பேராசிரியர் இரா.மதிவாணன்
இந்திய வரலாற்றாசிரியர்கள் ஒரு சேர இந்திய வரலாற்றைத் திசை திருப்பி வருகிறார்கள். மத்திய தரைக் கடல் நாடுகளிலிருந்து திரா விடர்கள் சிந்துவெளியில் தங்கிப் பின்னர், தென்னிந்தியாவுக்கு வந்தனர் எனப் பொய்க்கதைகளைக் கட்ட விழ்த்து விடுகின்றனர்.
பழந்தமிழர் சிறந்த கடலோடிகள் என்பதையும் கடல் வழியாகவே சிந்துவெளி சுமேரியம் எகுபது, மத்திய தரைக்கடல் நாடுகள் ஆகியவற்றில் குடியேறினர் என்பதையும் அறியாதவர் களாக இருக்கிறார்கள்.
இந்த வரலாற்றாசிரியர்களின் அண்டப் புளுகை விஞ்சும் வகையில் ஆரியச் சார்வான எழுத்தாளர்கள், சிந்துவெளிப் பகுதியிலி ருந்து திராவிடர்கள் தெற்கே துரத்தப்பட்டார்கள் எனப் பொய் சொல்வதையே தொழிலாகக் கொண்டிருக்கின்றனர். சிந்துவெளி நாகரிகம் மறைந்து 800 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கி.மு. 1100 - கி.மு. 1000 அளவில் இருக்குவேதப் பாடல்கள் தொகுக்கப்பட்டன.
காபூல் முதல் பஞ்சாபு வரை நடந்த அகழ்வாராய்ச்சிகளில் திராவிடர்க்கே உரிய கருப்பு சிவப்புப் பானை ஓடுகளும், ஆரியர்க்கே உரிய சாம்பல் நிறப்பானை ஓடுகளும் கிடைத்தன. இவற்றின் காலம் கி.மு. 1600 - கி.மு. 1300 என வரையறுத்துள்ளனர். இதனால் ஆரியரும் திரா விடரும் ஒருசேர வாழ்ந்த காலம் உறுதிப்படுகிறது. ருக்குவேதத்தில் கூறப்படும் ஆரிய திராவிட மோதல்கள் கி.மு. 1300 - கி.மு. 1200 எனும் ஒரு நூற்றாண்டுக் காலத்துக்கு உட் பட்டவை. மூன்று தலை முறையினரின் உட்பூசல்களில் இந்திரன் புகுந்து ஆதாயம் பெற்ற காலம் இது எனலாம்.
சிந்துவெளி நாகரிகக் காலத்தில் கோட்டையைச் சுற்றிலும் அகழிவெட்டப்படவில்லை. கோட்டை வாயிலில் அறைவட்ட வடி வில் மட்டும் அகழி அமைந்திருந்தது. ஆனால், இருக்கு வேதத்தில் கோட்டைகளைச் சுற்றிலும் வட்டமாகப் பெரிய அகழிகள் வெட்டப்பட்டிருந்தது குறிப்பிடப்படுகிறது. இதிலிருந்தும் இருக்குவேத காலம் சிந்துவெளி நாகரிகக் காலத்துக்கு மிகமிகப் பிற்பட்டது எனத் தெரிகிறது. சிந்து வெளி முத்திரைகளில் உள்ள தமிழ் வேந்தர்களின் பெயர்கள் தூய தமிழ்ப் பெயர்களாக உள்ளன. இருக்கு வேதத்தில் உள்ள திராவிடப் பெயர்கள் அனைத்தும் ஆரியச் சார்பால் திரிபுற்ற தமிழ்ச் சொற்களாக உள்ளன. கி.மு. 1200 - கி.மு. 1000 அளவில் கங்கைச் சமவெளி வரை ஆரியர் பரவிய காலத்தில் இந்திரன் தலைமையும் போர்களும் கூறப்படவில்லை.
வேதகாலம் என ஒன்று இருந்ததே இல்லை
வரலாற்று நூல்களிலும் பாட நூல்களிலும் வேத காலம் எனத் தலைப்பிட்டு எழுதுகிறார்கள். வேத காலம் என்றொரு காலம் இருந்ததே இல்லை. அரசர்கள் தம் நாட்டில் அல்லது வென்று குடியேறிய நாட்டில் ஆட்சிபுரிந்த காலமே வரலாற்றுக் காலம் எனப்படும்.
