Friday, August 8, 2008

சுஜாதா:நம் காலத்து நாயகன் ( 1935-2008 )

பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி வெயில் தகித்த ஒரு மதியத்தில் சுஜாதா ஒரு பிடி சாம்பலாக மாறினார். மயானத் தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த என்னிடம் யாரோ ஒரு உறவினர் சுஜாதா மீது போடப்பட்ட நாணயங்களில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாண யத்தைக் கொடுத்து 'நினைவாக வைத்துக்கொள் ளுங்கள்' என்று கொடுத்தார்.
சுஜாதா 90களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக் குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கை மறதியாய் வைக்கவோ முடியாத நாணயம். புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட் டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலை யுதிர் காலமும் வழியே உருவாக்கிய மொழியின் சாகசங்கள் பெரும் பரவசத்தை ஏற்படுத்தின. 'அவள் புன்னகை மட்டும் அணிந்திருந்தாள்' என்பது போன்ற ஆயிரக்கணக்கான குதூகலமும் பொறியமைவும் கொண்ட நூதனமான வாக்கியங் கள் நான் அறிந்த மொழி பழக்கங்கள் அனைத்தை யும் கலைக்கத் தொடங்கின. வாசிப்பின் இன் பத்தை சுஜாதா அளவுக்கு உருவாக்கிய ஒரு எழுத் தாளன் தமிழில் இல்லை என்பதை இப்போது தர்க்க பூர்வமாக நிறுவ முடியும். ஆனால் அந்த இளம் வயதில் அவர் மொழியை ஒரு தூண்டி லைப் போலப் பயன்படுத்துகிறார் என்பதை நான் அறியவில்லை. தொடர்ந்து அந்தத் தூண்டிலை நோக்கிச் சென்றுகொண்டே இருந்தேன். பின்னர் அவரே தூண்டில் கதைகள் என்ற ஒரு தனித்த கதை வரிசையையும் எழுதினார். கோவை ஞானி, நிகழ் இதழில் எனது கவிதைகளை 90களின் ஆரம்பத்தில் வெளியிட்டு உற்சாகமூட்டிய சமயம் அது. 'கால்களின் ஆல்பம்' அப்போதுதான் நிகழில் வெளிவந்திருந்தது. கோவையில் நடந்த ஒரு சிறுகதைப் பயிலரங்கில் அந்தக் கவிதையை வாசித்த சுஜாதா, அதற்குப் பார்வையாளர்கள் ஆற்றிய உணர்ச்சிபூர்வமான எதிர்வினை குறித்து பலமுறை வெவ்வேறு இதழ்களில் எழுதினார். மேடைகளில் பேசினார். எந்த அடையாளமும் அற்ற ஒரு இளம் கவிஞனின் ஒரு கவிதை குறித்து சுஜாதா போன்ற ஒரு நட்சத்திர எழுத்தாளர் காட்டிய இந்த உற்சாகம் அவனுக்கு அந்த வயதில் அளிக்கக்கூடிய தன்னம்பிக்கையையும் சக்தியையும் விவரிப்பது கடினம். ஒரு முறை தற்செயலாக தூர் தர்ஷன் பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் 'அம்மா இல்லாத முதல் ரம்ஜான்' கவிதையை அவர் வாசித்துக்கொண்டிருப்பதைக் கேட்டு என் வீட்டில் அனைவரும் அதிர்ந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்து முதன்முதலாக ஒரு சிறிய கடிதம் எழுதி னேன். ஒரு போஸ்ட் கார்டில் பதில் எழுதினார், 'உங்களுக்குப் பிடித்த கவிஞர்களின் கவிதைகளை எனக்கு அனுப்புங்கள். நான் அவற்றை வாசகர் களுக்கு அறிமுகம் செய்கிறேன்' என்று. நான் ஒரு நோட்டுப் புத்தகத்தில் அப்போது என்னை ஆக்கிர மித்துக்கொண்டிருந்த நகுலன், பிரமிள், தேவதேவன், சுகுமாரன், கல்யாண்ஜி, ஆத்மாநாம், சுயம்புலிங்கம் என பலரது கவிதைகளையும் அவ ருக்கு அனுப்பினேன். அடுத்தவாரமே இந்த நோட் டுப் புத்தகம் பற்றிய குறிப்புடன் சுயம்புலிங்கத்தின் 'தீட்டுக் கறை படிந்த பூ அழிந்த சேலைகள்' கவிதை பற்றி குமுதத்தில் எழுதினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் 'நீ அனுப்பிய நோட்டுப் புத்தகத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்' என்றார். அவர் வாசிப்பில் காட்டிய மூர்க்கமான, தளர்ச்சியற்ற ஈடுபாடு அபூர்வமானது. எப்போதும் ஒரு வாசகனாகவும் ரசிகனாகவும் தன்னை வைத்திருப்பதில் அவர் சளைக்கவே இல்லை. சமீப காலம்வரை அவரைச் சந்திக்கச் செல்லும்போதெல்லாம் தனக்கு அனுப்பப்பட்ட ஏதாவது ஒரு கவிதைத் தொகுப்பை எடுத்துக்கொண்டு வருவார். 'இந்தத் தொகுப்பில் 37ஆம் பக்கத்தில் உள்ள கடைசி இரண்டு வரிகள் மட்டும்தான் கவிதை' என்பார். அவருக்கு கவிதை வரி களைக் கண்டுபிடிப்பதில் விநோதமான ஒரு மோப்பசக்தி செயல்பட்டது. பல சமயங்களில் அவர் நினைவிலிருந்து மேற்கோள் காட்டும் வரிகள் அதன் மூலத்திலிருந்து வெகுவாக விலகியும் சுருக்கப்பட்டும் இருப்பதைக் கண்டிருக்கிறேன். வாக்கியங்களின் மிகையான, சுமையான சொற்களைக் களையாமல் அவரால் அவற்றை நினைவில் நிறுத்த முடியாது. மொழி குறித்த இந்தக் கறாரான நுட்பமான அணுகுமுறையே அவரது எழுத்துகளை நவீனத் தமிழின் நிர்ணய சக்தியாகவும் மாற்றியது. சுபமங்களா நாடக விழாவிற்காக சுஜாதா மதுரைக்கு வந்திருக்கிறார் என்று தெரிந்து அங்கு போனேன். முதல் நாளே அவர் உரை முடிந்து விட்டிருந்தது. அவரைச் சந்திக்க வரலாமா என்று ஒரு நண்பர் மூலம் கேட்டு அனுப்பினேன். 