்ளன. தனியார் நிறுவனங்களிலும் இதுபோன்ற இணைய பக்கங்கள் உள்ளன. ஐரோப்பிய வான்வெளி நிறுவனமும் தனக்கென்று சில இணயப் பக்கங்கள் வைத்திருக்கிறது. நாஸாவின் மேற்குறிப்பிட்ட image galleryயில் உள்ள படங்களை உபயோகப் படுத்துவதற்கான நிபந்தனைகளை இங்கு பார்க்கவும்.



Image Science & Analysis Laboratory, NASA Johnson Space Center. STS059-229-25. http://eol.jsc.nasa.gov/.

இந்தப் படத்தில் இலங்கையும் இந்தியாவும் சரியான இடங்களில் இல்லை (கொஞ்சம் திருப்பி கொஞ்சம் சுற்றினால் சரியாக வரும்). என்பதுகூட கவனிக்கமுடியாத அமெச்சூர்கள், ராமர் பாலம் கண்டுபிடித்தனர், அது மனிதனால் கட்டப்பட்டது என்று உறுதிபூண்டனர் .

ஒவ்வொன்றாகப் போகலாம்.

மனிதனால் கட்டப் பட்ட அமைப்புகளுக்கென்று சில குணங்கள் இருக்கின்றன. சில அமைப்புகள் சீராக இருக்கும். ஆனால், மலைவெளியில் சாலை போன்ற சில அமைப்புகள் வளைந்து வளைந்துதான் இருக்கும் (ஆனாலும் இதிலும் ஒரு சீர் இருக்கும்). ஆனால், சீராக இருக்கும் அமைப்புகள் எல்லாமே சீராக இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக மனிதன் கட்டியதாகாது. மலைகளின் உச்சிக்கோடுகள் (ridge lines) சீராகத்தான் இருக்கும். இவை மனிதனால் கட்டப் பட்டவை அல்ல.

அடுத்து, வேறு சில குணங்களை, மனிதனால் செதுக்கப் பட்ட, அல்லது, அடுக்கப் பட்டதற்கான அடையாளங்கள் போன்ற சில குணங்களை ஆராய வேண்டும். இதற்கு நேரடியாக சம்பத்தப் பட்ட இடத்திற்கே சென்று ஆராயவேண்டும், அல்லது படத்திலேயே பார்க்க வேண்டுமென்றாலும், ஓரளவு பார்ப்பதற்காக அடுத்த கட்டத் தகவலாக தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள் படத்தின் spatial resolution என்னவென்று பார்க்கவேண்டும். அடுத்து, முழுப் படத்தின் original அளவில்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோமா, அல்லது, இது குறுக்கப் பட்ட படமா என்று கவனிக்க வேண்டும். முதன்முதலில் சுற்றிவந்த மேலே கொடுக்கப் பட்டுள்ள இந்தப் படம் 640 x 480 புள்ளிகள் கொண்ட மற்றும் ஒரு குறுக்கப் பட்ட படம். இது originalஆக, சற்றேறக் குறைய 6000 x 4000 புள்ளிகள் கொண்ட படமாக இருந்திருக்க வேண்டும், இது 1994, ஏப்ரல் 16ஆம் தேதி STS059 என்ற missionஆல் எடுக்கப் பட்ட படம். இந்தப் படம் வேண்டுமென்று ஆர்டர் செய்தால் மற்ற விபரங்கள் கிடைக்கும். Original படத்தில் ஒவ்வொரு புள்ளியும் தரையில் எவ்வளவு பரப்பளவைக் குறிக்கிறது என்பதையும், நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் குறுக்கப் பட்ட படத்தில் ஒரு புள்ளி (pixel) என்பது தரையில் எவ்வளவு பரப்பளவைக் குறிக்கிறது என்பதையும் பார்க்கவேண்டியது மிக மிக மிக அடிமட்ட அடிப்படைத் தேவை.

இந்தப் படத்தைப் பற்றிய தகவல்களை இங்கு காணலாம். இது தவிர, இங்கு போனால், மொத்தம் 455 படங்கள் இந்தியாவும் இலங்கையும் சேரும் இந்தப் பகுதிக்கு கிடைக்கும். நாஸாவிடமே வேறு சில செயற்கைக் கோள்களும் அவற்றின்மூலம் இந்த இடத்திற்கு இன்னும் படங்களும் இருக்கின்றன. இது தவிர, மற்ற செயற்கைக் கோள்களிலிருந்தும் (தனியார் செயற்கைக் கோள்கள், மற்ற நாடுகளின் செயற்கைக் கோள்கள்) வேண்டுமானாலும் பெறலாம். இந்திய செயற்கைக்கோள்களின் படங்களே கண்டிப்பாக இந்தப் பகுதிக்கு இருக்கின்றன. அவற்றில் OCEANSAT மற்றும் CARTOSAT-ன் படங்கள் மிகவும் பொறுத்தமானவையாக அமையும்.

இயற்கையா, கட்டப்பட்டதா?

ராமர் பாலம் ஒரு இயற்கை அமைப்பு என்பதற்கான geological விளக்கத்தை இவர் மிக நன்றாகத் தந்திருக்கிறார். அவருக்குமேல் நான் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. மேலும் அவர் சொல்லுவதுபோல், இதற்கென்று அதிக அளவில் ஆராய்ச்சிகள் நடக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. நாட்டில் இப்படி எதெற்கெடுத்தாலும் தொட்டாற்சிணுங்கிபோல் போராட்டங்கள் உருவானால், எந்த நிறுவனமும் எந்த மனிதனும் இதுபோன்ற ஆராய்ச்சியில் திறந்தமனதோடு ஈடுபடத் தயங்குவான். தற்போது நடந்துவரும் போராட்டங்கள் எதிலும் சமயத்தைத் திணிக்கும் மனப்போக்குகள் எந்தவிதமான ஆராய்ச்சியையும் வளரவிடாது என்பது ஒரு வெட்கக் கேடான நிலைதான்.

ஆராய்ச்சி நிறுவனங்களில் வேலை செய்பவர்களும் அந்த நிறுவனங்களை நிர்வகிப்பவர்களும்கூட சமயம் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும். எல்லா ஆராய்ச்சியாளர்களும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என்ற எண்ணம் தவறு. கடவுள் நம்பிக்கை இருப்பது தவறல்ல, தன் சொந்த நம்பிக்கைகளைத் தாண்டி, தனக்குக் கிடைக்கும் ஆதாரத்தை ஆதாரமாக மட்டுமே பார்க்கும் கண்ணோட்டம் உள்ளவராக இருந்தால் மட்டும் போதும். அப்படி இல்லாததால் தானே தற்போது போராட்டமும் மற்ற குழப்பங்களும். அதேபோல், இந்துமதம் தவிர மற்ற மதத்தவரும் ஆராய்ச்சியாளர்காளாக இருப்பார்கள் என்பதையும், அவர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவது எவ்வளவு ஆபத்தாக முடியும் என்பதையும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இந்த ஆராய்ச்சிக்கான எதிர்காலம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது ஓரளவு புரியும். அத்தோடு, ஆராய்ச்சியாளர்களும் ஏதேனும் ஒரு அரசியல் பிரிவைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதையும் மனதில் கொண்டால் இன்னும் தெளிவாக இந்தியாவில் அறிவியலின் எதிர்காலம் புரியும்.

ராமர் பாலத் திட்டத்தில் பொருளாதார அனுகூலம் உண்டா இல்லையா

இதற்கான விளக்கத்தை இவர் மிக நன்றாக விளக்கியிருக்கிறார். இதற்கு மேலும் நான் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. .

ராமர் இருந்ததற்கான அத்தாட்சி இல்லை என்று ASI சொன்னது சரியா?

இதற்குப் பெயர்தான் தேர்ந்தெடுத்துப் புரிந்து கொள்ளுதல்.

†கீழுள்ள தகவல்கள் இணையத்தில் படிக்கக் கிடைத்தவையின் மூலமே எழுதுகிறேன். மாற்றமிருந்தால் சுட்டிக் காட்டவும். கண்டிப்பாக மாற்றிவிடுவேன்.