வெறுமனே கால்நடை மேய்ப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த ஆரியர்கள் இந்திரனைத் தலைவனாகக் கொண்டு ஆங்காங்குக் கொள்ளையடித்து இடம் விட்டு இடம் ஓடித் திரிந்த நிகழ்வுக்கு யாரும் வரலாறு எனப் பெயரிடமாட்டார்கள். வேதம் ஓதுவதுபோலப் பாணர்களும் பாடித் திரிந்தார்கள். அதனால் பாணர் காலம் என்றொரு காலத்தைக் குறிப்பிட முடியுமா? நாடெங்கும் திரிந்த கூத்தாடிகளின் காலத்தை, கழைக்கூத்தாடிகள் காலம் எனக் குறிப்பிட முடியுமா? எனவே, வேதகாலம் என்று குறிப்பிடுவதை வரலாற்றா சிரியர்கள் தவிர்க்க வேண்டும்.
தாசர் தசியூக்கள்
பாரசீக ஆரியருள் கரு நிறப் பிரிவினர் தாசர் எனப்பட்டனர். இவர்கள் புதிதாக வந்த கைபர் கணவாய் ஆரியர்களுக்குப் பகைவராயினர். ஆரியருள் தாசர் எனும் கருநிறப் பிரி வினர் இருந்தனர் எனச் சிந்துவெளி நாகரிக ஆராய்ச்சியாளராகிய பின்லாந்து அறிஞர் அசுகோ பர்போலா குறிப்பிட்டுள்hர். இந்தத் தாசர் பிரிவினர் பாரசீக ஆரியருக்கும் சிந்து வெளி மேற்கு எல்லையிலும் எலாம் பகுதியிலும் வாழ்ந்த திராவிடக் கிளைப் பிரிவினர்க்கும் இடையில் கலப்பு இனமாகத் தோன்றியவர்கள்.
இவர்கள் பாரசீக ஆரிய ரோடு சிந்து வெளியில் குடியேறியபோது (கி.மு.1600 - கி.மு. 1300) தமிழரொடு நட்புறவோடு வாழ்ந்தனர். கி.மு. 1300 அளவில் புதிதாக வந்த கைபர் கணவாய் ஆரி யர்க்குப் பகைவராயினர்.
தசியூ என்றால் பகைவன் என்று பொருள். இன்றும் வடபுல மொழிகளில் திச்மன் என்னும் சொல் பகைவனைக் குறிக்கிறது. கைபர் கணவாய் வழியாக வந்த புதிய ஆரியர்கள் சிந்துவெளியில் வாழ்ந்த தமிழ் மரபினரைத் தசியூக்கள் எனக் குறிப்பிட்டனர்.
பழந்தமிழர் கோட்டைகள்
தசியூக்கள் என அழைக்கப்பட்ட பிற்காலச் சிந்து வெளித் தமிழரசர்களின் காலத்திலும் சிந்துவெளி உட்பட்ட இந்தியப் பெரு நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்கள் இருந்தன. இரண்டாயிரத்துக்கும் அதிகமான கோட்டைகள் இருந்தன.
இவற்றுள் 100 கோட்டை களை இந்திரன் அழித்தான் என்பது பெரிய இழப்பு ஆகாது. ஆரியர்கள் குதிரையில் விரைந்து வந்து இருட்டில் தாக்கிவிட்டு விடியுமுன் ஓடி ஒளிந்ததால் அவர்களுக்கு வெற்றியும் ஆகாது. சிந்துவெளி மக்களில் இயற்கைச் சீற்றத்தால் குடி பெயர்ந்தவர்கள் தவிர ஏனையோர் இடம் பெயராமல் அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.சிந்தி மக்கள், இராச புத்திரர், பஞ்சாபியர் ஆகியோர் சிந்துவெளி மக்களின் எச்சமாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.
இம்மொழிகளில் ஏராளமான தமிழ்ச் சொற்கள் உள்ளன. அவையும் குமரிக்கண்டம் பழஞ் சொற்களாகக் காணப்படுகின்றன. சிந்துவெளியிலிருந்து திராவிடர் குடி பெயர்ந்தனர் என்பது முற்றிலும் தவறு. சிந்தி ஒரு திராவிட மொழி என நிறுவப்பட்டுள்ளது.சென்ற இடத்திலெல்லாம் கோட்டை கட்டிக் குடியிருக்கும் கோட்டை வேளாளர் என்போர் சங்க காலத்திலிருந்தே வாழ்ந்து வருவதும் இவர்களின் முன்னோரில் ஒரு பிரிவினர் குசராத்து மாநிலத்து துவாரகையில் இருங்கோவேள் பாண்டிய மரபினராக ஆட்சி புரிந்தனர் எனக் கபிலர் கூறி யிருப்பதும் கவனிக்கத் தக்கன.