'சிரமம் வேண்டியதில்லை, நானே வந்து பார்க்கிறேன்' என்று நேராக விழா மண்டபத்திற்கு வந்துவிட்டார். அன்றைக்கு அவரைப் பொறுத்தவரை ஒரே ஒரு கவிதை மூலம் அறியப்பட்ட நபர். ஆனால் அவருக்கு அது போதுமானதாக இருந்தது. சில நிமிடங்களில் அவரைப் பலரும் சூழ்ந்துகொண்டனர். அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன் என்பதைவிட பார்த்துக்கொண்டிருந்தேன். சென்னைக்கு வந்தபிறகு அவரை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகரித்தன. பின்னர் கனிமொழி மற்றும் அவரது கணவர் அரவிந்தனின் நட்பு கிடைத்தபோது எங்கள் மூவருக்கும் பொதுவான ஒரு நண்பராக, மையமாக சுஜாதா மாறினார். 2002ஆம் ஆண்டு துவக்கத்தில் கடும் மன அழுத்தம் என்னை சூழ்ந்தது. அதுவரையிலான எனது உறவுகள் அவை சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் கலைந்து நான் எனது தனிமையின் மயான வெளிகளுக்கு திரும்பிவிட்டிருந்த காலம். உடைந்த மனோரதங்களுடன் வாரம் ஒரு முறை எனது மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜை சந்திப்பேன். எனது பிரச்சினைகளுக்கான காரணத்தை முற்றாக மறைத்து தொடர்ந்து அவரிடம் பொய் களையும் குழப்பமூட்டும் தெளிவற்ற வாக்கியங்களையும் கூறிக்கொண்டிருந்தேன். நெஞ்சைப் பிசையும் இரும்புக் கரங்களிலிருந்து என்னை விடுவியுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன். அவர் எனக்கு மருந்துகளைக் கொடுத்தார். அவை தூக்கத்தைக் கொண்டுவந்தன. நெஞ்சின் ஆழத்தில் கொந்தளிக் கும் கடல்கள் தூங்க மறுத்தன. அந்தக் காலகட்டத் தில்தான் சுஜாதா அபாயகரமான நிலையில் அப்போல்லோவில் அனுமதிக்கப்பட்டு மரணத்தின் எல்லை வரை சென்று மீண்டிருந்தார். அவரைத் திரும்பத் திரும்ப போய்ப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது பனி எங்கோ உருகத் தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் சிலவற்றைப் பதிப்பிக்கும் அனுமதியை வழங்கினார். அது ஒரு துவக்கம். எனது துயரத்தின் இருள் படிந்த முகம் கண்ணாடியில் வேறுவிதமாக மாறத் தொடங்கியது. எனக்குத் தேவை மருந்துகள் அல்ல செயல்பாடுகள் என்பதை சுஜாதா எனக்குப் புரிய வைத்தார். மிக நெருக்கடியான சந்தர்ப்பங்கள் வந்தன. அவர் மிகுந்த உறுதி யுடன் என்னை ஆதரித்தார். நான் தவறு செய்த சந்தர்ப்பங்களில்கூட அவர் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. என் வாழ்நாளில் நான் ஒரு போதும் அந்த சந்தர்ப்பங்களை பதிவு செய்யப் போவதில்லை. அவை அந்தரங்கத்தின் வலி மிகுந்தவை. சுஜாதா என் மனதின் ஆழத்தில் இருந்த இருள் முடிச்சுகளை அவிழ்த்தார். அன்பின் வெளிப்படையான உணர்ச்சிகளை அவர் ஒருபோதும் காட்டியவரல்ல. நான் மனம் உடைந்த சந்தர்ப்பங்களில் அவர் ஒரு ஆறுதலோ மறு மொழியோ சொல்ல மாட்டார். மாறாக சில புதிய திட்டங்களைக் கொடுப்பார். அதுவரையிலான துயரத்தின் வாசனை நீங்கிச் சென்றுவிடும்.உயிர்மை, சுஜாதாவின் புத்தகங்களின் மிகச் சிறந்த பதிப்புகளைக் கொண்டுவந்தது. நண்பர் தேசிகனின் உதவியுடன் அவரது சிறுகதைகள், குறுநாவல் கள், நாடகங்கள் அனைத்தையும் வகைப்படுத்தி தொகை நூல்களாகக் கொண்டுவந்தோம். சிதறிக் கிடந்த அவரது எழுத்துகள் இவ்வாறு தொகுக்கப் பட்டதன் வழியாக சுஜாதாவின் படைப்பின் ஆளுமை துல்லியமாக வெளிச்சம் பெற்றது. உண்மையில் ஊடகங்கள் வழியாக அறியப்படும் பொது முகம் அல்ல சுஜாதாவினுடையது. அவரது எழுத்துகள் தமிழ் எழுத்து முறையின் திசை வழியையே முற்றாக மாற்றி அமைத்தன. தமிழ்ப் புனைகதை மொழியையும் உரைநடை முறையையும் சுஜாதா ஒரு இயக்கமாக செயல்பட்டு மாற்றியதற்கு சாட்சியம் இந்தத் தொகை நூல்கள். கடந்த சில ஆண்டுகளில் நான் கவிதைகள் எழுதுவது குறைந்து போனது பற்றி அவர் என்னிடம் திரும்பத் திரும்ப பேசினார். 'உனது தொழில் உன் எழுத்துகளை கொன்றுவிடக் கூடாது' என்றார். இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் வாசகர்களுக்குக் கையெழுத்திட்டுக்கொண்டிருந்த இடைவெளியில் 'சார் உங்கள் கடைசி பக்கத்தை உயிர்மையில் ஆரம்பிக்கிறீர்களா?' என்று கேட்டேன். 'எழுதுகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை, நீயும் தொடர்ந்து ஏதாவது எழுதுவதாக இருந்தால் நானும் எழுதுகிறேன்' என்றார். அவர் நோய்மையின் துர்க்கரங்களிலிருந்து பல முறை வெற்றிகரமாக மீண்டு வந்திருக்கிறார். இந்த முறை அது நிமோனியாவின் ரூபத்தில் வந்தது. ஒன்றரை மாதங்கள் மருத்துவமனைக்கும் வீட்டிற்குமான போராட்டம் பிப்ரவரி 27ஆம் தேதி இரவு 9.22க்கு முடிவுக்கு வந்தது. செயற்கை சுவாசத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருந்த அவரது உடல் ஒரு கொடுங்கனவாக மாறியது. ஒருபோதும் கடக்க முடியாத கொடுங்கனவு அது. சுஜாதா இந்த நூற்றாண்டில் தமிழ் அடைந்த நவீனத்துவத்தின் மாபெரும் மைய நீரோட்டம். அதில் கால் வைக்காமல் படைப்பின் சவால்களை மொழியின் சவால்களை ஒருவர் கடப்பது மிகவும் கடினம்.எமது எல்லாச் செயல்பாடுகளிலும் சுஜாதாவின் சொல்லின் வலிமையும் அன்பின் நிழலும் படிந்திருக்கிறது. உயிர்மை குடும்பத்தினர் அவரது நினைவு களை நெஞ்சில் ஏந்துகின்றனர்.