ராமர் பாலத் திட்டம் முன்மொழியப் பட்டு(2001?), ஒத்துக்கொள்ளவும் பட்டவுடன் சிலர் இந்த இடத்தை அழிக்கக் கூடாது என்றும், தொன்மையான கட்டடங்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற சட்டத்தின் கீழ் இந்த இடத்தைக் கொண்டுவரவேண்டுமென்றும் இந்த விவகாரத்தை சட்ட அரங்கிற்குக் கொண்டுவந்தனர். சட்ட அரங்கில், இரு தரப்பினரும் தத்தம் வாதத்தை வைக்கத் தொடங்கினர். அரசாங்கத்தின் தரப்பில் ASIயின் ரிப்போர்ட் ஆக ராமர் பாலம் இயற்கையே என்ற வாதம் வைக்கப் பட்டது. தொன்மையான கட்டிடப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த இடத்தை ASI கொண்டுவராது, ஏனெனில், இது மனிதனால் கட்டப் பட்ட அமைப்பல்ல, இயற்கையான அமைப்பே என்று ASI வாதாடியது.

வால்மீகி எழுதிய ராமாயணத்தை தங்கள் தரப்பு சான்றாக வைத்து வாதம் வைத்தனர் மறுதரப்போர்.

“வால்மீகி ராமாயணம் ஒரு சான்றாக அமையாது” – ASIயின் வாதம்

“ஏன்” – மறுதரப்போர்

“ஏனெனில் அது எழுதப் பட்டக் கதைநூல். ராமர் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்தான் என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை”. – ASI.

There you go. You got what you wanted.

†மேலுள்ள தகவல்கள் இணையத்தில் படிக்கக் கிடைத்தவையின் மூலமே எழுதியிருக்கிறேன். மாற்றமிருந்தால் சுட்டிக் காட்டவும். கண்டிப்பாக மாற்றிவிடுவேன்.

.

ராமர் உயிருடன் உலவிய மனிதனா, அல்லது கற்பனை உருவமா?

ராமேஸ்வரமும் இலங்கையும் இணையும் அந்தப் பகுதியில் அடிக்கடல் ஆராய்ச்சி செய்தால் கண்டிப்பாக மனிதன் வாழ்ந்த இடங்களும் சான்றுகளும் கிடைக்கும் என்பதில் எனக்கு இம்மியளவும் சந்தேகமில்லை. தனுஸ்கோடி என்ற நகரம் அழிந்து போயிருக்கிறது. தனுஸ்கோடியும் அதன் சுற்றுப்புற மனிதன் வாழ்ந்த இடங்களும் கடலுக்கடியில்தான் இருக்கின்றன. மனிதன் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்தாலுமே, உடனே ராமர் என்று தாவிவிடக் கூடாது. மனிதன் கற்காலத்திலிருந்து பல ஆண்டுகளாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறான். கற்காலத்திலேயே கல்லைக் கல்லால் செதுக்கியிருக்கிறான். அப்படி செதுக்கப் பட்ட ஒரு கல் கிடைத்தால், அங்கு ஒரு மனிதன் வந்துபோயிருந்திருக்கிறான் என்பதுதான் தகவலே தவிர வேறெதுவுமில்லை. இலங்கையும் ராமேஸ்வரமும் இணையும் இந்தப் பகுதியில் தொன்றுதொட்டே இரு நிலப் பகுதிகளுக்குமிடையில் கடல்போக்குவரத்து, மீன்பிடித்தல் போன்றவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதற்கான அடையாளங்களும் இந்தக் கடல்பகுதியில் இருக்கத்தான் செய்யும். கிரேக்கம் (Greeks) மற்றும் ரோமானியர் (Romans) போன்ற வேற்று நாட்டவரும் வணிகம் பொருட்டு கடல்வழியாக நம் நாட்டிற்கு வந்துபோய்க் கொண்டுதானிருந்தனர். நம்பகுதியின் கடல்குணம் சரிவரத்தெரியாமல் அவர்களின் கப்பல்கள் உடைந்துபோய்த்தானிருக்கின்றன. அதற்கான அடையாளங்களும் கடலுக்கடியில் கிடைக்கும்தான். மனிதனுக்கு முன்னிருந்தே, மற்றும் மனிதன் வாழ்ந்த காலத்திலும்கூட மரங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மரத்துண்டுகள் கிடைத்தாலுமே மரத்துண்டுகளை மட்டும் வைத்தும் எந்த முடிவுக்கும் வர இயலாது.

ஆதாரம் வைத்து ஒரு விசயத்தை உறுதிசெய்வதற்கு நிறய விசயங்களைக் கவனிக்கவேண்டும்.

செயற்கைக்கோள் படத்தை மட்டும் வைத்து இயற்கையா மனிதன் கட்டியதா என்று சொல்லமுடியாது என்ற வாக்கியத்தில் எங்கிருந்து மனிதன் கட்டியதுதான் என்று சிலருக்குப் புரிகிறது என்பது எனக்குப் புரியாத புதிர். இயற்கை என்று உன்னால் சொல்ல முடியாதுதானே அப்படியானால் இது மனிதன் கட்டியதுதான் என்பது முட்டாள்தனம். மனிதன் கட்டியதுதான் என்பதை உறுதிப் படுத்தத்தான் நிறைய ஆதாரங்கள் வேண்டும். அதிலும் இந்த காலகட்டத்திற்குரியது இந்த ஆதாரம் அல்லது அமைப்பு என்பதற்கு நிறையவே ஆதாரம் வேண்டும். இயற்கை அமைப்புகளை இயற்கை process மூலம் விளக்க முடியும். வேறு சில இடங்களில் இதேபோன்ற அமைப்புகள் இருந்தால் அந்த உதாரணங்களையும் ஒத்துப் பார்த்து சந்தேகத்துக்கு இடமின்றி இது இயற்கை அமைப்பே என்பதை உறுதிப் படுத்த முடியும். இவர் எழுதியிருப்பதைப் பார்க்கவும்.

ராமர் வாழ்ந்ததாகக் கருதப்படும் காலகட்டம் பற்றிய கருத்திலேயே எல்லோருக்கும் ஒருமித்த கருத்து இல்லை. 1.7மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மனிதனே இல்லை. சிலர் 17மில்லியன் என்று புள்ளியை மறந்து காலகட்டத்தை இன்னும் பின்னோக்கிக் கொண்டுபோய் தங்கள் வாதத்தின் முட்டாள்தனத்தை இன்னும் கூட்டிக் கொள்கிறார்கள். 3000-4000 கிபி என்ற வாதம் ஓரளவு பரவாயில்லை.

பனி வயது (Ice age)

கண்டப் பனிமலைகள் (continental glaciers) உருகி கடலின் அளவு அதற்கு முன்னர் இருந்ததைவிட உயர்ந்து இருக்கிறது. இதை ice melting age அல்லது ice age (பனி வயது) என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு பனிவயதுக் காலம் முடியும்போதும் பனி உருகி கடலில் சேரும்போது கடல்மட்டம் உயர்ந்துகொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு முறை கடல் மட்டம் உயரும்போதும் கடற்கரைகள் கடலில் மூழ்கிக்கொண்டே வந்திருக்கின்றன; நிலப்பகுதிகள் காணாமல் போய்க்கொண்டேவும், சில நிலப்பகுதிகளுக்கு இடையில் கடல் வந்து தீவுகளும் உருவாகிக் கொண்டும் இருந்திருக்கின்றன. பெரிய பனிவயது மற்றும் சிறு பனிவயதுகள் நடந்துகொண்டே இருந்திருக்கின்றன. *6000 வருடங்களுக்கு முன்னால் ஒரு சிறு பனிவயது நடந்திருக்கலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள். பனிமலை உருகி ஆறுகளில் வேகமாக நீர் அடித்துக்கொண்டு வரும்பொழுது ஆற்றோரமும் கடற்கரையோரமுமாக வாழ்ந்த மனிதனின் இருப்புகள் அழிக்கப் பட்டிருக்கலாம்.

*6000 வருடங்களுக்கு முன்னால் மனிதன் சிறு சிறு கூட்டங்களாக வசித்திருப்பான். பனி உருகி கடல் பொங்கியது போன்ற இயற்கை இடுக்காடுகளில் இருந்து தப்பிப் பிழைத்தவன் வாய்க்கதைகளாக சில விசயங்களை சொல்லி வைத்திருப்பான். வாய்க்கதைகள் கதைநூல்களாக ஆகியிருக்கலாம். ராமனும் வாழ்ந்திருந்திருக்கலாம், வாய்வழிக் கதையாய் ஆகியிருக்கலாம்; வால்மீகியும் அதைப் பின்னர் கதையாக எழுதியிருக்கலாம். ஆனால், இதை உறுதிப் படுத்தி அதன்மூலம் ஒரு இடத்தை தொன்மை வாய்ந்த கட்டிட அமைப்பு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டுமென்றால், ஆதாரங்கள் வேண்டும். வால்மீகியின் புத்தகம் ஆதாரமல்ல. யார் ஆண்டார் யார் வாழ்ந்தார் என்ற விபரமே இல்லையென்றாலும், மனிதன் கட்டிய கட்டிடங்கள் கிடைத்ததால் மட்டுமே மொஹஞ்சதாரோவும் ஹரப்பாவும் பாதுகாக்கப் படுகின்றன. ராமர் பற்றிய ஆதாரமே தேவையில்லை. இருக்கின்ற பாலம் மனிதன் கட்டியது என்ற ஆதாரம் கிடைத்தால் மட்டுமே எந்தப் பகுதியையும் இந்தச் சட்டத்தின் கீழ் பாதுகாப்புக்குக் கொண்டுவரமுடியும். இயற்கை அமைப்பாக இருக்கும்பொழுது அப்படிச் செய்ய இயலாது.