விராத்திய பிராமணர் என்னும் வேளாப்பார்ப்பனர்
வடஇந்தியாவில் ஆரியத் திராவிட இனக்கலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தம் வெள்ளை நிறத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வருணாசிரமம் என்னும் நிறவெறிக் கொள்கை உருவாயிற்று. இருக்குவேதத்தில் "இந்திரனே, அக்கினியே இங்குள்ள கருப்பர்களை அழித்துவிடு. உலகில் வெள்ளை நிறத்தவர் மட்டும் இருக்க வேண்டும் என்று வேண்டும் பாடல் உள்ளது.
கலப்பினத்து ஆரிய இந்தியரின் பிள்ளைகள் பிராமணப் பிள்ளைகளாகக் கருதப்பட்டனர். ஆனால், வேதம் ஓதவும் வேள்வி செய்யவும் அனுமதிக்கப்படவில்லை. இவர்களை வீராத்திய பிராமணர் என்றனர். இவர்களை வெள்ளை நிற பிராமணர் விரட்டியதால் தெற்கு நோக்கி வரலாயினர். தமிழகத்தில் இவர்களை வேளாப்பார்ப்பனர் (வேள்வி செய்யாத பார்ப்பனர்) என அழைத்தனர். இவர்கள் எந்த உடலுழைப்புத் தொழிலும் செய்வார்கள்.
தமிழ்ப் புலவர்களாகிய கபிலர், நக்கீரர், கழாத் தலைவர் போன்றோர் வேளாப்பார்ப்பன வகையைச் சார்ந்தவர்கள். கி.மு. 1000 அளவில் கொள்கையில் முதன்முதலாக வேளாப் பார்ப்பனர் ஒரு சிலர் காணப்பட்டதாக வேளிர் வரலாற்று நூல் குறிப்பிடுகிறது.
ஆரியர் தெற்கே துரத்தப்பட்டனர்
நடுவண் ஆசியாவிலிருந்த ஆரியர்கள் பனிப் பொழிவு காரணமாக மேய்ச்சல் நிலங்கள் பாழ்பட்டதாலும் வடமுனைப் பனிக் காற்று போன்ற இயற்கைக் காரணங்களாலும் இரு கிளைகளாகப் பிரிந்தனர். ஒரு கிளையினர் கிரேக் கத்தின் வழியாகப் பாபிலோனியாவைக் கடந்து பாரசீகத்தில் தங்கினர். மற்றொரு பிரிவினர் இந்து கூசுமலையைக் கடந்து கைபர் போலன் கணவாய் வழியாக கி.மு. 1300 அளவில் ஆப்கானித்தானத்தில் நுழைந்தனர்.
கிரேக்கத்தின் வழியாக வந்தோர் தீவழிபாட்டினராக மாறிவிட்டனர். சிந்து வெளித் தமிழருடன் நல்லுறவு கொண்டனர்.
அரசன் என்றும் சொல்லை அசுரா என மாற்றி ஒலித்தனர். தம் தெய்வத்தையும் அசுர மசுத்தா என்றனர். அரசர் - அசுரர் என்னும் சொல் உயர்ந்தோர் - சிறந்தோர் எனப் பொருள் பட்டது. உள்நாட்டு மக்களின் ஆடுமாடுகளைக் கவர்ந்து கொள்ளையடித்த பிற்கால ஆரியர்கள் சுரர் என்று சொல்லை உயர்வாகவும் அசுரர் என்னும் சொல்லைத் தாழ்வாகவும் கருதினர். இதனால் பழைய பாரசீக ஆரியர்க்கும் புதிய கைபர் கணவாய் ஆரியர்க்கும் பகை மூண்டது.
பாரசீக ஆரியர்களின் பகைக்கு அஞ்சிய கைபர் கணவாய் ஆரியர்கள் காபூல் ஆற்றைக் கடந்து பஞ்சாபி பகுதிக்கு ஓடிவரத் தொடங்கினர். இவர்களைப் பிற் காலச் சிந்துவெளி மக்கள் புத்தன் (புதிய) ஆரியர் என அழைத்தனர்.
கி.மு. 1300 முதல் கி.மு. 1100 வரை இவர்கள் காபூலில் இருந்து கங்கைச் சமவெளி வரை விரட்டப்பட்டு ஓடி வந்த வரலாற்றை இருக்கு வேதப் பாடல்களால் அறிய முடிகிறது.
Tuesday, September 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment