உண்மையில், தேவப்பிரியா என்பவரால் பதிவு செய்யப்பட்ட, ஆசுரமூர்த்திப்பிள்ளை என்ற பார்ப்பன அடிவருடியின் இந்தக் கட்டுரையை வாசித்த பொழுதுதான் "இரத்தம் கொதிக்கிறது" என்ற வார்த்தைக்கு அர்த்தத்தை என்னால் உணர முடிந்தது, நிச்சயமாக இந்தப் பார்ப்பன அடிவருடி, தமிழர்களின் வரலாற்றைச் சிதைத்து, தமிழர்களின் வரலாற்றுடன், கலாச்சாரத்துடன் இணந்து விட்ட சைவத்தைத் தமிழருடையதல்லவெனவும், வேதங்களாலும், சமக்கிருத சுலோகங்களாகும் செய்ய முடியாத அற்புதங்களையெல்லாம் செய்த தெய்வத்தமிழை இழித்துரைக்கும், இந்த ஆசுரமூர்த்திப்பிள்ளை மட்டும் என் முன்னால் நின்றால் நிச்சயமாகச் செருப்பால் அடித்திருப்பேன்.
தேவப்பிரியா போன்ற பார்ப்பனர்களின் முழு நோக்கமெல்லாம் தமிழர்களையும், தமிழையும் கீழே தள்ளித் தமிழர்கள் வடக்கர்களிடமும், வந்தேறிகளிடமுமிருந்தும் தான் தமது கலைகளையும், பண்பாட்டையும் இரவல் வாங்கினார்களென "நிரூபிப்பதே", அப்படியான பார்ப்பனக் குள்ளநரிகளுக்குத் துணைபோகும் கோடரிக்காம்புகள் தான் இந்த ஆசுரமூர்த்திப் பிள்ளைகள்.பரதேசிப் பார்ப்பனர்கள் தமிழ்ச்சமூகத்தில் சாதிப்பாகுபாட்டை அறிமுகப்படுத்தி தமிழர்களில் பெரும்பான்மையானவர்களைச் சூத்திரர்களாக்கி அவர்களுக்குச் சாதியடிப்படையில் கல்வியை மறுத்ததால் தான், வந்தேறிப் பார்ப்பனர்கள் தமிழர்களின் கல்வி, கலை, தொழில்நுட்பம் எல்லாவற்றையும் ஆக்கிரமித்துத் தமதிட்டப்படி குதறிக் கடித்து, மாற்றியமைத்து தமிழர்களின் கலைகளையே தமிழர்கள் இரவல் வாங்கியதாகத் தமிழர்களுக்குக் கூறினார்கள், அந்தப் பொய்யை மீண்டும், மீண்டும் சொல்லித் தமிழர்களே அதை உண்மையென்று ஒப்பிக்குமாறு செய்தார்கள். உதாரணத்துக்கு 20ம் நூற்றாண்டிலேயே தமிழர்களின் நாட்டியக் கலையான சதிராட்டத்தை இரவல் வாங்கிக் கெஞ்சி, மன்றாடித் தஞ்சாவூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடமிருந்து கற்று விட்டு, அவரை ஒரங்கட்டி விட்டு அதற்குப் பரதநாட்டியமென்று பெயரை வைத்து, அதை வடக்கனான பரதமுனிவருடன் இணைத்து, அதற்குப் பவம், தாளம், ராகம் என்றெல்லாம் விளக்கம் கொடுத்து, அதைத் தமிழர்களையே மீண்டும் ஒப்புவிக்க வைத்த, பரதேசிப் பார்ப்பனர்கள், அவர்களைத் தட்டிக் கேட்க ஆளில்லாத காலத்தில் எப்படியான தில்லு முல்லுகளை எல்லாம் செய்திருப்பார்களெனக் கற்பனை பண்ணிப் பாருங்கள்.இதே போல் தான் சீரும் சிறப்பும் நிறைந்த தொல்காப்பியத்தை ஒரு தமிழன் இயற்றியிருப்பார் என்பதைத் தாங்க முடியவில்லை பார்ப்பனர்களுக்கு, அதனால் தொல்காப்பியத்தை எழுதியவர் தமிழரான தொல்காப்பியரல்ல, அதை எழுதியவர் திரணதூமாக்கினி என்பவர், அவரது தந்தையார் பெயர் சமதக்கினி. அதாவது நூலாசிரியர் ஒரு ஆரிய முனிவர்! வடமொழியில் பாணினி எழுதிய பாணினியமே தொல்காப்பியத்துக்கு வழி நூல், இப்படியும் கதை விட்டார்கள்.பார்ப்பனர்களாலும் தமிழ், தமிழர் என யாராவது பத்திரிகைகளிலோ அல்லது இணையத்தளங்களிலோ பேசினால் தாங்க முடியாது, அதற்கெதிராக, பார்ப்பனர்களினதும் அவர்களின் அடிவருடி போன்ற ஆசுரமூர்த்திப்பிள்ளைகளினதும் திரிப்புக்களை எடுத்துக் கொண்டு, கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு அலையும் பார்ப்பனர்களில் ஒருவர் தான் இந்த தேவப்பிரியா என்பது எல்லோருக்கும் தெரியும்.