* - 6000தானா என்பதை சரிபார்க்கவேண்டும்.

படிக்கவேண்டிய இணைப்புகள்

மேலே கட்டுரையில் இணைக்கப் பட்டுள்ளவை தவிர மேலும் படிக்க வேண்டிய இணைப்புகள்:

  1. http://suvratk.blogspot.com/2007/09/ram-sethu-dummies-guide.html
  2. http://sujaiblog.blogspot.com/2007/09/abc-of-ram-sethu.html
  3. http://sujaiblog.blogspot.com/2007/09/science-and-mythology-ram-sethu.html
  4. http://blog.tamilsasi.com/2007/10/sethu-samudram-frequently-asked.html
  5. http://thoughtsintamil.blogspot.com/2007/10/blog-post.html
  6. http://sujaiblog.blogspot.com/2007/09/why-hindus-are-upset.html
  7. http://www.rediff.com/news/2007/sep/17sethu.htm
  8. http://en.wikipedia.org/wiki/Adam%27s_Bridge

(அயர்ச்சியாக இருக்கிறது!).

இன்னும் எழுதமுடிந்தால் எழுதுகிறேன். ஏதேனும் குறிப்பாக தேவையென்று மறுமொழியாகச் சொன்னால் முயற்சி செய்து எழுதுகிறேன். இல்லையென்றால் இத்தோடு முடித்துக் கொள்ளுகிறேன்.

பி.கு. இந்தக் கட்டுரையில் உள்ள ஆங்கிலம் மற்றும் சில மொழிபெயர்க்கப் பட்ட தமிழ் வார்த்தைகளுக்கும் சரியான தமிழ் வார்த்தைகள் சொன்னால் மாற்றிக் கொள்கிறேன். பரிந்துரைக்கும் வார்த்தைகளில் சிலதை நான் ஏற்றுக்கொள்ளலாம், சிலதை நான் தவிர்க்கலாம். சொற்குற்றம் மட்டுமன்றி பொருட்குற்றமும் பார்ப்பவள் நான். ஆகையால் உங்கள் பரிந்துரையைக் கண்டிப்பாக நான் ஏற்றுக்கொண்டு என்கட்டுரையில் சேர்த்துவிட வேண்டுமென்று எதிர்பார்ப்பதோ வலியுறுத்துவதோ என்னிடம் வேலைக்காகாது.

பிரேமலதா

புஷ்பக விமானம், பத்து தலை அரக்கன், மாயாவிகள்

சேது சமுத்திரம் தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி இந்துக் கடவுள் ராமர் பற்றிப் பேசியது பிரச்னையை எழுப்பியுள்ளது. ராமர் உண்மையில் வாழ்ந்தார்; சமுத்திரத்தின்மீது பாலம் ஒன்றை எழுப்பினார் என்று பல இந்துக்கள் நம்புகின்றனர். அதைக் கேலி செய்யும் விதமாக அல்லது இதுபோன்ற நம்பிக்கைகளைக் கேள்விக்கு உட்படுத்தும் விதமாக யாராவது பேசினால் உடனே தலையை வெட்டுவோம், பஸ்ஸைக் கொளுத்துவோம் என்று முரட்டுத்தனமாக பலர் நடந்துகொள்கிறார்கள்.

1. மத உணர்வுகளைப் புண்படுத்துவது என்றால் என்ன?

(அ) ஒவ்வொரு மதமும் தனக்கென சில நம்பிக்கைகளை வைத்துள்ளன. அந்த நம்பிக்கைகளை யாராவது கேள்விக்கு உட்படுத்தினால் அந்த மத நம்பிக்கையாளர்களுக்குக் கடும் கோபம் வருகிறது.
(ஆ) ஒரு மதம் புனிதமாக நினைக்கும் சிலவற்றை சிலர் கேலி செய்யும்போது அந்த மதத்தவருக்குக் கோபம் வருகிறது.
(இ) ஒரு மதத்தவரின் புனிதச் சின்னங்களை, கோயில்களை, சிலைகளை அசுத்தம் செய்வதால், தாக்குவதால் கோபம் வருகிறது.

உதாரணம்: தமிழக முதல்வர் செய்தது (அ) மற்றும் (ஆ). ராமன் என்னும் கடவுள் இருந்தாரா இல்லையா என்ற கேள்வியை எழுப்பி, இல்லை என்பது தனது கருத்து என்றும் அதனால் ராம சேது என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அறிவியல்பூர்வமாக அது வெறும் மணல்திட்டு என்றும் கருணாநிதி பேசியிருந்தால் பிரச்னையை ஊதிப் பெரிதாக்க முடிந்திருக்காது. ஆனால் அரசியல் மேடைகளில் அடுத்தவரைக் குத்திக் காட்டிப் பேசுவது சர்வசாதாரணமானது. எனவே "ராமன் எந்த எஞ்சினியரிங் காலேஜில் படித்தான்?" என்று பேசும்போது பிரச்னை பெரிதாகிறது.

டென்மார்க் முகமது கார்ட்டூன் பிரச்னையை எடுத்துக்கொள்வோம். முகமது நபியை கார்ட்டூனாக உருவமாகவோ வரைவது ஏற்புடையதல்ல என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால் டென்மார்க் பத்திரிகை ஒன்று தன் வாசகர்களை முகமது நபியை கார்ட்டூனாகச் சித்திரிக்குமாறு அழைத்தது. அப்படி வரையப்பட்ட பல கார்ட்டூன்கள் வேண்டுமென்றே மோசமாகச் சித்திரிக்கப்பட்டவை. முஸ்லிம்கள் கோபம் கொள்ளவேண்டும் என்றே வரையப்பட்டவை.

2. யார் யாரெல்லாம் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள்?

(அ) அறிவியல், மருத்துவக் கண்டுபிடிப்புகள் அனைத்துமே மதங்களின் அடிப்படைகளைத் தவறு என்று அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. இதனால் மத உணர்வாளர்கள் ஒரு காலத்தில் கடுமையாக அவதியுற்றனர். இப்பொழுது வேறு வழியில்லை என்று அறிவியலை, மருத்துவத்தை ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆனாலும் பல இடங்களில் அறிவியல் அறிஞர்கள் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டனர் என்று மதவாதிகள் சண்டைக்கு வருகின்றனர்.
(ஆ) சமூக அறிவியல் அறிஞர்கள், சிந்தனைவாதிகள், அரசியல்வாதிகள் பலரும் மதங்களின் மோசமான பின்தங்கிய நோக்கைச் சாடுகின்றனர். கருத்து ரீதியில் மதங்களின் தவறான கருத்துகளை எதிர்கொள்வது அவசியம். இங்கு மத உணர்வுகளைப் புண்படுத்துவது அவசியமாகிவிடுகிறது. எல்லா மதங்களும் பெண்களை நடத்துவது; இந்து மதத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் போன்ற பலவற்றை எதிர்த்துப் போராடுவது அவசியமாகிறது.
(இ) மத உணர்வுகளைப் புண்படுத்துவதில் முன்னிலை வகிப்பவர்கள் பிற மதங்களின் அடிவருடிகள்தாம்! முஸ்லிம்கள் பலரும் ஒவ்வொரு நாளும் கிறித்துவ, இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். இந்துக்கள் பலரும் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறார்கள். டென்மார்க் கார்ட்டூன் நிகழ்வின்போது சந்தோஷமாக அந்த கார்ட்டூன்களை மீண்டும் பரப்பியவர்கள் கிறித்துவ, இந்து அடிப்படைவாதிகள்.
(ஈ) நாத்திகர்கள். இவர்கள் அறிவியல் சார்ந்த நாத்திகவாதிகளாக இருக்கலாம்; அல்லது பெரியார் வழிவந்த 'நம்பிக்கை' சார்ந்த நாத்திகவாதிகளாகவும் இருக்கலாம்.

3. அடிப்படை உரிமை (பேச்சுரிமை) Vs மத உணர்வுகளைப் புண்படுத்துதல்.