மனுஷ்ய புத்திரன்

( நன்றி: உயிர்மை மார்ச் 2008 )

Friday, October 12, 2007

வந்தேறிய வரலாற்றை மணல் திட்டில் மறைக்கப் பார்க்கும் பார்பன சூழ்ச்சி !!

பார்பனர்கள் இந்தியாவிற்குள் கைபர் போலன் கனவாய் வழியாக வந்தேறிய ஆரியர்கள் என்பது வரலாற்று உண்மையாக ஆகிவிட்ட நிலையில், தாம் வந்தேறிகள் என்பதை மறைப்பது எப்படி என்பதில் உடனடி உபாயம் கிடைக்காததால் பலவித அர்சனைகளை ஆங்கிலேயே மெக்கல்லனுக்கு செய்துவந்தார்கள். வெள்ளையனை பார்பனர்கள் வெறுத்து விடுதலை போராட்டத்திற்கு குதித்தற்கும் வெள்ளையர்கள் இவர்களை வந்தேறிகள் என்று அறிவித்ததாலேயே தான். அதற்கு முன்பு வெள்ளையர்களுக்கு அடிவருடியவர்களில் பெரும்பாண்மையினர் பார்பனர்களே. வெள்ளையர்கள் பார்பனர்களை வந்தேறியவர்கள் என்று பகிரங்கப்படுத்திய பின், நூற்றாண்டுகாலம் குடுமியை அவிழ்த்தும் முடிந்தும் யோசித்ததில் வந்தேறிகள் என்ற வரலாற்றை மறைக்க வழியே தெரியவில்லை.

நிலமை இப்படி சென்று கொண்டிந்த போது கடந்த ஐந்தாண்டுக்கு முன் நாசா செயற்கைகோள் வழியாக எடுத்த இலங்கை - இந்திய கடல்பகுதியில் ஆதாம் பாலம் எனப்படும் மண்ல்திட்டின் புகைப்படம் வெளியானது. அதற்கு முன்பு அப்படி ஒன்று இருப்பதோ, அது இராமர் பாலம் என்று சொல்லப்பட்டு வந்தது இல்லை. அந்த புகைப்படத்தை வைத்து நாசாவில் வேலை பார்க்கும் சர்வசேத பார்புகள் அது இராமர் பாலம் என்று கதை கட்டினால் பார்பனர்களும் பார்பன இலக்கியமான இராமாயணமும் இந்தியாவில் 15,000,00 (பதினைந்து லட்சமாம்) ஆண்டுகளாக இருப்பவை என்று கதை கட்ட முடியும் என்று திட்டுமிட்டு, மணல் திட்டை இராமரின் கயிற்றுப் பாலமாக திரித்து சொல்கின்றன, இராமயண கதைப்படி குரங்குகள் அமைத்த பாலம் மிதந்ததாம்.

இந்து உணர்வை தூண்டிவிட்டால் அரசாங்கத்தின் சேது சமுத்திர திட்டத்தை நிறுத்திவிடலாம் என்பதோ, அந்த பாலத்தை உடையாமல் தடுத்துவிடலாம் என்பதோ தற்போதைய உண்மையான நோக்கம் அல்ல. பார்பனர்கள் இந்தியாவை சேர்ந்த முன்னாள் குடிமக்கள் என்று காட்டுவதற்காக செய்யப்படும் மலிவு அரசியல் இது. இவர்கள் என்னதான் இதை தடுத்து நிறுத்தினாலும் இவர்கள் வந்தேறிகள் என்று நிரூபணம் செய்யப்பட்டதை இனி மாற்ற முடியாது. ஆனால் பாஜாகவுக்கு இந்து ஓட்டுகள் விழும் என்ற மற்றொரு எதிர்பார்ப்பை வேண்டுமானால் இந்த மலிவான மணல் திட்டு அரசியலால் உணர்ச்சி வசப்பட்டு ஏமாந்த இந்துக்களால் கிடைக்கலாம்.

தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

தந்தை பெரியார், பார்ப்பனர்களை, வைதீகப் பார்ப்பனர் என்றும், லௌகீகப் பார்ப்பனர் என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பார். ஞாநி ஒரு லௌகீகப் பார்ப்பனர். அவர் அரசியலை அலசுவார், சமூகநீதி பேசுவார், அறிந்தும் அறியாமலும் இருக்கும் பாலியல் உணர்வுகளைப் பாடமாய் நடத்துவார், எங்கு சென்றாலும், தன் முற்போக்கு முகத்தை மறக்காமல் எடுத்துச் செல்வார்.

ஆனால், அவருக்குள் புதைந்து கிடந்த திராவிட இயக்க எதிர்ப்பு, கலைஞர் எதிர்ப்பு போன்றவை பூனைக்குட்டி வெளியே வருவது போல் இப்போது வெளிவரத் தொடங்கி விட்டன.

முரசொலி மாறனுக்கு அஞ்சல்தலை வெளியிட்டது பற்றி எழுதுகையில், தேசிய விலங்குகளுக்கு எல்லாம் கூட அஞ்சல்தலை வெளியிடப்படும்போது மாறனுக்கும் வெளியிட்டால் என்ன என்பது போல் குறிப்பிட்டிருந்தார். நெஞ்சு நிறைய அப்பிக்கிடக்கும் பகையும், வன்மமும் அந்த வரிகளில் அப்படியே வெளிப்பட்டன.

கண்ணகி சிலையைக் கரடி பொம்மையோடு ஒப்பிட்டுத் தன் மேதாவித் தனத்தை ஒருமுறை வெளிப்படுத்தினார். இப்போது ஆனந்த விகடனில், ஸ்டாலினுக்கு இருக்கும் எல்லாத் திறமையும் பரிதி இளம்வழுதிக்கும் உண்டுதானே என்று எழுதி, தி.மு.க.விற்குள் சிண்டுமுடியும் சின்னத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

என் குடும்பத்தில் தலித் மருமகள் இருக்கிறார் என்பது போன்ற வெற்று அறிக்கைகள் விடுவதைக் கைவிட்டுவிட்டு, எங்கள் கட்சியின் சார்பில் ஒரு தலித் முதலமைச்சராக்கப்படுகிறார் என்று கலைஞர் அறிக்கைவிட வேண்டுமாம், ஒரு தலித் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஞாநி கனவு காண்கிறாராம். அடடா, தலித் மக்கள் மீது ஞாநிக்குத்தான் எத்தனை பரிவு, எத்தனை பாசம்.

அண்மையில் அவருக்கு ஆனந்தவிகடனில் ஒரு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளதாகக் கேள்விப்பட்டேன். அந்தப் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம், யாராவது ஒரு தலித் நண்பருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று அவர் சொன்னதாகத் தெரியவில்லை. கனவெல்லாம், கலைஞரைப் பற்றி மட்டும்தான் போலும். குறைந்த பட்சம் ஜெயலலிதாவிடம் இருந்தும் அப்படி ஓர் அறிக்கை வர வேண்டுமென்று அவர் கனவு கண்டிருக்கலாம்.

தங்கள் நெஞ்சில் பட்டதை அப்படியே சொல்லிவிடும் முரடர்கள்தான் நாமெல்லாம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பக்குவமெல்லாம் நம்மில் பலருக்கு இன்னும் கைவரவில்லை. பாருங்கள். அது ஞாநிக்கு எவ்வளவு அழகாய்க் கைவருகிறது என்று!

தி.மு.க. விற்குள் உட்கட்சி சண்டையும், குழப்பமும் வரவேண்டும் என்னும் தன் ஆசையை நேரடியாகச் சொல்லும் முரட்டுத்தனம் அவரிடம் இல்லை. பரிதி முதலமைச்சராக வரவேண்டும் என்று கனவு காண்பதாகச் சொல்லிவிட்டால், பிறகு அதை எதிர்ப்பது கடினம். எதிர்ப்பவர்களைத் தலித் விரோதி என்று சொல்லிவிடலாம், ஞாநியின் கனவு பலிக்கும் வரையில், தி.மு.க.விற்கும் தலித் விரோதக் கட்சி என்று முத்திரை குத்திவிடலாம்.

இப்படிப் பல்வேறு சித்து விளையாட்டுகளை ஞாநி அந்தக் கட்டுரையில் செய்து பார்த்திருக்கிறார்.

ஆனாலும், வரலாறு நமக்கு ஓர் உண்மையைச் சொல்கிறது. திராவிட இயக்கத்தில் தலித் தோழர்களுக்கு எப்போதும் இடம் இருந்திருக்கிறது என்பதே அந்த உண்மை. மீனாம்பாள், சிவராஜ், தொண்டு வீராசாமி, சத்தியவாணி முத்து தொடங்கி இன்று வரை அதன் தொடர்ச்சியை நம்மால் காணமுடியும். அண்மையில் கூட தன் பேரனை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனைத்துத் தகுதிகளும் வாய்ந்த ஆ.இராசாவைத்தான் அமைச்சராக ஆக்கியுள்ளார் கலைஞர். தமிழக அரசிலும், ஆதிதிராவிட நலத்துறைக்கு மட்டுமின்றி, பால்வளத்துறைக்கும் ஒரு தலித் நண்பரே அமைச்சராக உள்ளார் என்பதை நாம் அறிவோம்.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்து விட்டு, தலித் மக்களின் முன்னேற்றத்தில் தி.மு.க. அக்கறை காட்ட வேண்டும் என்பது போல் அறிவுரை சொல்வதும், கனவு காண்பதாய்க் கதைவிடுவதும், கிழிந்துதொங்கும் அவரது முற்போக்கு முகமூடியையே நமக்கு அடையாளம் காட்டுகிறது.