தமிழர்கள் திருவள்ளுவரையும், திருக்குறளையும் போற்றுகிறார்களே அதையும் நம்முடையதாக்காமல் விட்டால் தமிழர்களை, அறிவற்றவர்களாக, மட்டம் தட்டித் தாழ்த்த முடியாதே என்று நினைத்த பார்ப்பனர்கள், திருவள்ளுவர், பார்ப்பனனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணுக்கும் பிறந்ததாகக் கூடக் கதை விட்டார்கள், அதாவது பார்ப்பான் இல்லாமல் தமிழனால் ஒன்றையும் சாதிக்க முடியாது என்பது தான். இப்படி எத்தனையோ கதைகள், இப்படி இவர்களின் கட்டுக்கதைகளை நம்பி ஏமாந்த இளிச்சவாய்த் தமிழர்கள் எத்தனையோ கோடி. அட, அது தான் பழங்காலக் கதை, போனால் போகட்டும் என்று விட்டு விடுவோம் என்று பார்த்தால் இன்றும் இப்படிப் பொய்களையும், புருடாக்களையும் பரப்புவதற்காகக் குலத்தைக் கெடுக்க வந்த ஆசுரமூர்த்திப்பிள்ளை போன்ற தமிழ்க் கோடரிக்காம்புகளின் உதவியுடன் கிழம்பி விட்டார்கள் பார்ப்பன தேவப்பிரியாக்கள்.இன்று தமிழர்கள் ஏன் சமக்கிருதத்தை வெறுக்கிறார்கள்?தமிழர்கள் இன்று சமக்கிருதத்தை வெறுப்பதற்குக் காரணமே தமிழ்நாட்டுப் பார்ப்பான்கள் தான். ஈழத்தில் இல்லாதளவுக்கு தமிழ்நாட்டில் சமக்கிருத வெறுப்புள்ளமைக்குக் காரணம் தமிழ்நாட்டின் தமிழெதிரிப் பார்ப்பான்கள், தமிழர்களும், தமிழ்மன்னர்களும் வளர்த்த சமக்கிருதத்தை, "செந்நிறத்த தமிழோசை வடசொல் ஆகி" என்று தெய்வத்தமிழில் அரங்கனைப் பாடிய திருமங்கையாழ்வார் கூறிய சமக்கிருதத்தை, இரண்டு மொழிக்கும் பிறப்பிடம் ஒன்றே என்பதால் தான் "ஆரியம் தமிழோடிசை யானவன், கூரிய குணத்தாஅர் குறிநின்றவன்" என்று திருநாவுக்கரசர் கூறிய சமக்கிருதத்தை தமக்கு மட்டுமுரியதாகப் பம்மாத்து விட்டுத் தமிழுக்கு அதிர்வில்லை, தமிழில் கருவறையில் பாடக்கூடாதென்றெல்லாம் கதைவிட்டார்கள்.. தமிழில் இருந்தே சமக்கிருதமும் உருவாகியதென்று திருமாலின் அருள் பெற்ற திருமங்கையாழ்வாரும், சிவனால் ஆட்கொள்ளப்பட்ட திருநாவுக்கரச நாயனாரும் கூறும் போது தமிழில் அர்ச்சனை செய்தாலென்ன, சமக்கிருதத்தில் அர்ச்சனை செய்தாலென்ன?திருமங்கையாழ்வாரையும் , திருநாவுக்கரசரையும் விடவா, இந்தப் பரதேசிப்பார்ப்பனர்களுக்கும் அவர்களின் அடிவருடி ஆசுரமூர்த்திப்பிள்ளைக்கும் அருளும், அதிகாரமுமுண்டு?சமக்கிருதத்தைத் தமக்கு மட்டுமுரியதாக்கித், சமக்கிருதத்தைத் தாம் கங்கைப்பெருவெளியிலிருந்து ராஜ ராஜ சோழன் கட்டிய கோயில்களில் கழுவித் துடைக்க, வந்த போதே கொண்டுவந்ததாகக் கதை விட்டது மட்டுமல்லாமல், தாம் மட்டுமே சமக்கிருதம் கற்றால் தமிழர்களின் கோயில்களைத் தொடர்ந்து கொள்ளையடிக்கலாம் என்ற நோக்கத்துடன் இது நாள்வரை நடந்து கொண்டது மட்டுமல்ல, தமிழை இழித்துப் பழிக்கவும் தொடங்கியதால் தான் தமிழர்கள் சமக்கிருதத்தைப் பார்ப்பனர்களுடையதாகவும், தமிழர்களுக்கு எதிரான மொழியாகவும் கருதத் தொடங்கினார்கள். இன்று தமிழர்களின் சமக்கிருதமொழி வெறுப்புக்குத் தமிழ்நாட்டுத் தமிழெதிரிப் பார்ப்பான்கள் தான் காரணமேயொழிய வேறு யாருமல்லதமிழில் அர்ச்சனை செய்தால் சிவனுக்குப் பிடிக்காதா? தமிழில் அர்ச்சனை செய்தால் அது சைவமில்லையா? தமிழில்லாமல் சைவமா?