இந்தியா போன்ற நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின்படிக் கிடைத்த பேச்சுரிமையைக் கொண்டு பிறரது மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் பேசலாமா?

மத உணர்வுகளைக் கேலி செய்யும் விதமாகப் பேசுவது தவறில்லை என்பது என் வாதம். மதங்கள் முட்டாள்தனமான கருத்துக்களால் நிறைந்தவையாகவே எனக்குப் படுகிறது. இந்துமதம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய மூன்றுமே இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கருத்துகள் அந்தந்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மட்டுமல்லாது அந்த மதத்தவர் இணைந்து வாழும் சமூகத்தையும் துன்பத்துக்குள்ளாக்குகிறது. (உதாரணம்: போலியோ தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்பது, குழந்தை மணம், கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தாமல் இருத்தல், சதி... இப்படி எத்தனையோ.)

ஒரு மதத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட சிந்தனை முறையைத் தாண்டி, சுயமாகச் சிந்தித்து, தனிச் சிந்தனை வழியில் வருபவர்கள் மதங்களில் காணப்படும் மூடக் கருத்துகளை கேலி செய்தே தீரவேண்டும். அதனால்தான் சமூகத்தை பாதிக்கும் பல அவமானகரமான குற்றங்கள் நாளடைவிலாவது தடுக்கப்படும்.

தமிழக முதல்வர் ராமரைப் பற்றிப் பேசுவதற்கு முழு உரிமை அவருக்கு இருப்பதாகக் கருதுகிறேன். அவர் அப்படிப் பேசுவது பிடிக்கவில்லை என்றால் குடியாட்சி முறைக்குள்ளாக அவருக்கு எதிராக என்ன செய்ய முடியுமோ அதை அவரது எதிரிகள் செய்துகொள்ளலாம். ஆனால் அவரது கழுத்தை வெட்டினால் எடைக்கு எடை தங்கம் என்றெல்லாம் அறிவிப்பு செய்யும் அபத்தமானவர்களை சட்டம் உடனடியாகப் பிடித்து தண்டிக்கவேண்டும். ஆனால் இதுபோன்ற சட்டபூர்வமான நடவடிக்கைகள் அனைவருக்கும் பொருந்துமாறு இருக்கவேண்டும். தஸ்லிமா நஸ்ரினைக் கொலை செய்யச் சொல்லித் தூண்டிய ஹைதராபாத் எம்.எல்.ஏ, டென்மார்க் கார்ட்டூனிஸ்டைத் தண்டிக்கச் சொன்ன உத்தர பிரதேச எம்.எல்.ஏ என்று அனைவரையும் உள்ளே தள்ளவேண்டும்.

புனிதமாகக் கருதப்படும் கருத்துகளைத் தாக்கலாம். ஆனால் புனித இடங்கள், மனிதர்கள் ஆகியோரைத் தாக்குவதை வரவேற்கக்கூடாது. இதுவும்கூட மதம், புனிதம் ஆகிய காரணங்களால் அல்ல. உயிர், உடைமை ஆகியவற்றைப் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டிய கடமை அரசுகளிடம் உண்டு.

4. அரசியலாக்கப்படும் மதம், மதத்தால் இயக்கப்படும் அரசியல்

மதமும் அரசியலும் இருக்கும்வரை ஒன்றோடு ஒன்று இணைந்தே செல்லும். மதத்துக்கு அரசியலின் ஆதரவு தேவை. அரசியல்வாதிகளுக்கு மதவாதிகளின் செல்வாக்கால் கிடைக்கும் வாக்குகள் தேவை. அதனால்தான் பாஜக ராமசேது விவகாரத்தைப் பெரிதாக்க நினைக்கிறது. அதில் கிடைக்கும் வாக்குகளால், சரிந்து கிடக்கும் தன் நிலையை முன்னுக்குக் கொண்டுவர விரும்புகிறது.

கருணாநிதி ராமர் பற்றி எதுவுமே சொல்லாவிட்டாலும்கூட பாஜக இதைப் பெரிய விஷயமாக மாற்றவே விரும்பும். ஆனால் கருணாநிதியின் பேச்சு காங்கிரஸை இக்கட்டில் மாட்டிவிட்டுள்ளது. கருணாநிதிக்கு பாஜக பற்றி எந்தக் கவலையுமில்லை. தமிழகத்தில் இப்பொழுதைக்கு பாஜக ஒரு பொருட்டே இல்லை. ஆனால் காங்கிரஸுக்கு வட மாநிலங்களில் ராமரும் பாஜகவும் தலைவலிகள்.

கருணாநிதி மத அடிப்படைவாதத்தை ஒழிக்க காங்கிரஸுக்கு உதவ விரும்பினால் சிலவற்றைச் சொல்லாமல் விடுவது நலம்.

====

அறிவியல் ரீதியில் என் கருத்து...

ராமர் என்று ஒருவர் இருந்தாரா என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. காலத்தால் பிற்பட்டவர்களாகக் கருதப்படும் இயேசு இருந்ததற்கான ஆதாரங்களையே பல அறிஞர்கள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

ராமசேது என்ற கடல்மீது கல்லையும் மண்ணையும் போட்டு பல ஆயிரம் வானரங்கள் நடந்து செல்ல, பாலம் கட்டியிருப்பதற்கான வாய்ப்புகள் ஏதும் இல்லை. புஷ்பக விமானம், பத்து தலை அரக்கன், மாயாவிகள், சஞ்சீவி மலை, நாகாஸ்திரம், பிரம்மாஸ்திரம் என்று அனைத்துமே கற்பனை. இன்றைய தேதியில் இதுபோன்று ஏதும் முற்காலத்தில் இருந்திருப்பதற்கான/நடந்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் முற்றிலும் இல்லை.

அறிவியல் கூறும் உண்மைகள் மட்டுமே இன்று ஏற்கக்கூடியன.

இலங்கையைச் சேர்ந்த செரான் தெரணியகல என்ற அகழ்வாராய்ச்சி நிபுணர் சென்னையில் கொடுத்த பேச்சில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே பாக் நீரிணைப்பில் கடந்த 7,00,000 ஆண்டுகளில் 17 முறை மண் திட்டாகவே இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கடைசியாக இது நடந்தது கிட்டத்தட்ட 7,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இருந்திருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். [ Search for a common past, S.Muthiah]

அப்படி முழுதும் மணலால் தொடர்பிருந்த ஒரு கால கட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளை கடல்மீது பாலம் கட்டியதாகக் கற்பனை செய்துகொள்ளும் வளம் மனிதனிடம் உண்டு. ஹோமரின் இலியட் போல வால்மீகியின் ராமாயணமும் அற்புதமான சம்பவங்கள் நிறைந்த அருமையான காவியம். [அவ்வளவே!]

எனவே, மத உணர்வுகள் என்னும் பூச்சாண்டியைத் தூக்கி மூட்டை கட்டி வைத்துவிட்டு, இந்தத் திட்டத்தால் பொருளாதார ரீதியில், சூழலியல் ரீதியில் என்ன நன்மை, தீமை என்பதை ஆராய்ந்து அதன்படி நடப்பதே நல்லது.


Badri Seshadri

Wednesday, October 10, 2007

அரசியல் பிழைப்பு நடத்தும் அயோக்கியர்கள்

கட்டுரையாசிரியர் : திரு.மணி.மு.மணிவண்ணன்.
==============================================================
தமிழ் உலக மடற்குழுவில் இருந்து எனக்குக் கிடைத்த
நண்பர் மணிவண்ணனின் கட்டுரை. அண்மையில் படித்த கட்டுரைகளில்
உயர்வானது இது.
நன்றி: மணிவண்ணன், தமிழ்-உலகம்
==============================================================

