ச்றீ மடம் அருளிச் செய்த திருப்பாவை
மார்கழியும் நடுநடுங்கும்
மதி இருண்டு கதிகலங்கும்
கூர் வாளும் முனை மழுங்கும் - நம்
ஜெயேந்திரன் பேர் சொன்னால்
தூர்வாரும் கிணற்றைப் போல் துலங்கும் முகத்தானை
போர்வாளால் ஏற்றிப் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!
ஓங்கி ஒரேவெட்டில் மூளை வரும்படிக்கு
தீங்கிழைத்த சலனத்தை முகத்தில் காட்டாமல்
தீபாவளி நாளில் அருள்வாக்கு எளிதாமோ?
வேலூர்ப்பதி பெம்மானை விதந்தோத மாட்டாமல்
வீணே உறங்குவதோ வெளியில் வா எம்பாவாய்!
ஆர் சொன்னாலென்ன? அனுராதா ரமணனென்ன?
கார்வண்ணன் காலடியில் கோபிகையர் குவியலையோ!
அம்பானி குலம்போற்றும் முந்தானை அணிவிளக்கை
கம்பிக்குள் வைத்தாலும் கும்பி ஒளிருது பார்!
துணையிலாப் பெண்குலத்தை தன்துணையாய்ப் பாவித்த
இணையிலா வேதவித்தை விளங்காயோ எம்பாவாய்!
அவுணர், பவுத்தர், நாத்திகர் மனைவியை
அடியார் கற்பழிக்க அருள் கேட்டான் சம்பந்தன்
ஆத்திகர் மனைவியர்க்கும் அருள்காட்டிக் கற்பழித்த
கோத்திர நாயகனைக் கும்பிடடி எம்பாவாய்!
மார்கழித் திங்கள் நாய்களுக்கே யுரியதென்று
மதியிலார் கூறட்டும்; மங்கையே சொல் கேளாய்!
மானமழிந்தால் மார்கழியும் குளிராதோ?
ஈனத் தெருநாய்கள் இன்பம் துய்த்திருக்க
ஞானம் சிறையினிலோ? ஞாயமென்ன எம்பாவாய்!
மோரும் முகம்திரியும் கூறும் கதை கேட்டால்
பாரும் வழக்கெல்லாம் மாறும் சருகாக!
கறவை மடியில் கன்றும் பால் குடிக்குதய்யோ!
உறவாடி உயர்ந்தோர் ஒரு பயலும் காணலியே!
பாற்சோறு பிழைத்திருக்க, பசும்நெய் தப்பிக்க
ஷேர்போட்ட சீவன்கள் ஜெயில்முன்னே பரிதவிக்க
என்ன இது எம் பிரபு? எப்பொழுது உன் வரவு?
சிறியோர் செய்வினையால் சீறி அருளாதே
உரியோர் விடமாட்டோம் ஒலித்திடடி எம்பாவாய்!
('பெரியவாள்' விடுதலைக்கு பக்தர்களை தினமும் திருப்பாவை பாடச்சொல்லும் தென்னிந்திய புரோகிதர் நலச்சங்கத்திற்கு ஹ'ருதய ஸுத்தியுடன் ஸமர்ப்பணம் செய்யப்பட்டது.)
இப்போது இணைய அம்பிகளுக்காக.
துரை.சண்முகம் (புதிய கலாச்சாரம், ஜனவரி, 2005 இதழில்)
Thursday, September 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
இனியவர்கு,
ஒரு அறிமுகம்
இது என்னுடைய வலைபதிவு முகவரி.
www.mathimaran.wordpress.com
சமயம் கிடைக்கும்போது பார்த்து கருத்து சொல்லவும்.
அன்புடன்
வே. மதிமாறன்.
Post a Comment