பரிதிஇளம்வழுதியின் மீது நமக்கெல்லாம் இல்லாத பாசம், திடீரென்று அவருக்கு எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது? இதுவரை பரிதியின் திறமையைப் பாராட்டி அவர் எத்தனை இடங்களில் எழுதியும் பேசியுமிருக்கிறார்? எந்தெந்த வகைகளில் ஸ்டாலின் மற்றும் பரிதியின் திறமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்? பொத்தாம் பொதுவில். போகிற போக்கில், ஒரு குற்றச்சாட்டை வீசிவிட்டுப் போவதென்பது, எவ்வளவு உள்நோக்கமுடையது என்பதை நாம் உணரவேண்டும்.

தந்தை பெரியார் ஓர் இடத்தில் சொல்லுவார், வைதீகப் பார்ப்பனர்களைவிட லௌகீகப் பார்ப்பனர்களே ஆபத்தானவர்கள் என்று!

-சுபவீ -

இந்துத்துவ வியாதிகளே-அழிவை சந்திக்கப் போவது நீங்களே !!

சேதுசமுத்திர திட்டம் எனப்படும் 150 ஆண்டுகால கனவு திட்டம் செயல்வடிவத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, நாசாவின் புகைப்படைத்தை இராமர் பாலம் என்று சொல்லி கதை கட்டி பார்பனிய பாசிச வாதிகளான இந்துத்துவ வாதிகள், அதனை எப்படியும் தடுக்க முயன்று முடியாமல் போகவே கலைஞரின் பேச்சை தொடர்ந்து கொலை மிரட்டல் விடும் அளவிக்கு சென்று இருக்கின்றன. இந்தியாவின் புதிய பார்பனிய பின்லேடன் இராம் விலாஸ் வேதவாந்தி, இந்து இளைஞர் அமைப்பை தூண்டுவிட்டு 'பகவத் கீதை' என்னும் புனித(?) நூலில் சொல்லப்பட்டுள்ள தண்டனையை, ஷங்கரின் அன்னியன் ஸ்டைலில் நிறைவேற்றச் சொல்லி இருப்பதாக தகவல் வருகிறது. கலைஞரின் ஒரு மயிரையும் புடுங்க முடியாது என்பது வேறு விசயம்.

இந்த திட்டம் நிறைவேறினால் திட்டமிட்டபடி தமிழகம் பயன் பெறும். தூத்துக்குடி தொழில் வளர்ச்சி பெருகும். பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இன்னும் பல நன்மைகள் கிடைக்கும். நிறைவேறாமல் போனால்,

தமிழகம் மட்டுமே பெரியார் வழியில் பார்பன விஷப்பற்களை பிடுங்கி எறிந்து அரவங்களின் ஆரவார சீற்றத்தை அடக்கியிருக்கிறது. இந்த திட்டம் நிறைவேறாமல் போனால் பார்பனிய பயங்கரவாதிகளின் சூழ்ச்சிகளை இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களும், பழங்குடியினரும் உணர்ந்து கொள்வார்கள். முன்பு தமிழகத்தில் நடந்தது போலவே இந்திய அளவில் பூனூல் அறுப்பு போராட்டங்கள் நடந்து பார்பனர்கள் செல்வாக்கு இழக்கும் நிலைக்கு ஆளாவார்கள். பார்பனியத்தின் பழமைவாதத்தை உலகமே கண்டு வியப்படைந்து கைகொட்டி சிரிக்கும். பார்பனியம் அழியப்போகும் பொன்னாள் எது என்றால் அது சேதுசமத்திர திட்டத்தை முடக்கிப் போடும் நாள்தான்.

சேது கால்வாய் திட்டம் கிடைத்தால் நமக்கு நன்மை. இல்லையென்றால் பார்பனியம் தம் தலையில் தானே மண்வாரிப் போட்டுக் கொண்டு கொட்டம் அடக்கப்பட்டுவிடும்.

இந்துத்துவ வியாதிகளே, பார்பனிய ஆதரவாளர்களே செயல்படுங்கள், நீங்கள் எப்படி செயல்பட்டாலும் முடிவில் அழிவை சந்திக்கப் போவது நீங்களே.

ராவணன் கருணாநிதி

ராமன்..... இந்திய அரசியலின் ஓட்டு வங்கியாக பார"தீய" சனதா கட்சியால் கண்டுபிடிக்கப் பட்ட வாக்கு எந்திரம். மக்களை பிரித்து அதில் மதத் துவேசம் வளர்த்து குடுமிகளை குண்டுபோட வைக்கும் கொடூர முகத்துக்கு சொந்தக்கார கட்சிகளின் அனாமதேய அரசியல் தலைவன்.

விஎச்பி எனப்படும் வெகுஜன விரோத கட்சியின் முன்னாள் எம்பி ஒன்று கருணாநிதியின் தலைக்கு எடைக்கு எடை தங்கம் தரத் தயாராக இருக்கிறதாக அறிவித்துள்ளது. ஜந்துக்கள் காலம் கூட மலையேறிவிட வேண்டும்.

முதலில் கலைஞரின் தலைக்கு விலைவைக்கும் மடையர்களுக்கு ஒரு கேள்வி அது கலைஞருக்கு மட்டும் சொந்தமானதில்லை மூடர்களே. தமிழ் பேசும் எல்லா மக்களுக்கும் சொந்தமானது, அப்படி இருக்க கலைஞரின் தலைக்கு எந்த முகாந்திரத்தில் விலை வைத்தீர்கள். கதாசிரியர், அரசியல் தலைவர், ஆளுங்கட்சி தலைவர், சினிமா பாடல் ஆசிரியர், இலக்கியவாதி என பல தலைகளுக்கு சொந்தக் காரர்தான் கலைஞர். அவரின் மொழிகேட்டு வளர்ந்த கோடிக் கணக்கான உலகத் தமிழர்களுக்கும் ஒரு விலை வைக்கவேண்டும் அதுதான் கருணாநிதியின் உண்மையான விலையாக இருக்க முடியும் அதை விடுத்து வெறும் கருணாநிதியின் தலையை வைத்து என்ன செய்ய போகிறீர்கள்.