ராமர் பாலம், ராமர் சேது என்ற பெயர்கள் இந்திய நாடாளுமன்றத்தையே சூடாக்கிக் கொண்டிருக்கும் நேரம். "ராம ஜன்ம பூமி" என்ற பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தி ஆட்சிக்கு வந்த அதே கூட்டம் இப்போது "ராம கர்ம பூமி" என்ற பெயரால் மீண்டும் ஆட்சியைக் கைப்பிடிக்க முயற்சி எடுக்கிறது போலும். நாசாவால் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட படத்திலேயே ராமரின் வானரப் படைகள் ராமேஸ்வரத்திலி ருந்து தலைமன்னாருக்குக் கட்டிய திரேத யுகத்தில் கட்டிய பாலம் தெளிவாகத் தெரிகிறது என்று ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு பரபரப்பான மின்னஞ்சல்கள் பறந்து கொண்டிருந்தன. பண்டைய வானரங்கள் இருக்கட்டும், இன்றைய மனிதர்களே, இலங்கையின் மீது படையெடுக்க எண்ணிப் பாலம் கட்ட எண்ணுகிறார்கள் என்றே வைத்துக் கொள்ளுவோம். அதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? போக்குவரத்துக்குப் பாலம் கட்டும் அமைப்பு வேறு, படையெடுக்கக் கட்டும் பாலத்தின் அமைப்பு வேறு. போக்குவரத்துக்குப் பாலம் கட்டுபவர்கள் எப்போதும் நி லைத்து நிற்கும் எண்ணத்துடன் கட்டுவார்கள். பாலத்தின் அகலம் சற்றுக் கூடுதலாகக் கூட இருக்கலாம். கட்டுமானப் பொருள்கள், செலவு, கட்டுவதற்குத் தேவையான ஆட்கள், கட்டத் தேவையான நேரம், கடல் மீது கட்டுவதால் கடல் அரிப்பைச் சமாளிக்கத் தேவையான நுட்பம், என்று எல்லாவற்றையும் சிந்தித்துத்தான் கட்ட வேண்டியிருக்கும். பொதுவாக மனிதர்கள் கட்டும் பாலம் நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். செலவு அதனால் மி ச்சமாகும். அப்படியே வளைந்து இருந்தாலும், தீவுகளுக்கும், திட்டுகளுக்கும் இடையேயாவது நேர்க்கோட்டில்தான் கட்டுவார்கள். விண்வெளியில் இருந்து தெரியும் இந்த "ராமர் பாலம்" நேர்க்கோட்டு அமைப்பில் இருந்தி ருந்தால் இது கண்டிப்பாக செயற்கையாகக் கட்டப்பட்ட பாலம்தான் என்று உறுதியாக நம்பலாம். இதுவோ, உலகெங்கும் பெருநிலங்களுக்கிடையே இயல்பாகத் தோன்றியிருக்கும் இஸ்த்துமஸ்கள் போல கடலரிப்புகளால் இயல்பாக எழுந்திருக்கக் கூடிய வளைவுடன் தான் காட்சியளிக்கிறது. அது மட்டுமல்ல. இந்த "ராமர் பாலம்" இருக்கும் அதே ராமேஸ்வரம் தீவுக்கும், இந்தியப் பெருநிலத்துக்கும் இடையே உண்மையிலேயே மனிதர்கள் கட்டிய பாலம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் பாம்பன் பாலம். இந்தப் பாலத்தில் இரயில் வண்டியும் போகும், நெடுஞ்சாலைப் போக்குவரத்தும் இருக்கிறது. இது அண்மையில் முதலில் ஆங்கிலேயர்களும், பின்னர் இந்தியர்களும் கட்டிய பாலம். இருபதாம் நூற்றாண்டின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கட்டிய பாலம். பண்டைய வானரங்கள் திரேத யுகத்தில் "கட்டிய" பாலமே விண்வெளியிலிருந்து தெரிகிறது என்றால், அண்மையில் கட்டிய பாலமும் விண்வெளியிலிருந்து நன்றாகத் தெரியவேண்டும் இல்லையா? அதுதான் இல்லை. நாசாவின் படத்தொகுப்பிலிருந்து பல படங்களைத் துருவித்தேடிப் பார்த்தேன். ஓரிரு படங்களில் பாம்பன் பாலம் என்று பெயர் போட்டிருந்த படங்களைப் பார்த்தேன். நேர்க்கோட்டில், மிக, மி கச் சிறிய அகலத்துடன் பாம்பன் பாலம் படங்கள் இருக்கின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது திரேதயுக வானரங்களின் தொழில்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்ததாய் இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது! ஏனென்றால், படையெடுப்புக்காக ஒரு யுகத்துக்கு முன்பு கட்டிய பாலம் இன்று மிக அகலமாகத் தோன்றுகிறது. சரி, ஒரு யுகத்துக்கு முன்பு கட்டிய பாலம் இல்லையா, ஒரு யுகமாகச் சேர்ந்திருந்த மண்ணால்தான் அது இன்று அகலமாகத் தோன்றுகிறது என்றும் சிலர் நினைக்கலாம். எது எப்படியோ, இது 1,750,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பாலமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், 18,000 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த உறைபனிக்காலத்தின்போது கடல் மட்டம் இன்று இருப்பதைவிட மிகத் தாழ்ந்து இருந்தது. அப்போது இந்தியாவும், இலங்கையும் ஒன்றாய் இணைந்திருந்தன. அன்றைய உலகம் எப்படி இருந்திருக்கும் என்று அமெரிக்காவின் கடல் ஆராய்ச்சித் துறை ஒரு நல்ல படம் ஒன்றை வரைந்திருக்கி றது. அதை கீழ்க்காணும் சுட்டியில் பார்க்கலாம்: ftp://ftp.ngdc.noaa.gov/GLOBE_DEM/pictures/GLOBALsealevelsm.jpg அப்போது இணைந்திருந்த நிலங்கள் கடல் அரிப்பால் பிரிந்து இப்போது தனி நிலங்களாக விளங்குகின்றன. இந்த "ராமர்" பாலம் செயற்கையாகக் கட்டிய பாலமாக இருந்திருக்க முடியாது. ஆனால், ஐஐடி போன்ற உயர்நுட்பக் கழகங்களில் படித்து, அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்று, பெருநிறுவனங்களில் பணியாற்றும் பல அறிவாளிகள் "ராம கர்ம பூமி" போராட்டத்தில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இது உண்மையி லேயே ராம கர்ம பூமி இல்லை, ஆனால், தமிழ்நாட்டிலிருந்து யானை, பூனை, எலி, புலி எல்லாம் தமி ழர்களோடு தென்னிலங்கைக்குக் குடி பெயர்ந்த பூமிதான் இது என்று தெரிந்தால் இந்த அறிவாளிகள் என்ன செய்வார்கள் தெரியுமா? இந்தச் சேது சமுத்திரத் திட்டம் தமிழ்நாட்டுக்கு நல்லதில்லை என்று பல ஆண்டுகளாய் நான் எழுதி வந்திருக்கி றேன். கல்நெய்க் கலங்கள் இந்த மன்னார் வளைகுடாப் பகுதியைக் கடக்கத் தொடங்கினால், கண்டிப்பாக ஒரு நாள் ஏதோ ஒன்று புயலில் மாட்டி முழுகத்தான் போகிறது. அதனால் விளையும் மாசுகள் சுற்றுச் சூழலை நாசப் படுத்தப் போகிறது. இதை நேர்மையாகச் சொல்லிப் போராடிப் பார்த்தால் ஒன்றும் நடக்கவில்லை. ராம கர்ம பூமிப் போராளிகள் இதைத் தடுக்க முடிந்தால் புண்ணியமாய்ப் போகும். சொல்லப் போனால், குமரிக் கண்டப் போராளிகளும், தனித்தமிழ்ப் படைகளும், இது தமிழன் தென்னிலங்கைக்குச் சென்ற பாலத்தின் எச்சங்கள் புதைந்திருக்கும் இடம், அதனால் இது பாதுகாக்கப் பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி நெடுமாறனோ யாராவதோ கொடி பிடித்திருந்தால், எல்லோரும் அவர்களை நையாண்டி செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், ராம கர்ம பூமி என்ற அரசியல் சூழ்ச்சியாளர்களைப் பார்த்து யாரும் அப்படி நையாண்டி செய்வதாகத் தெரியவில்லை. பைபிளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அயோக்கியர்கள் வாழும் பூமியிலிருந்து எழுதுகிறேன். சமய நூல்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அயோக்கியர்களை நம்பவே நம்பாதீர்கள்.

அன்புடன்,
மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலிபோர்னியா
அமெரிக்கா.

குதிரை வண்டி, மாட்டு வண்டியில் போவார்களா இவர்கள்?

Sethu Project - A Strategic blunder ! என்ற தலைப்பில் கீழ்க்கண்ட சுட்டியில்கர்னல். அணில் அத்தாலே என்பவர் கட்டுரை எழுதியிருக்கிறார். (http://sify.com/news/fullstory.php?id=14533111&vsv=SHGTslot3)
சிஃபியிம் அவரை "As a military historian he specialises in insurgency and peace process."என்று அறிமுகப் படுத்துகிறது. சிஃபி.காமுக்கு வேறு நல்ல ஆள் கிடைக்க வில்லை போலும்.

நானும் ஏதோ இராணுவ வரலாறு பற்றிய ஒருவர் எழுதுகிறாரே என்று படிக்கப் போய் இதுவும் ஒரு வெற்றுச் செக்கு என்று உணர்ந்தேன்.
தலைப்பிலே "A Strategic blunder" என்று முழங்கிவிட்டு, கட்டுரைக்குள் Strategy பற்றிய சார்புத் தகவல் எதுவுமே இல்லாமல் கட்டுரை ஆக்கியிருக்கிறார்.

இவர் என்னவெல்லாம் சொல்கிறார்: (ஆங்கிலத்தில் அவரின் எழுத்து)

1) இந்தியா மட்டுமல்ல இசுலாமிய நாடான இந்தோனேசியாவையும் உள்ளிட்டதென்கிழக்காசியாவின் புராணச்சின்னம்.

(a cultural heritage for not just India but many South East Asian countries as well (it is also a
national epic of Muslim majority Indonesia)

இந்தியாவிலேயே கேட்பார் அற்று நீருக்குள் மூழ்கிக் கிடக்கும் ஆதம் மணல் திட்டுகளில் சிறிய அகழ்வு செய்வதற்கு இந்தியாவை மட்டுமல்ல தென்கிழக்காசியவையே இவர் ஏன் ஆதரவுக்கு இழுக்கிறார்?
இதன் சூழ்ச்சி என்ன?

விசயநகரப் பேரரசிற்கு முன் எந்த இந்தியப் பேரரசன் தென்கிழக்காசியா முழுமையும்சென்று அங்கெல்லாம் வைதீகத்தைப் பரப்பினான்?

எப்படி தமிழ்நாட்டு நெறிகளை வைதீகம் விழுங்கியதோ அப்படியே தமிழர்நெறிப் பட்டிருந்த தென்கிழக்காசியாவையும் வைதீகம் மெல்லக் கொன்றது என்பதுதான் வரலாறு.

2) சூழமைவு கெட்டுவிடும் என்று சூழியல் காரர்கள் சிலர் சொல்கிறார்கள்.
(Ecologists and environmentalists object saying it will destroy the fragile eco system in Palk Strait and Gulf of Mannar and rich marine life there)
ஆயிரக்கணக்கான சதுர கி.மீ பரப்பு கொண்ட கடலில், ஆயிரக்கணக்கானகப்பல்கள் பயணிக்கின்ற கடலில், பல நாடுகள் அணுச்சோதனையை செய்கின்றகடலில், துகளூண்டு 1000 அடி நீளத்தில் அங்கிருக்கும் மணற்திட்டுகளைஅகழ்ந்து பாதை ஏற்படுத்துவதனால் சூழமைவு போய்விடும் என்று பதறுபவர்களை என்ன சொல்வது?
ஊரெல்லாம் பெட்ரோல், டீசல் போன்றவைகளால் ஓடும் ஊர்திகள் சூழமைவுக்கு இழைக்கும் பதகத்தை விட கடலில் ஒரு சின்ன இடத்தில் அங்கு வாழும் நீர்வாழ்உயிரினங்களுக்கு ஒன்றும் பெரிதாக ஏற்பட்டு விடப் போவதில்லை. அவைஅங்கே ஏதோ தோண்டுகிறார்கள் என்றால் இடத்தை மாற்றிக் கொண்டு வேறு இடத்திற்குப் பரந்த மனதோடு போய்விடக்கூடிய உயிரினங்கள்.

பெட்ரோல், டீசலால் ஓடும் ஊர்திகளை வேண்டாம் என்று சொல்லிகுதிரை வண்டி, மாட்டு வண்டியில் போவார்களா இவர்கள்? தன்னலக் கோடரிகள் ஊருக்கு உபதேசம் பண்ணியே பிழைப்பு செய்பவர்கள்.

ஆதம் மணல் திட்டுகளை அகற்றுவது சூழமைவுக்குக் கேடாக அமையும்என்றால், அதனை இராமர்தான் கட்டினார் என்றால், அவர் கட்டும்போது சூழமைவுக்குப் பதகம் ஏற்பட்டிருக்காது என்று எப்படிச் சொல்லமுடியும்?

3) மலையாளக்கரையை, மேற்குக் கரையை, இந்தோனேசிய பூகம்பங்களால் சுனாமி தாக்கும் வாய்ப்பு வந்துவிடுமாம்.

(Many express fear that the breaching of Ram Sethu will subject the western coast to tsunami threat since Indonesia and sea around it are prone to earthquakes)

கேப்பையிலே நெய் ஒழுகுகிறது என்று சொல்லி கேட்பவர்களையும் மடையர்களாக ஆக்கும் சங்கதி இது. தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெரியேறும் என்பது போல் பேச மடையர்களால் மட்டுமேமுடியும்,
இதை ஆழ்ந்து கவனித்தால் இதன் அரசியல் புரியும். மீண்டும்தமிழகத்திற்குப் பதகம் செய்ய வைதீகத் தலைமையில் மலையாளமும், மராட்டியமும் இருப்பது புரியும்.

மலையாளம் ஏறத்தாழ தமிழர்களுக்குப் பகை நாடு போலவே ஆகிவிட்டது. மராட்டியருக்கு, மும்பையை விட வேறெந்த ஊரும் நிதியம் நிறைந்த ஊராகி விடக்கூடாது.

ஆகவே வேறு வழியில் முடியாதவர்கள் இராமரை இழுத்து வந்துதமிழர்களுக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு நீர் மட்டத்தை 6 அடிகள் உயர்த்தினால் அணை உடைந்து பல இலட்சம் மலையாளிகள் மாண்டு விடுவார்கள்என்று அச்சுதானந்தன் கட்டி விட்ட கதையை நினைவுக்குக் கொண்டுவந்தால், எப்படி இந்தோனேசியப் பூகம்பம் மேற்குக் கரையை பாதிக்கும் என்பது புரியும். ஆக, இது பச்சைக் கேரள பாணியிலான பொய்த் தண்டோரா.

கிழக்கில் இந்தோனேசியாவில் பூகம்பம் வந்து, அது கிழக்கே இலங்கையை ஒன்றும் செய்யாமல், இலங்கையின் மறைவில் இருக்கும் இராமேச்சுரத்தை ஒன்றும் செய்யாமல் அப்படியே வடக்கு நோக்கி போய்இலங்கையைச் சுற்றிக் கொண்டு பின்னர் அப்படியே தெற்கே திரும்பி, சேதுக்கால்வாயிற்குள் புகுந்து, பவ்வியமாகச் சென்று கன்னியா குமரியில்குமரி அன்னையை வணங்கி, அப்படியே திருவள்ளுவரையும்விவேகானந்தரையும் பார்த்து கண்ணடித்து விட்டு மீண்டும் திசை திரும்பிமேற்காகப் போய், அப்படியே மலையாளக் கரை, கோவா, மராட்டியக் கரைகளைஎல்லாம் பதம் பார்த்து கேரளக் கரையில் உள்ள கனிமங்களை எல்லாம்பாதித்து விடுமாம்.
(What that will do to the rich thorium, monazite, zircon and other mineral deposits on Kerala
beaches is a huge question mark.)

புளுகுணிகளின் கற்பனை வளத்தினைப் பாருங்கள்! இதுவே சதிகாரர்களின் எண்ணத்தைச் சொல்லப் போதுமானது.

4) தற்போது தலைமன்னாருக்கும் இராமேச்சுரத்திற்கும் இடையே ஏற்படுத்தப் படும்கோவண அளவு அகழ்வு, இலங்கை நாட்டின் எல்லைக்குட்பட்டது போலத் தெரிகிறதாம்.அதனால் கட்டி முடிந்த பின்னர் இலங்கை அதைச் சொந்தம் கொண்டாட வரக்கூடியவாய்ப்பு இருக்கிறதாம்.

(Since it appears to be clearly inside the Sri Lankan territorial waters, at some point, Sri Lanka
(with the help of an outside power, obviously) will not only claim control but also may decide to deny us the use of this channel.)

இந்திய இராணுவத்தில் கர்னல் என்ற பதவியில் இருந்த இராணுவக் காரர், தான்இரு இராணுவத்தான் என்று சொல்லிக் கொண்டு, வரையரையில்லாத, தெளிவில்லாத, பொத்தாம் பொதுவில் ஊகத்தின் பேரில் நமது நாட்டின் எல்லையை அயலான் எல்லை என்று கூறுகிறார்.
நாட்டைக் காட்டிக் கொடுக்கிறாரா அல்லது காக்கிறாரா?
கேரளாவைச் சேர்ந்த நாராயணன் இலங்கை தொடர்பான ஆலோசகராகவும்,கேரளாவைச் சேர்ந்த அந்தோனி இராணுவ அமைச்சராகவும் இருப்பது கவனிக்கத் தக்கது.