இந்தப் பார்ப்பன அடிவருடி ஆசுரமூர்த்திப் பிள்ளை பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டுக்குள் கோயில்களை வைத்திருப்பதற்காக, , தமிழைத் தமிழர்களின் கோயில்களுக்கு வெளியே தொடர்ந்து நிறுத்துவதற்காக, சமக்கிருதத்தில் மட்டும் தான் அர்ச்சனை செய்ய வேண்டுமென்ற்ய் உளறுகிறது என்பது மட்டும் தெளிவாகிறது.ஈழத்தில் கதிர்காமத்து முருகனுக்குச் சமக்கிருத மந்திரமோதுவதில்லை, செல்வச்சன்னதியிலும் சமக்கிருதம் கிடையாது, அந்தக் கோயில்களிலுள்ள முருகன் அருள் பாலிக்கவில்லையா, செல்வச்சன்னதி முருகனுக்கு மீனவக்குருக்களும், கதிர்காமக் கந்தனுக்கு வேட்டுவக்குருக்களும் பூசை செய்கிறார்கள், பார்ப்பான்கள் சம்க்கிருத்தில் பூசை செய்யாததால் ஈழத்து முருகன் சைவமில்லையென்றாகி விடுவானா? 'கண்ணப்பனொப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னையுமாட்கொண்டருளி" என்று மாணிக்கவாசகர் கசிந்துருகும் கண்ணப்பநாயனார் சிவாகம விதிப்படியா பூசை செய்தார், அல்லது அவரென்ன தனக்குப் புரியாத சமக்கிருத மொழியிலா புலம்பினார். சிவபெருமான் கண்ணப்பனின் பூசையில் உருகவில்லையா, அப்படியிருக்க ஆசுரமூர்த்திக்கு மட்டும் ஏன் பூசைசெய்யச் சமக்கிருதமும், பார்ப்பானும் தேவை.பார்ப்பான்கள் தமிழர்களின் கோயில்களுக்குள் ஒட்டகம் நுழைந்தது போன்று நுழைந்து விட்டுத் தமிழையும், தமிழர்களையும் வெளியில் தள்ளும் வரை தமிழில் தான் தமிழர்கள் தமிழர்களின் கோயில்களில் பூசை செய்தார்கள் என்பதற்கு நற்றமிழ் வல்ல நாயன்மார்களின் வரலாற்றிலேயும், தமிழ்த் திருமுறைகளிலேயும் ஆதாரங்களுண்டு."நாவுக்கரசர் திருக்கயிலாயக் காட்சியில் இன்புற்று மகிழ்ச்சி பெருகி நிற்கையில், அக்காட்சி மறைந்துவிடுகிறது. ஆனால் அவர் கண்ட காட்சியை, சிவமும் சத்தியுமாகிய திருக்கோலத்தைப் பிறைக் கண்ணியானும் மலைமகளும் எனக் காண்கின்றார். காணுமிடத்து, அடியார் பலர், பூவும் நீரும் கொண்டு இருவரையும் போற்றிச் செல்வதும், அவர் பின்னே செல்கின்ற தமக்குக் கயிலைமலைச் சாரலில் பெண் யானைகளோடு ஆண் யானைகள உலா வருவது தெரிகிறது. 'மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின்புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்" அழகிய பிறை மதியைத் தலைமாலையாக அணிந்தவர் சிவபெருமான். உமாதேவி இமவான்மகள் ஆவார். அச்சிவனை உமையோடு சிலர் பாடிச் செல்கிறார்கள். அவர்கள் பூவோடு நீரை எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும் போகிறார்கள். அவர்களுடன் நானும் கோயிலுக்குள் போவேன். அப்படிப்பட்ட நான், கால் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு என்ற தலத்தை அடைந்தேன். அப்போது அன்பு பொருந்திய இளம் பெண் யானை வந்து கொண்டு இருந்தது. அதனுடைய ஆண் யானையும் வருவதைப் பார்த்தேன். அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைப் பார்த்தேன். எப்பொழுதும் பார்த்து அறிய முடியாத காட்சிகளை