நீங்களே சொல்வது போல பத்து தலை கொண்ட ராவணன் கருணாநிதி என்றால் கூட அதன் ஒற்றைத் தலைகூட அவருக்கு சொந்தமில்லை..மக்களுக்காய், தமிழுக்காய், தமிழனுக்காய் அயராது உழைக்கும் அந்த தலை தமிழினத்தின் தலையாய சொத்து. அதை விடுக்க கலைஞருக்கே உரிமை இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா மூடர்களே?

ராமன் இல்லை என்பது இந்துக்கள் மனசை புண்படுத்துவதாக இருப்பின் எந்த பொதுஜன இந்துவும் "உங்கள் ராமனை அடிவருடும் கட்சி தலைவர்களை தவிர" வெளியில் வந்து போராட வில்லையே ஏன்? உண்மை சுடும் என்பது உங்களுக்கு ஏன் இன்னும் தெரியாமல் இருக்கிறது?. தமிழனுக்கு ஒரு விலைவைத்தால் அதுதான் கருணாநிதியின் விலை என்பதைக் கூட தெரிந்து கொள்ள முடியாத மூடர்களே மக்களுக்கான போராட்டமாக எதையாவது என்றைக்கு செய்து தொலைக்கப் போகிறீர்கள்? ராமன் இல்லாத அரசியல் பூச்சாண்டிகள் என்றைக்கு உங்கள் கூட்டத்தில் உண்டாகும்?. அனுசக்தி ஒப்பந்த விசயத்தில் கூட உங்கள் எதிர்ப்பு இல்லையே இந்த அளவுக்கு. உங்களுக்கு ராமன் மேல் ஏன் இத்தனை பற்று?.

தமிழகத்தில் எந்த காலமும் உங்களால் காலடி வைக்க முடியாது என உண்மை தெரிந்து போனதால் இந்த கோபமா? ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் திராவிடம் இல்லாத அரசியலை தமிழகத்தில் விதைக்க முடியாது என்பதால்தானே மடையர்களே இன்றைக்கு வந்த விசயகாந்து கூட திராவிடத்தை சேர்த்தார் பெயரில் மட்டுமாவது?.

தனது மதசார்பின்மை முகத்தை காவிக் கோவனம் மறைக்க "திருவள்ளுவர் எந்த கல்லூரியில் படித்தார் என்ற கேள்வியை கேட்டு நானும் இந்துதான் பிஜேபியோடு கூட்டு வைக்க எந்த தடையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லும் விசயகாந்துக்கு ஒரு கேள்வி. நீ தமிழனா? எந்த காலேஜில் தமிழ் படித்தாய். மொழி சார்ந்த விசயங்களையும் நம்பிக்கை சார்ந்த விசயங்களையும் எந்த வித்யாசமும் இல்லாமல் கேள்வி கேட்கும் விசயகாந்துக்கு ஆட்சியை அள்ளிக் கொடுத்தால் அடக் கண்றாவியே.... என்றல்லவா இருக்கும்?. இதில் வளர்கிறாரம். கட்சிக்கு என்ன காம்ப்ளான் சப்ளையா செய்கிறார்?

தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்க்கோர் குணமுண்டு என்பதை வாளெடுத்துதான் மெய்ப்பிக்க வேண்டும் என்றால் நாங்கள் அதற்கும் தயார்தான் வரிசையாக வாருங்கள் முண்டங்களே.... உங்களின் ராமக் குறிகள் எங்கள் குறிகளாய் இருக்கும்.

ராமன் இருந்ததை வரலாற்று ரீதியாக தொல்லியல் ரீதியாக விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க முடியாத கோழைகள் நீங்கள் என்பது உலகத்தமிழனுக்கு தெரியும் என்பதாலேயே அவரின் சொற்கள் உங்கள் மனசை காயப் படுத்திவிட்டதாக "பத்துவா" தருகிறீர்கள் உங்களுக்கு மனசு எங்கேயடா இருக்கிறது? பாதிரியார் ஸ்டெய்ன்ஸ் கொலைசெய்யப் பட்டபோது எங்கே போனது உங்கள் மனசு? குஜராத்தில் கிழிக்கப் பட்ட முஸ்லிம்களின் குடல் தொங்கியபோது எங்கே போனது உங்கள் மனசு?, பாபர் மசூதி இடிக்கப் பட்ட போது எங்கே போனது உங்கள் மனசு? ராமனின் பேரையும் சீதையின் பேரையும் சொல்லி கொலைகள் செய்யும் உங்களுக்கு மனசு இருக்கிரதா என்றே எங்களுக்கு சந்தேகம் இருக்கிறதே?

முதலில் உங்களுக்கு மனசு இருக்கிறதா இல்லையா என்று ஒரு மருத்துவ சான்றிதழ் கொண்டு வாருங்கள் பிறகு பார்க்கலாம் ராமன் இருந்தானா இல்லையா என்று. ஃபத்வா யாருக்கு வழங்கப் பட வேண்டும் என்று..

கங்கைமேல் கட்டப்பட்ட பாலங்களை இடிப்போம்!!

திடீர்னு நம்ம யாகூ குரூப்புக்கு ஒரு இமெயில். ராமன் கட்டின பாலத்துக்கு ஆபத்து காப்பாத்த குரல் கொடுங்கன்னு. அடப்பாவிங்களா இப்ப எல்லாம் பாலத்துக்கு நேரமே சரி இல்லையோன்னு அந்த தளத்துக்கு போனேன். http://ramsethu.org/

ராமன் என்னைக்கு செங்கல் சுமந்து சூத்திர வேலை எல்லாம் செஞ்சாருனு யோசிச்சிகிட்டே அந்த சைட்ட போய் பார்த்தேனுங்க. சைட்ட உருவாக்கினவா யாருனு பார்த்தா, நம்ம என். ஆர். ஐ பசங்க. அவங்க எல்லாம் மெத்த படிச்ச பசங்க.. என்னோட அறியாமய கண்டு பாவப்பட்டு என் 'டவுட்'ஐ கிளியர் பண்ணுவாங்கனு நினைக்கிறேன்.