ஒரு இராணுவத்தாருக்கு தனது நாட்டின் எல்லை என்பதே தெரியாமல்ஒரு கட்டுரை வரைவது அவரின் நம்பகத் தன்மையைக் காட்டவில்லை.
அதையும் தொடர்ந்து சீனப்படை உள்ளே நுழைந்து விடுமாம். அமெரிக்கர்கள்என்ன செய்வார்கள் என்றே தெரியாதாம்.
இந்தியாவைச் சுற்றி பெரிய கடற்கரையை வைத்துக் கொண்டு, இந்த ஓட்டைக்குள் சீனாவும், அமெரிக்காவும் என்னென்னவோ செய்து விடுவார்களாம்.

எலியின் பொந்தில் வாழும் கோழைகளுக்கு இப்படித்தான் உளறத் தெரியும்என்று சொல்லி மேலும் அவர் சொல்லி இருக்கும் கருத்துகள் வைதீகர்களைப் போன்ற ஒரு மனநோயாளியின் கருத்துகளாகவே தெரிகின்றன என்பதோடு, சிஃபியில் வந்த கட்டுரைகளில் மட்டமான கட்டுரை இது என்றும் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

ராமனை மரபணுச் சோதனைக்குட்படுத்த முடியுமா?

``யாகாவாராயினும் என்னும் தலைப்பில் `தினமணி தலையங்கம் தீட்டியுள்ளது (20.9.2007).
ராமனைப்பற்றி எழுந்துள்ள பிரச்சினைக்காக எழுத வந்த தினமணி, ராமன் இருந்தான் என்பதற்காக ஆதாரம் இல்லை என்று கூறியதற்காகவும், ராமன் பாலம் கட்டினான் என்கிறார்களே - ராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று முதலமைச்சர் கலைஞர் வினா எழுப்பியதற்காகவும் மிகவும் வருந்தி வருந்தி எழுத்தாணியை ஓட விட்டுள்ளது.

ராமர் இருந்தாரா, ஏசுநாதர் இருந்தாரா, புத்தர் இருந்தாரா என்றெல்லாம் ஆராய்ச்சியில் இறங்குவது அபத்தம், அதற்கான ஆதாரத்தைக் காட்டு என்று கேட்பது அதைவிட அபத்தத்திலும் அபத்தம் என்று அந்தத் தலையங்கம் சொல்லுகிறது.
இதில் பார்ப்பனருக்கே உள்ள குறும்புத் தனத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது.

புத்தர் என்ற வரலாற்றுப் பாத்திரத்தையும், ராமன் என்ற இதிகாச பாத்திரத்தையும் ஒரே நிலையில் வைத்துப் பேசுவது சரியானதுதானா? பார்ப்பனர்களின் (குறிப்பாக `சோ ராமசாமி, குருமூர்த்தி போன்றவர்களின்) விவாத முறை எந்த குயுக்தியில் இருக்குமோ அதேமுறை - தொனிப்பு இதிலும் காணப்படு வதை அறியலாம். `துக்ளக் இதழில் தயாரிக்கப்பட்ட ஒருவர் `தினமணியின் ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார் என்பதைத் துல்லியமாகக் காட்டும் அடையாளம் இது.


வரலாற்றுக் கண்ணோட்டம், அறிவியல் கண் ணோட்டம் - இவற்றிற்கு அப்பாற்பட்டது உலகில் எதுவும் இல்லை.
ராமன் பாலம் கட்டினான் என்ற பிரச்சினையைக் கிளப்புபவர்கள் இவர்கள். அப்படி வரும்போது ராமன் பாலத்தைக் கட்ட முடியுமா? அதுவும் 17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட வாய்ப்பு உண்டா என்ற கேள்வி எழுவது இயல்புதானே?
முதல் பாலம் கட்டப்பட்டதே கி.மு. 2650 இல் எகிப்து நாட்டின் நைல் நதியின் குறுக்கே என்பதற்கு ஆதாரம் இருக்கும்போது, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் பாலம் எப்படி கட்டப்பட்டு இருக்க முடியும் என்கிற கேள்வி எழாதா? இதிகாசம், புராண சங்கதி என்கிற இடத்தில் மட்டும் மனிதன் தன் அறிவைப் பூட்டுப் போட்டுப் பூட்டி வைத்துக்கொள்ள வேண்டுமா? எல்லாமே பார்ப்பன வசதிக்காகவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிற அடாவடித்தனம் இதில் புழுபோல நெளிகிறதா இல்லையா?


17 லட்சத்து 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டினான் என்பதைவிட அபத்தத்திலும் அபத்தம் வேறு உண்டா? இதில் இன்னொரு குமட்டிக் கொண்டு வரும் அபத்தம் உண்டு. இதோ `தினமணி எழுதுகிறது.
``ஒரு குழந்தையின் தந்தை யார் என்பதை அந்தக் குழந்தையின் தாய் சொல்வதை சமுதாயம் ஏற்றுக் கொள்கிறதே தவிர மரபணு பரிசோதனைச் சான்றிதழ் கேட்பதில்லை - இதுதான் தினமணியின் விவாதம்.

`தினமணி எந்த உலகத்தில் சஞ்சரிக்கிறது என்று தெரியவில்லை. எத்தனையோ வழக்குகள் நாட்டில் நடந்துகொண்டுதானிருக்கின்றன! பிரச்சினை என்று வருகிறபோது மரபணுச் சோதனை நடத்தப்பட்டுத் தானே தீர்மானிக்கப்படுகிறது?
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும்போது ராமன் பாலம் என்ற பிரச்சினையைப் பார்ப்பன சங் பரிவார்க் கூட்டம் எழுப்பிய நிலையில், `அந்த மரபணுச் சோதனைகள் தேவைப்படத்தானே செய்கின்றன?

`தினமணி எந்தத் தைரியத்தில் இப்படி எழுதுகிறது என்றால், ராமனை மரபணுச் சோதனை செய்ய முடியாது - காரணம் அவன் குதிரைக்கும், கோசலைக்கும் பிறந்த வன் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறதல்லவா!

நன்றி : விடுதலை

பிரா-மணனாய் பிறந்தவன் வைத்ய சாஸ்திரமே கற்கக்கூடாத

சோமயாகம் நடைபெறும் செய்தி கேட்டு விஷ்ணு அங்கே வருகிறார். யாகமே உருவான விஷ்ணு தனுஸோடு அதாவது வில்லோடு வந்து நிற்கிறார். எப்படித் தெரியுமா?
வில்லின் வளைந்த மூங்கில் பாகத்தின் ஒருமுனை தரையில் இருக்கிறது. இன்னொரு முனை விஷ்ணுவின் தாடையில் இருக்கிறது. இந்த முனைகளுக்கிடையே தான் நாண் எனப்படும் கயிறு இழுத்துக் கட்டப்-பட்டுள்ளது. வில்லை தன் தாடை மூலமாகவே நிலைநிறுத்தி ஸ்டைலாக நிற்கிறார் விஷ்ணு.

அவரது கோரிக்கைதான் என்ன?.... யாகத்தின் சோமரஸம் முழுவதும் எனக்கே கிடைக்கணும். மற்ற தேவதைகளுக்குக் கொடுக்கக்கூடாது..
என்னடா இது... விஷ்ணுவே இப்படி பண்ணுகிறாரே.... என யாகம் நடத்துபவர்கள் முழிக்க...

அந்த நேரத்தில் தான் சில கறையான் பூச்சிகள் வில்லின் மீது ஏற ஆரம்பித்தன.
விஷ்ணுவுடைய வில்லின் நாண் வழியாக ஏறத் தொடங்கிய கறையான்கள், மெல்ல, மெல்ல ஏறி... விஷ்ணுவின் தாடைப் பகுதியை நெருங்கின. அந்த இடத்தில் மூங்கிலோடு நாண் பிணைக்கப்பட்டிருந்ததல்லவா?
கறையான்கள் சரசரவென நாணை தின்ன ஆரம்பிக்க.. திடீரென நாண் அறுந்தது. இழுத்து வளைத்துக் கட்டப்பட்டிருந்த வில்லின் மூங்கில் படாரென மேல் நோக்கி வேகமாக விசையோடு எழும்ப...