எல்லாம் பார்த்தேன்." "திருநாவுக்கரசர் காலத்தில் திருக்கோயில் கதவுகள் எல்லோருக்கும் திறந்து இருந்ததையும் அடியார்கள் நீரும் பூவும் சொரிந்து நேரடியாக இறைவனை தமிழில் வழிபட்டதையும் காணலாம். நாவுக்கரசர் தானும் அடியார்களும் பூவும் நீரும் கொண்டு சென்று நேரடியாக இறைவனைத் தொழுதார் என்கிறார். அதனால்தான் சூலை நோயுற்ற போது 'சலம் பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்" எனப் பாடுகிறார். மேலும், இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீவளி ஞாயிறு திங்கள் மயக்கம் இல்புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம் அயிர்ப்பொன் நின்றினின் திருவடி யதனை அர்ச்சித் தார் அடியார்கள் மட்டுமல்ல வானவர், இயக்கர், கின்னரர், புலி, சிங்கம், நாகம் எல்லாம் இறைவனின் திருவடிகளை நேரடியாக அர்ச்சித்தனர் என்கிறார் சுந்தரர். பல்லவர் காலத்தில் தமிழோதி வழிபடவும் கருவறை செல்லவும் உரிமை பெற்றிருந்த தமிழர்கள் சோழர்காலத்தில் வடமொழிக்கு இடங்கொடுத்து கருவறை செல்லும் உரிமையை இழந்தனர். இதற்குக் காரணம் பல்லவர்களை மிஞ்சும் வண்ணம் இராசராசன், இராசேந்திரன் போன்ற சோழ மன்னர்கள் பெருவாரியான பார்ப்பனர்களை காசி, கஷ்மீர், வங்கம் போன்ற வடநாடுகளில் இருந்து கொண்டு வந்து குடியேற்றிமையே"தமிழில் பூசை செய்தால் பலனளிக்காது, சமக்கிருதத்துக்குத் தான் மந்திரமும் மாயமுண்டெனப் பம்மாத்து விடுகின்றனர் ஆசுரமூர்த்திப்பிள்ளையும், தேவப்பிரியா போன்ற பார்ப்பனர்களும் ஆனால் தமிழில் கோளறு பதிகத்தைப் பாடும் அடியார்களுக்கு நாளும், கோளும் எதுவும் செய்யாது சிவனருளே கிடைக்குமென்கிறார் நாளும் தமிழ்வளர்த்த ஞானசம்பந்தர், தமிழைப் போற்றினார் புகழ்ந்தார் என்பதற்காகப் பார்ப்பனராகவிருந்தும், அவரது திருமணநாளிலேயே, பிற்கால நந்தனார் போல் பார்ப்பனர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டவர் தான் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்.'தானுறு கோளும் நாளும் அடியாரை வந்துநலியாத வண்ணம் உரை செய்ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில்அரசாள்வர் ஆணை நமதே.'தன் நல்வினைத் தீவினைக்கேற்ப பயன் நல்கும் கோள்களும் நாட்களும் அடியாரை நலியாத வண்ணம் உரைத்த, சிறந்த இந்தத் தமிழ்ச் சொல்மாலையை ஓதுகின்ற அடியவர்கள் வானுலகத்தை அடைந்து மகிழ்ந்திருப்பார்கள். இது மிக மிக உறுதி.
Tuesday, August 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
ஈசுரமூர்த்திப்பிள்ளை போன்ற தமிழெதிரிகளைத் தொடர்ந்து பந்தாடுங்கள்!
I wish you to get permission before using some ones writings
OR
I think you should give the link from which you took the matter.
Or
should have thanked the original writer as a good will.
---
I do not blame you, just suggesting you. IF your aim is, exposing the ANTI Tamils and ANTI Dravidian race, you can do that better, by assembling like minded people as a team to write truth against the false propaganda.
...
Good luck
Post a Comment