ராமன் கட்டின பாலத்த சேதப்படுத்த கூடாதுன்னு சொல்லுறது சரிதானுங்க. அதே மாதிரி கங்கை ஆத்துல இருக்குற அம்புட்டு பாலத்தையும் இடிக்க சொல்லணுமுங்க. கங்கை சிவபெருமானோட தலைல இருந்து வந்தது இல்லையாங்க? அத எப்படி அணை கட்டி தடுக்கலாமுங்க ?

நீங்க அதுக்கு ஒரு வெப்சைட் போடணுமுங்க. அட்லீஸ்ட் அந்த புண்ணிய ஆத்துல பொணத்த போடக்கூடாதுனாவது நீங்க சொல்லணுமுங்க.

"remains of an ancient bridge built by Lord Rama, as described in the holy epic, Ramayana."

எங்க அனுமாரு பசங்களை ஏவிவிட்டு ராமரு கட்டினதா தான் கேள்விப்பட்டிருக்கேனுங்க. இப்ப தான் தெரியுது ஏன் இந்த பாலம் முங்கி போச்சுனு. என்ன கேவலமான 'கன்ஸ்ட்ரக்சனுங்க' இது. கடவுள் ராமனாலயே ஒரு பாலத்த உருப்படியா - காலாகாலத்துக்கு யூஸ் பண்ற மாதிரி - முங்காமா இருக்குறமாதிரி கட்ட முடியல! ஒரு பாலத்தக் கூட ஒழுங்கா கட்ட முடியாதாவரெல்லாம் ஒரு கடவுளானு ISIட்ட காசு வாங்குன பசங்க கேக்கமாட்டானுங்க?

பொண்டாட்டிய பத்திரமா பார்த்துக்க தெரியல, தம்பிய சமாதானபடுத்த முடியல, ஒரு குரங்கு கூட்ட தலைவன நேர்மையா எதிர்க்க முடியல, இப்ப ஒரு பாலத்த உருப்படியா கட்டமுடியலைன்ற கெட்ட பேரு வேற....

"environmental impact" சரிதானுங்க. இதனால கொஞ்ச பாறை, மீன், பவளம் எல்லம் அழியப்போகுதுங்க. ஆனா பாருங்க, நர்மதைல அணை கட்டுற ப்ராஜெக்ட்ல எல்லாம் லெட்சம் பேரு ஊரை விட்டு கிளப்பணும், ஆயிரக்கணக்கான மரத்தை வெட்டணும்... இன்னும் எம்புட்டோ பெரிய பிரச்சினை எல்லாம் அதுல இருக்குங்க. அதுக்கு எல்லாம் ஏனுங்க நீங்க அடக்கி வாசிக்கிறீங்க?

"Ram Sethu is as holy to Hindus as the Western Wall is to the Jews, the Vatican to Catholics, Bodh Gaya to the Buddhists and Mecca to Muslims,"

இதுவரை நீங்க சீரியசா சைட் போட்டிருக்கீங்கனு நெனச்சு டைம் வேஸ்ட் பண்ணிட்டேனுன்க. உலகத்துல ரெம்ப ரெம்ப பழமையான மதத்துக்கு இப்பதான் அதோட புண்ணியதலமே தெரியுதாங்க?

சரி நம்ம எதாவது செய்யலாம்னு 'கான்ட்ரிப்யூட்'னு கிளிக் பண்ணினா, தட்சணை தான் கேக்குறாங்க. அதுவும் மெயில்ல அனுப்பலாமாம், போன்ல அனுப்பலாமாம், ஆன்லைன்ல அனுப்பலாமாம்.... காசக் குடுக்காம 'கான்ட்ரிப்யூட்' பண்ண முடியாதாங்க?

- பிரகாஷ் (jaya.v.prakash@gmail.com)

பொய் விஞ்ஞானிகளும் சங்பரிவாரத்தின் ராமர் பால கூச்சலும்

சேது சமுத்திரத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS க்கு 2 வருடங்களாக உதவிய வின்னியல் விஞ்ஞானி இன்று பொய்யர் என அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு நலம் பெறும் இத்திட்டத்திற்கு எதிராக சங்பரிவார RSS ன் பித்தலாட்டமான விவாதத்தை போன்றே மேற்படி விஞ்ஞானியின் செயலும் ஒத்திருக்கிறது.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் புனீஸ் தனேஜா என்ற இப்போலி விஞ்ஞானியை தோலிருத்துக் காட்டியபின் சங்பரிவார RSS தனது அமைப்பின் பிரச்சாரகர் பணியிலிருந்து புனீஸ் தனேஜா வை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. பொய்யான தகுதிகளோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட மேற்படி நபர் சங்பரிவார RSS ன் தலைவர் சுதர்சனன் வரை செல்வாக்கு பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.