அஷ்வனஸ் யய்யஸ்ய சிரப்பரதிததாம்
அவாப்யேமஸ வஷுட்கார...
அதாவது அந்த கணத்திலேயே விஷ்ணு-வின் தலை மூங்கில் மேலெழும்பிய வேகத்தில் மேல் நோக்கி பிய்த்து எறியப்பட்டது. யாகத்தின் உருவே ஆன விஷ்ணுவின் தலை கழுத்திலிருந்து பிய்த்து எடுக்கப்பட்டு மேலே பறந்தது. இதைப் பார்த்தவர்களுக்கு அய்யோ... அபச்சாரம் ஆகிவிட்டதே... விஷ்ணுதான் யாகம். யாகம் தான் விஷ்ணு. அப்படிப்பட்ட விஷ்ணுவின் தலையே தனியே போனது என்றால் யாகம் பாதியிலேயே சிதைத்து போய்விடும்... என்ற கலக்கம், பயம்.

சோமயாகம் மறுபடிஎந்த பங்கமும் இல்லாமல் தொட வேண்டுமென்றால்.. விஷ்ணுவின் பிய்ந்த தலை மறுபடி கழுத்தோடு ஒட்ட வைக்கப்பட வேண்டும். அதற்கு வைத்யம் பார்க்க வேண்டும். யார் வைத்யம் பார்ப்பார்கள்?....
வேதத்தில் வேதகாலத்தில் வைத்யம் பார்ப்பதெற்கென்று தனியாகவே இருந்தனர். அவர்கள் அஸ்வினிகுமாரர்கள் என அழைக்கப்-பட்டனர். இவர்கள் அஸ்வினி தேவதை-களாகவும் கருதப்பட்டனர்.

யாகம் நடத்தும் பிராமணர்கள் நேராக அஸ்வினி குமாரர்களிடம் ஓடினார்கள்.
இதுபோல விஷ்ணுவின் தலை அவருடைய தனுசு அறுந்ததால் மேல் நோக்கி பிச்சுண்டு போயிடுத்து. தயவு செய்த உபகாரம் பண்ணணும் என விண்ணப்பித்தனர்.
அஸ்வினி குமாரர்கள் வேத டாக்டர்கள். நூற்றுக்கணக்கான வைத்ய முறைகளையும்.. இப்போது சொல்கிறோமே ஆபரேஷன் அது போன்ற பல வைத்ய சாஸ்த்ரம் அறிந்தவர்கள். அப்பேர்ப்பட்ட வைத்தியர்கள் ஃபீஸ் வாங்காமல் இருந்து விடுவார்களா என்ன?....
சரி.. நாங்கள் தைல வைத்ய சாஸ்திரப்பட விஷ்ணுவின் தலையை ஒட்ட வைக்கிறோம். யாகத்துக்கு மறுபடி எந்தத் தடங்கலும் வராம பாத்துக்கறோம்.
ஆனா, இதுக்குப் பிரதியுபகாரமாய்... யாகத்துல எங்களையும் சேத்துண்டு சோம ரஸத்துல கொஞ்சம் எங்களுக்கும் தரணும். இதுக்கு நீங்க ஒத்துண்டா... நாங்க ஆபரே-ஷனை ஆரம்பிக்கிறோம்...என நிபந்தனை விதித்தார்கள் வைத்யம் பார்க்கும் அஸ்வினி குமாரர்கள். அவர்-களுக்கும் சோமரஸம் மீது அவ்வளவு ஆசை.

வேறு வழி இல்லாமல், சரி, சோம யாகத்தில் அஸ்வினி தேவதைகளுக்கும் ஒரு பங்கு தருகிறோம்... என உறுதி கொடுக்-கப்பட்டப பிறகுதான். விஷ்ணுவின் தலையை தைலம் தடவி கழுத்தோடு ஒட்ட வைத்-தார்களாம் அஸ்வினி குமாரர்கள்.
சரி.. இந்தக் கதையை நான் எதற்கு சொன்னேன் என்றால்...
தஞ்மாது ப்ராமணேன பேடஜம்
நகார்யம்...

வைத்யம் என்பது ரத்தம் பார்க்கும் ஒரு தத்வம். அதாவது மனுஷனை வெட்டி அருவருப்பான இடத்தில் இடத்தில் கைவைத்து இந்த வைத்யத்தை மேற்-கொள்ள வேண்டும் இதையெல்லாம் பிராமணர்கள் செய்யக்கூடாது. பிரா-மணனாய் பிறந்தவன் வைத்ய சாஸ்திரமே கற்கக்கூடாது.
என்பது வேத நிபந்தனை இதனால் தான் அஸ்வினி குமாரர்களிடம் பிரா-மணர்கள் ஓடினார்கள். இன்றும் கூட வங்காள மாநிலத்தில் மருத்துவர்களை அஸ்வினி குமார்... என்றே அழைக்-கிறார்கள்.

ஆக... பிராமணன் டாக்டருக்கு படிக்கக்-கூடாது என்பதயும் வேதம் முன்மொழிந்து வழிமொழிகிறது. ஆனால் இன்று அப்படியா நடக்கிறது?....

நெருப்பில் விழுந்த புழுவாகப் பார்ப்பனர்கள

மதம் என்றால் மக்களின் நம்பிக்கையின் மீது கட்டப்பட்டதாம். நம்பிக்கை என்றால் எதையாவது சும்மா நம்பிக்கொள்ள வேண்டியது; கந்தசாமி சொன்னான், இராமசாமி சொன்னான் என்று எதையாவது நம்பிக்கொள்ளவேண்டியது.

இப்பொழுது ஒருத்தர் ஒரு நம்பிக்கை வைத்திருந்தால் மற்றவர்கள் அதைக் கேள்வி கேட்கக் கூடாதாம். படித்தவர்கள் பலரும் சொல்கிறார்கள். அதுதான் நாகரிகமாம். தினமணி தலையங்கம் எழுதுகிறது. கூட வேலை செய்பவர்கள் என்னிடம் சொல்கிறார்கள்.

ஒருத்தருடைய நம்பிக்கை சமுதாயத்தையோ, வேறு தனி நபருக்கோ எந்தத் தொடர்புமற்ற ஒரு விடயத்தைப் பற்றியதாக இருந்தால், அதை அவர் விரும்பாவிட்டால், கேள்விக்குள்ளாக்குவது தவறு என்றே கொள்ளலாம்.

ஆனால், சமூக முக்கியத்துவம் சார்ந்த பிரச்சினைகளில், ஒருவரோ, பலரோ, தங்களுடைய நம்பிக்கையை மட்டுமே காரணமாகக் கொண்டு, இது இப்படி இருக்க வேண்டும், இருக்கக் கூடாது என்று கூறும்பொழுது, அந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவதில் என்ன தவறு?

இன்று மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, அவர்களின் மனது புண்ணாகிவிடக்கூடாது என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அறிக்கையை அரசு திரும்பப்பெற்றுள்ளது.

சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் எப்படி ஏற்படுகிறது என்று இந்தப் புராணங்களும், இதிகாசங்களும் சொல்லுகின்றன? அவற்றை மறுத்து அரசு பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் அறிவியல் பாடத்தில் வேறு மாதிரியாக சொல்லிக்கொடுக்கிறார்களே? இப்படி மக்களின் நம்பிக்கையை புறக்கணிக்கலாமா? இவற்றை எழுதி வைத்த நமது முன்னோர்கள் மூடர்களா? இந்த அரசாங்கம் இந்தப் பாடத்திட்டங்களையும் திரும்பப்பெறுமா?

இவற்றுக்கெல்லாம் பாடுபடாத சோ, சுப்பிரமணியசாமி & பார்ப்பனக் கூட்டம், இராமனுக்காக குதிப்பது ஏன்? ஏனென்றால், வெள்ளைக்காரன் உருவாக்கிய "இந்து அடையாளத்தை" மக்கள் சுமக்க வேண்டும்; அதை வைத்துப் பார்ப்பனர்கள் அரசியல் பிழைக்க வேண்டும் என்ற ஏற்பாட்டில், மக்களின் முன் பல கடவுளையும் வைத்து அரசியல் செய்வதை விட, இந்து மதத்துக்கென்று பொறுக்கியெடுக்கப்பட்ட ஒரு பொறுக்கிக் கடவுள் மட்டும் இருந்தால் அரசியல் செய்வது எளிது என்பது பார்ப்பனர் திட்டம். இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடவுள்தான் இந்த ஒரே ஒரு பொண்டாட்டியுடன் மட்டும் வாழ்ந்த ஒரே ஒரு கடவுள்.

இப்பொழுது இராமர் பாலப் பிரச்சினையில், கலைஞர் இராமனின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கி விட்டதால், நெருப்பில் விழுந்த புழுவாகப் பார்ப்பனர்கள் துடிக்கிறார்கள். அவர்கள் துடிப்பதில் நியாயம் இருக்கிறது. நம்மாளும் சேர்ந்து துடிக்கிறார்கள். கேட்டால் அவர்கள் "இந்து"க்களாம்.