இவர் தனக்குத் தானே டாக்டர் பட்டம் சூட்டிக்கொண்டது மட்டுமல்லாமல் “Senior Research Scientist/Additional Secretary, Department of Space, Prime Minister’s Office, South Block, New Delhi.” என்று போலியாக இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டையுடன் வலம் வந்துள்ளதையும் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர் பயன்படுத்திய பொய்யான அடையாள அட்டை இதோ

VHP தலைவர் அசோக் சிங்கால் அறிமுகப்படுது்திய விஞ்ஞானியின் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) முத்திரையுடன் கூடிய போலி அடையாள அட்டை

இப்போலி விஞ்ஞானி புனீஸ் தனேஜா, தான் ISRO வில் பணியாற்றுவதாகவும் 2 வருட பணிவிடுப்பில் உள்ளதாகவும் கூறி சங்பரிவார RSS ல் இணைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் இதுபோன்ற ஆவனங்களோடு பல நபர்களை RSS தன்னோடு இணைத்திருப்பதால் புனீஸ் தனேஜா வின் இச்சம்பவம் சங்பரிவாரிடையே மிகுந்த பீதியைக் கிளப்பியிருக்கிறது. இவர் RSS இயக்கத்திற்கும் UPA அரசுக்கும் பாலமாக செயல்பட்டவரோ என்றும் சந்தேகிக்கின்றனர்.
கடந்;த 2005 ம் ஆண்டு RSS வெறி இயக்கத்தில் முழு நேர பிரச்சாரகராக தன்னை இணைத்துக்கொண்ட இவர் நொய்டா நகர் RSS ல் பணியாற்றியவர் என்பதும்; குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பின் (ISRO) மேலாளர் திரு S.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதலுக்கு பேட்டி அளிக்கையில் 'ISRO க்கும் மேற்படி நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவரைப்பற்றி நாங்கள் கேள்விபட்டது கூட இல்லை. வின்வெளி ஆய்வுத்துறையின் துணைச் செயலாளராக பணியில் இருப்பவர் ஒரு I.A.Sஅதிகாரியாவார். திரு S.V ராகநாதன் என்ற அந்த அதிகாரி தற்போது பெங்களுரில் உள்ளார். மேலும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் இந்திய வின்வெளி ஆய்வுக் கூட்டமைப்பிற்கும்; (ISRO) எந்தத் தொடர்பும் இல்லை". எனக் கருத்துத் தெரிவித்ததார்.

தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் தனேஜாவை அவரது இல்லத்தில் சந்தித்து நீங்கள் பிரதமர் அலுவலக அதிகாரியாக ஏன் காட்டிக்கொண்டீர்கள்? என வினவுகையில் அதை மறுத்த தனேஜா தான் அவ்வாறு நடந்துகொண்டதில்லை என்றும் மேலும் தான் சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் உள்ளதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் தங்களின் வாழ்வில் ஒரு குறிக்கோள் உண்டு, சேது சமுத்திரத் திட்டம் எனது குறிக்கோள் என்று கூறிய தனேஜா சேது சமுத்திரத் திட்டத்தைப்பற்றி அசோக் சிங்காலுடன் தான் அளித்த நிருபர்கள் பேட்டியின் போதுதான் மக்கள் மன்றத்திற்கு தான் முதல்முதலாக வந்ததாகவும், தலைவர் ராம் மாதவனிடம் பாதுகாப்பு கோரியதாகவும் தெரிவித்தார். மேலும் நான் விஞ்ஞானி அல்ல, பூமிக்கடியில் சுரங்க வழிப்பாதையைப் பற்றிய ஆய்வு செய்பவன் என்று கூறிய அவரிடம், அவரின் கல்வித்தகுதியைப் பற்றி கேட்டதற்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன் தனேஜா VHP தலைவர் அசோக் சிங்காலுடன் இணைந்து பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் கலந்துகொண்டார். அப்பேட்டியில் ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாகக் கண்டித்த அசோக் சிங்கால், சேது சமுத்திரத்தில் இராமர் பாலம் ஏதும் இல்லை என்று அரசு அளித்த அறிவியில் பூர்வமான ஆதாரங்கள் அனைத்தையும் மறுத்தார். மேலும் இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்றும் VHP யும் RSS ம் அரசை வற்புறுத்துவதாகவும் பேட்டியளித்தார்.
தி சன்டே எக்ஸ்பிரஸ் நாளிதல் RSS செய்தித்தொடர்பாளர் ராம் மாதவிடம் தொடர்பு கொண்டு தெனேஜா பற்றி கேட்டதற்கு அவர் ஒரு RSS பிரச்சாரகர் என்றார். தெனேஜா செய்த ஏமாற்று வேலை பற்றி கேட்டதற்கு RSS இயக்கத்திற்கு வெளியே அவரின் சில நடவடிக்கைகள் பற்றிய புகார்கள் எங்களுக்கும் வந்துள்ளது. அத்தகைய புகார்கள் அவரை RSS இயக்கத்தின் பிரச்சாரகர் பதிவியிலிருந்து நீக்கத் தகுந்தவைகள் என RSS தலைவர்கள் கருதுகிறார்கள் என்றார்.

திட்டப் பணி

சேது சமுத்திரத்திட்டம் என்பது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலுள்ள சேது சமுத்திரத்தில் 167 கிலோமீட்டர் தூரத்திற்கு கப்பல் செல்லும் அளவிற்கு ஆழப்படுத்தும் பணியாகும். இதனால் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய கடல் பயணத்தில் இலங்கையைச் சுற்றி செல்லும் நிர்பந்தம் இல்லாமல் போய்விடும். மேலும் 30 மணி அளவிற்கு பயணம் நேரம் குறையும்.

பொய் விஞ்ஞானிகள்

இலங்கையிலிருந்து சீதையை மீட்பதற்காக ராமன் கட்டிய பாலத்தை அழிக்கக்கூடாது என்றும் இத்திட்டத்தின் பாதையை மாற்றியமைக்க வேண்டும் என்று RSS ம் VHP யும்; கோருகிறது. மேலும் இதை உலக கலாச்சாரச் சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.

அறிவியல் உண்மை

பூலோக ஆய்வின்படி சேது சமுத்திரத்தின் உள்ளே இருப்பது யாரும் உண்டாக்கிய (ராமர் பாலம்) அல்ல மாறாக களிமன், கற்பாறைகள் மற்றும் சுண்ணம்புக் கற்களின் படிவங்களால் இயற்கையாக உண்டானவையே உள்ளது. இப்படிவத்தை நாஸா வின்வெளிக் கழகம் டோமோபோலோ என்கிறது. அதாவது சாதாரணமாக ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவை இணைக்கும் மண்ணாலான பாலப் படிவுகள் எனப்படும்.

நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்